பிரதமரை பீஸ் பீஸ் ஆக்கிடுவேன் என கடந்த வாரம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசிய நிலையில், டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுகவினர் பேச்சுக்கள் என்பது எல்லை மீறுவது என்பது இப்போது ஆரம்பித்தது இல்லை கருணாநிதி தொடங்கி இன்று உதயநிதி வரை அப்படியேதான் உள்ளது. நாடாவை அவிழ்த்து
எமர்ஜென்சி நிலை அறிவித்திருந்த வேளையில் அப்போதைய பிரதமர் இந்திரா, தி.மு.க.ஆட்சி கலைக்கப்பட்டது அப்போது தமிழக முதல்வரா இருந்தவர் கருணாநிதி. அடுத்து 1979ல் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திராகாந்தி பங்கேற்றார். ஆட்சியை கலைத்த இந்திராவிற்கு எதிராக கருப்பு கொடி காட்டிய தி.மு.க வின்உடன்பிறப்புகள் இந்திரா காந்தி மீது கற்களை வீசினர். நெற்றியில் காயம்பட்டு ரத்தம் வந்த நேரத்தில் கருணாநிதி என்ன சொன்னார் தெரியுமா. ‘அம்மையாருக்கு மாதவிலக்காய் இருந்திருக்கும், அதனால் வந்த ரத்தம் போலிருக்கிறது’ என தரம் தாழ்ந்து பேசினார்.
கருணாநிதி ஆட்சியில் பெண் எம்.எல்.ஏ. அனந்தநாயகி ஒரு கேள்வி கேட்கிறார். ‘எங்கே இருக்கிறது திராவிட நாடு’ என்று. அதுக்கு ஒரு முதல்வராக கருணாநிதி சொன்ன பதில், அநாகரிக வரலாற்றில் பதிவு செய்ய வேண்டிய அளவுக்கு மோசமாக இருந்தது. ‘நாடாவை அவிழ்த்து, பாவாடை துாக்கினால் திராவிட நாடு தெரியும்’ என்றார் தி.மு.க., கழக பேச்சாளர் வெற்றி கொண்டான், முதல்வராக இருந்த ஜெயலலிதாவை, ‘இனி குழந்தை பெறுவது சாத்தியமா?, அவருக்கு பல பாஷை தெரியும். ஏனெனில் தொழில் அப்படி’ என விமர்சித்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி பெண்களின் இடுப்பை ஆபாசமாக விமர்சித்தார். தி.மு.க., ஆதரவாளர் வைரமுத்து ஆண்டாளை இழிவாக பேசினார். பெருமையை தரணிக்கு காட்டினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் – ஜெயலலிதா- மோடி பற்றி பேசிய போது அவளும் நோக்கினால் – அண்ணலும் நோக்கினால் என பேசிய வரலாறு தான் தமிழகம் மறக்குமா. இது போன்ற பல வரலாறுகள் உள்ளது
இந்நிலையில் சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடி, திமுக ஊழல் கட்சி. அது தமிழகத்தில் இருந்து திமுக விரைவில் காணாமல் போகும் என பேசி இருந்தார். அதற்கு பதில் கூறுகிறேன் என நினைத்து வரம்பு மீறி பேசியுள்ளார் தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன், ‛‛எவ்வளவோ பிரதமரை நான் பார்த்துள்ளேன். ஆனால் இவ்வளவு மட்டமாக பேசிய பிரதமரை நான் பார்த்து இல்லை.
திமுகவை ஒழிச்சிடுவேன் என்று சொல்கிறார். நான் ஒன்றை ஒன்றை சொல்லி கொள்கிறேன். திமுக என்பது சாதாரண இயக்கம் இல்லை. பல பேர் உயிர் தியாகம் செய்து வளர்ந்த இயக்கம். யார் யாரோ ஒழிஞ்சிவிடும் என கூறினார்கள். ஆனால் அவர்கள் தான் ஒழிந்துபோய்விட்டனர். இந்த இயக்கம் அப்படியே தான் உள்ளது. நான் அமைச்சர் என்பதால் அடக்கி வாசிக்கிறேன். இல்லாவிட்டால் பீஸ் பீஸாக ஆக்கிவிடுவேன்” என பேசினார்.
அமைச்சர் அன்பரசனின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்ததாக தமிழக அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது டெல்லி போலீசார் 5 பிரிவுகளில் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.