கள்ளகுறிச்சி மாவட்டம் திருக்கோவலூர் வட்டம் செட்டிதாங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை விளக்கும் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள செட்டத்தாங்கல் பகுதியில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விளக்கும் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஒபிசி(OBC) அணி மாநில துணைதலைவர் பெ
பெரோஸ்காந்தி கலந்து கொண்டு விளக்கி பேசினார்.
அப்போது பேசிய அவர்:
இந்த சட்டம் குடியுரிமையை வழங்கு வதற்கான சட்டம் என்பது எதிர் கட்சியினருக்கு நன்றாக தெரியும். இந்த சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது எனவும் அதில் சில திருத்தம் மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது என கூறினார். காங்கரஸ் ஆட்சியில் பழைய சட்டத்தில் 11 ஆண்டுகள் இந்தியாவில் இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது, அதனை குறைத்து 6 ஆண்டுகளாக செய்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும் இந்த திருத்த சட்டம் என்பது இந்தியாவில் வசிக்கும் எவருக்கும் பொருந்தாது எனவும் கூறினார்.
இந்த அனைத்தும் எதிர் கட்சியினரான் ஸ்டாலின், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு நன்றாக தெரிந்தும் அரசியல் ஆதாயத்திற்காக எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்.
உடன் விழுப்புரம் மாவட்ட தலைவர் கலிவரதன், கள்ளகுறிச்சி மாவட்ட தலைவர் பாலசுந்தரம், கள்ளகுறிச்சி மாவட்ட பொதுசெயலாளர்கள் ராஜேஷ்,கஜேந்திரன், மாவட்ட பொருளாளர்கண்ணன்,திருக்கோவலூர் கிழக்கு ஒன்றிய தலைவர் ராமன்,திருக்கோவலூர் மேற்கு ஒன்றிய தலைவர் முருகன்,முகையூர் மேற்கு ஒன்றிய தலைவர் தங்கராஜ்,இளைஞரணி மாவட்ட பொதுசெயலாளர் திருமால்,தகவல் தொழில்நுட்ப பிரிவு ஹரிகிருஷ்ணன்,ஒன்றிய நிர்வாகிகள் அரிகிருஷ்ணன்,பாடியந்தல் விஜயகுமார்,பழங்கூர் மணி,சித்தேரிராமதாஸ்,சுரேஷ்,ஜெகநாதன்,ராஜாஜி,ஏழுமலை,பழனிச்சாமி,கலைசெல்வி,மலர்கொடி,மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.