‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என்ற திட்டம், முதல் கட்டமாக 47 பிரசித்தி பெற்ற கோவில்களில் துவக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துஇருந்தது. வைஷ்ணவ கோயில்களில் மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் பாடிய திருப்பாவை அதிகாலை வேலையில் கம்பீரமாக ஒளிக்கும். ஏன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட மார்கழி மாதம் அதிகாலையில் திருப்பாவை பாடப்படும்.
மேலும் வைஷ்ணவ கோயில்களில் ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் தமிழில் பாடப்படுகிறது. அதே போல் சைவ கோயில்களில் மாலை நேரங்களில் திருவாசகம் பாடப்படுகிறது . முருகன் கோயில்களில் அருணகிரிநாதர் பாடிய பாடல்கள் பாடப்படுகிறது. அம்மன் கோயில்களில் தமிழ் பாடல்கள் ரீங்காரமிடுகிறது. கோயில்களுக்கு சென்று பார்த்தால்தான் இந்தப் பாடல்களை கேட்க முடியும்.
பல கோயில்களில் சமஸ்கிருதத்தில் அர்ச்சினை நடக்கிறது. பக்தர்கள்களால் சமஸ்கிருத அர்ச்சினைகள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இப்பொழுது திடீரென்று தமிழில் அர்ச்சனைகள் என்றால் பக்தர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். யாரும் கேட்காத நிலையில் தமிழக அரசு இது போன்ற செயல்களில் ஈடுபடுவது இந்துக்கள் மனதை புண்படுகிறது. சடங்கு சம்பர்தாயங்களில் அரசியல் செய்வது திமுகவின் அரசியலுக்கு எதிராக அமையும்.
‘சித்திரை 1 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அதை ஜனவரி 14 ஆம் தேதி என அறிவித்தார் முன்னாள் முதல்வர் கருணாநிதி அடுத்த தேர்தலில் படு தோல்வி அடைந்தது திமுக. தற்போது தமிழில் அர்ச்சனை என்பதும் அடுத்த தேர்தல்களில் எதிரொலிக்கும். மேலும் இதே போல் தமிழகத்தில் உள்ள இந்து முஸ்லீம் கிருஸ்துவ வழிபாட்டு தளங்களிலும் தமிழ் மொமொழியில் வழிபாடு நடத்த உத்தரவிட முடியுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















