மறக்க முடியுமா… கூவம் நதிக்கு முதலை,சர்க்கரைக்கு கரையான், என திமுக செய்த விஞ்ஞான ஊழல்களை.. மாஸ் காட்டிய அண்ணாமலை..

Annamalai

Annamalai

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் என் மண் என் மக்கள் நடைபயணம் பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதியில், நடைபெற்றது நடைபயணத்தில் பேசிய அண்ணாமலை திமுகவின் ஊழல்களை பட்டியலிட்டு பேசினார். மேலும் அவர் கூறியதாவது :

தமிழகத்தில் 1967 ஆம் ஆண்டிலிருந்து ஐந்து முறை ஆட்சியில் இருந்த திமுக அரசால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் எதுவுமே முன்னேறவில்லை. இன்றுவரை, மழைக்காலத்தில் வெள்ளக்காடாகத்தான் மாநிலத்தின் தலை நகரமே தத்தளிக்கிறது.

கடந்த 2023 டிசம்பரில், மிக்ஜாம் பெருவெள்ளத்தால் திருமழிசை சிப்காட் மூழ்கியது. ஆனால் இவற்றை எல்லாம் சரி செய்யாமல், இந்த ஜனவரி மாதம், முதலமைச்சர் ஸ்டாலின், கலைஞர் 100 விழா நடத்தி, பூந்தமல்லியில் 500 கோடி மதிப்பில் சினிமா நகரம் உருவாக்குவோம் என்று கூறுகிறார். மக்களுக்கு வடிகால், நல்ல சாலை என இவையெல்லாம் செய்யாமல், சினிமாவுக்கு 500 கோடி செலவு செய்கிறார். மக்கள் தேவைக்கு நேரெதிராக ஆட்சி நடக்கிறது என்பதற்கு இதுவே சான்று. குறிப்பாக, உதயநிதி தயாரிக்கும் திரைப்படங்களின் செலவைக் குறைக்க, மக்கள் வரிப்பணத்தில் சினிமா நகரம் அமைக்கிறது திமுக. சென்னை மாறவேண்டும். மக்கள் வாழ்வாதாரம் உயர வேண்டும்.

இந்தியா டுடே பத்திரிகையின் சர்வே, கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில், ஸ்டாலினை 61% மக்கள் ஏற்றுக் கொள்வதாகக் கூறினார்கள். ஆனால், நேற்று வெளிவந்த சர்வே முடிவுகளில், 36% மக்கள் தான் முதலமைச்சர் ஸ்டாலினை மதிக்கிறார்கள். நம் கண் முன்னால், பெங்களூர், மும்பை, டெல்லி என நாட்டின் நகரங்கள் அனைத்தும் அடுத்த கட்டத்திற்குச் செல்கின்றன. அங்கிருக்கும் பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் நகரங்களை முன்னேற்ற உழைக்கின்றனர். ஆனால் சென்னை பின்நோக்கிச் செல்கிறது. சென்னையில் வளர்ச்சி இல்லை.

நாட்டின் தூய்மை நகரங்களின் வரிசையில், சென்னை, நாட்டில் 199 ஆவது இடத்தில் இருக்கிறது. சென்னையில் 88% குப்பை மறுசுழற்சி செய்யப்படாமல் அப்படியே இருக்கிறது. மழை வந்தால் இதனால் சென்னை முழுவதுமே பெரிதும் பாதிக்கப்படுகிறது. காரணம், சென்னையின் பாராளுமன்ற உறுப்பினர்கள். எந்தத் தகுதியுமே இல்லாமல், வாரிசு கோட்டாவில் பதவிக்கு வந்தவர்கள். முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன், தங்கம் தென்னரசுவின் அக்கா தமிழச்சி தங்கபாண்டியன், ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி. இவர்களுக்கு மக்களின் கஷ்டம் எப்படி தெரியும். சென்னை மழையால் தத்தளித்தபோது, இவர்களில் ஒருவர் கூட களத்தில் இல்லை.

இன்று தமிழகத்தில் 8,000 பேருந்துகளை, ஓட்டுநர்கள் இல்லாமல் நிறுத்தியிருக்கிறார்கள். இதனால் அவதிக்குள்ளாவது சாதாரண பொதுமக்களே. சாதாரணமாக ஒரு திட்டத்தைச் சென்னையில் செயல்படுத்த பத்து ஆண்டுகள் ஆகின்றன. ஆட்சி மாறும்போதெல்லாம் கமிஷனுக்காக, மீண்டும் முதலில் இருந்து பணிகளைத் தொடங்குகிறார்கள்.

இந்தியாவின் மற்ற மாநிலங்கள் எல்லாம் பல மடங்கு முன்னேறி வருகின்றன. ஆனால், சென்னை, குடும்ப அரசியலை நம்பி ஏமாந்து, தத்தளித்துக் கொண்டிருக்கிறது.திருமழிசையில் பேருந்து நிலையம் கட்டப் போவதாக 2021 ஆம் ஆண்டு அறிவித்தார்கள். தனது துறைக்குச் சம்பந்தமே இல்லாத அமைச்சர் சேகர்பாபு 80% பேருந்து நிலையப் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், 2023 ஜூன் மாதம் திறக்கப் போவதாகவும் அறிவித்தார். இன்னும் அந்தப் பணிகள், 50% கூட முடியவில்லை. ஆமையை விட மெதுவாக பணிகள் நடத்துகிறார்கள். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருக்கும் பேருந்துகளை விட தினம் ஒரு பிரச்சினை என்று ஆர்ப்பாட்டம் நடப்பதே அதிகமாக இருக்கிறது.

திமுகவினர், மத்திய அரசு வரி கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். திமுகவுக்குக் கொடுக்கவில்லை. அவை அனைத்தும் பல்வேறு திட்டங்கள் வாயிலாக மக்களுக்கு நேரடியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் 71,532 பேருக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மூலமாக கான்கிரீட் வீடு, ஜல் ஜீவன் திட்டம் மூலம் 4,61,655 வீடுகளில் குழாய் மூலம் குடிநீர், 1,91,890 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,13,124 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 14,621 பேருக்கு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 72,851 விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் சம்மான் நிதியின் மூலமாக வருடத்திற்கு ரூ.6000, திருவள்ளூர் மாவட்டத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட முத்ரா கடன் உதவி 6,228 கோடி ரூபாய் என லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளார்கள்.

திமுகவுக்கு மத்திய அரசு நேரடியாக நிதி கொடுத்தால் என்ன செய்வார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். கூவம் நதியை சுத்தம் செய்வேன் என்று கூறிக் கொள்ளையடித்துவிட்டு, முதலை இருப்பதாகக் கூறியது, சர்க்கரையில் ஊழல் செய்துவிட்டு, எறும்பு தின்று விட்டதாகவும், சாக்கு மூட்டைகளை கரையான் அரித்து விட்டதாக கூறி திமுக செய்த விஞ்ஞான ஊழல்களை மக்கள் அத்தனை எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.

மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை 32% இருந்ததை, 42% ஆக உயர்த்தியிருக்கிறார் நமது பிரதமர். கடந்த 2004 – 2014 காலகட்டத்தில், திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு, தமிழகத்திற்கு வழங்கிய வரிப் பங்கீடு ரூ. 94,977 கோடி மட்டுமே. 2014 – 2024, பத்து ஆண்டுகளில், பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு வழங்கிய வரி பங்கீடு ரூ.2,77,444 கோடி. 192% அதிகமாக தற்போது வழங்கப்பட்டுள்ளது. 2004 – 2014 வரை தமிழகத்திற்கு வழங்கிய உதவித்தொகை ரூ. 57,924.42 கோடி மட்டுமே. 2014 – 2023 ஒன்பது ஆண்டுகளில், தமிழகத்திற்கு வழங்கிய உதவித்தொகை, ரூ.2,30,893 கோடி. 300% அதிகமாக தற்போது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில், தமிழகத்திற்கான திட்டங்கள், உதவித் தொகை மற்றும் நிதி பங்கீட்டின் மதிப்பு, ரூ.10.76 லட்சம் கோடிக்கும் மேல். தமிழகத்தின் நேரடி வரிப் பங்களிப்பான ரூ.5.16 லட்சம் கோடியை விட இரண்டு மடங்கு அதிகமாக தற்போது வழங்கியிருக்கிறார் நமது பிரதமர். திமுகவின் பொய்களை இனியும் நம்பி ஏமாற மக்கள் தயாராக இல்லை.

நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள், நகரங்களில் அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளில், வீட்டுக்கு வீடு குழாய் மூலம் சமையல் எரிவாயு இணைப்பு, 100% வீடுகளுக்கு குழாயில் சுத்தப்படுத்தப்பட்ட குடிநீர், ஒவ்வொரு வீட்டிற்கும் சூரிய ஒளி மின்சார திட்டம் மூலம் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்படவிருக்கும் திட்டங்களை அறிவித்துள்ளார். வரும் பாராளுமன்றத் தேர்தலில், வளர்ச்சி அரசியலை முன்னெடுக்கும் நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கரங்களை வலுப்படுத்துவோம். தமிழகம் முழுவதும், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம். தமிழகத்தின் வளர்ச்சியை பல மடங்கு கொண்டு செல்வோம்.

Exit mobile version