தி.மு.கவின் ஆதரவாளர் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா இவரது மகன் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர். அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும் போது பல்வேறு போராட்டங்களை நடத்தி திமுகவின் நிலைப்பாட்டை எடுத்தவர் தான், இந்த விக்கிரமராஜா அவர்கள்.
மேலும் விக்கிரமராஜா இந்து வியாபாரிகள் தொடர்பான பிரச்சனைகளில் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவருக்கு வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.வேண்டுமென்றே கிருஷ்ண ஜெயந்திக்கு முந்தைய நாளில் போராட்டம் அறிவித்து பின் வியாபாரிகளின் எதிர்ப்பாலும் இந்து மக்களின் எதிர்ப்பால் போராட்டத்தை கைவிட்ட சம்பவம் நடந்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் கொரோன கட்டுப்பாடுகளுக்கு கடைகளை அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் அதை எதிர்த்து போராட்டம், கஞ்சி தொட்டி திறப்பு என பல நாடகங்களை நடத்தினார். தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று லாக் டவுன் போடும் போது அதை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றார், விக்கிரமராஜா இவ்வாறு தி.மு.க வின் முகமாக முழுவதுமாக மாறினார் விக்கிரமராஜா!
தமிழக வணிகர் சங்க பேரவையின் நெல்லை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அச்சங்கத்தின் தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா:
தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை புரையோடியுள்ளது. இளைஞர்கள் கஞ்சாவிற்கு அடிமையாகி உள்ளனர். கலாச்சாரம் சீரழிந்துள்ளது. இதனை தடுக்கவும், போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை கட்டுபடுத்தவும், கடுமையான சட்டவிதிகளை அமல் செய்து இரும்பு கரம் கொண்டு அரசு அவர்களை அடக்க வேண்டும்.
ஆன்லைன் வர்த்தகங்களை தடை செய்ய வேண்டும். உள்நாட்டு வர்த்தகத்தை சீரழிக்கும் அனைத்து வர்த்தகத்தையும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எதிர்க்கிறது.வணிக நிறுவனங்களில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபடும்போது தடை செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே பறிமுதல் செய்ய வேண்டும்.விற்பனைக்கு அனுமதி உள்ள மற்ற பொருட்களையும் காவல்துறையினர் எடுத்துச் செல்கின்றனர்.இதனை அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் பெருநகரங்களில் நடந்துவரும் மாற்று திட்டப் பணிகள் 3 ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருவதால் வியாபாரிகள் மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்தினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.திட்டமிட்ட காலத்திற்குள் ஸ்மார்ட்சிட்டி பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, காய்கறி சந்தைகள் பெரிய மைதானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. தற்போது மழைக்காலம் நெருங்குவதால் மீண்டும் பழைய இடங்களிலேயே கடைகளை நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விக்கிரமராஜா கூறினார்.
.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















