தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள்வேங்கைவயல் போன்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் தொடர்ச்சியாக தஞ்சாவூரில் பட்டியலினத்துவருடன் திருமணம் செய்த மகளை ஆவண கொலை செய்துள்ளார்கள் அவரின் குடும்பத்தார். இச்சம்பவம் பெரும் பரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக இன்னும் தமிழகத்தில் எந்த ஒரு கட்சியும் வாய் திறக்கவில்லை.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஏழை, எளிய மக்கள் மீது மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருகின்றன.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, நெய்வவிடுதியை சேர்ந்த பெருமாள் மகள் ஐஸ்வர்யா, 19, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்தவர். அருகில் உள்ள கிராமமான பூவாளூரை சேர்ந்த, பாஸ்கர் மகன் நவீன் 19, டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்.
திருப்பூர் மாவட்டம், அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் இருவரும் பணியாற்றினர். இந்நிலையில், டிசம்பர் 31ம் தேதி, நண்பர்கள் முன்னிலையில், அவர்கள் திருமணம் செய்து, வீரபாண்டி அருகே, வாடகை வீட்டில் தங்கினர். அவர்கள் திருமணம் செய்து கொண்ட வீடியோ ‘வாட்ஸாப்’பில் பரவியது. இதை அறிந்த ஐஸ்வர்யாவின் தந்தை, பல்லடம் போலீசில் புகார் கொடுத்தார். விசாரித்த போலீசார், கடந்த 2ம் தேதி, ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், 3ம் தேதி, ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் கொலை செய்து, எரித்து விட்டதாக, நவீனுக்கு, நண்பர்கள் தெரிவித்தனர். இது குறித்து, வாட்டாடத்திக்கோட்டை போலீசில், நவீன் புகார் அளித்தார். நெய்வவிடுதி மற்றும் பூவாளூர் கிராமத்தில், போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள ஐஸ்வர்யாவின் தந்தையை தேடி வருகின்றனர்.
ஈ.வேரா சாதியை ஒழித்தார் என போஸ்டர் ஓட்டுபவர்கள் இதற்கு குரல் கொடுக்காமல் மௌனம் சாதிப்பது ஏனோ..
தென் மாவட்டங்களில் வன்முறைகளைத் தடுக்க அதிக அளவில் தொழிற்சாலைகளைக் கொண்டு வரவேண்டும் என நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்கள் பரிந்துரைத்தன.
நான்குனேரியில் பல நூறு ஏக்கா் நிலம் ஒதுக்கி தொழிற்சாலைகள் உருவாக்கப்படும் என முன்னாள் முதல்வா் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு தெரிவித்தது. ஆனால், இதுவரை அந்தத் திட்டம் செயல்படுத்தவில்லை. தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுத்து இனி போன்ற சம்பவங்கள் தொடரத வண்ணம் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஈ.வேரா சாதியை ஒழித்தார் என போஸ்டர் ஓட்டுபவர்கள் இதற்கு குரல் கொடுக்காமல் மௌனம் சாதிப்பது ஏனோ..