மத்திய அரசுக்கும், ட்விட்டர் நிறுவனத்துக்கும் இடையே பெரும் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் இந்தியாவில் ட்விட்டர் பறக்க ஆசை இல்லை போல தெரிகிறது. ட்விட்டரிலுள்ள உள்ள மேப் ஒன்றில் ஜம்மு & காஷ்மீர், லடாக் பகுதிகளை இந்தியாவின் ஒரு அங்கமாகக் காட்டாமல் வேறு ஒரு நாடாகக் காட்டியுள்ளது புதிய சர்ச்சையைக் கிளப்பியது. ட்விட்டர் தளத்தில் Tweep Life என்ற செக்ஷனில் தான் ஜம்மு & காஷ்மீர் இப்படித் தனி நாடாகக் காட்டப்பட்டு இருந்தது.
சென்ற வருடம் இதே தவறை செய்து – ஜம்மு காஷ்மீர் லடாக்கை சீனாவின் பகுதிகளாக காட்டி – மன்னிப்பு கேட்டது. இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் பஜ்ரங்தள் தலைவர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ட்விட்டர் இண்டியாவின் தலைமை நிர்வாகியான மனீஷ் மஹேஷ்வரி மீது வழக்கு பதிவு செயப்பட்டது !ஏற்கனவே போலி செய்தி வெளியிட்டு மத கலவரத்தை தூண்ட முயற்சித்த விவகாரத்தில் ட்விட்ட இண்டியா (மனீஷ் மஹேஷ்வரி) மீது வழக்கு பதியப்பட்டது. முன் ஜாமீன் வாங்கியிருக்கிறார்
இந்த நிலையில் மேலும் ஒரு புகார் ட்விட்டர் இந்தியா மீது பதியப்பட்டுள்ளது. இது பாலியல் குற்றம் சம்பந்தப்பட்டது. தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் சார்பில் ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் ட்விட்டர் இந்தியா மீது போஸ்கோ சட்டம் பாய்ந்துள்ளது .
ட்விட்டர் சமூக தளத்தில் தொடர்ச்சியாக குழந்தைகளைக் கொண்டு உருவாக்கப்படும் ஆபாசப் படங்கள் பதிவேற்றப்படுகின்றன என புகார் எழுந்த நிலையில் . இந்த நிலையில், ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது டெல்லி போலீஸின் சைபர் க்ரைம் பிரிவு போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுதொடர்பாக சைபர் குற்றப் பிரிவின் உயரதிகாரி ஆணையத்தின் முன் ஆஜராகும்படியும் எச்சரித்துள்ளது.
ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருக்கும் வேளையில் ட்விட்டர் இந்தியா மீது போக்ஸோ சட்டமும் பாய்ந்துள்ளது ட்விட்டர் நிறுவனத்திற்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, மத்திய அரசு அறிவித்த புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகளுக்கு ட்விட்டர் உட்பட்டு வராத நிலையில் ட்விட்டர் நிறுவனம் பெற்றுள்ள சட்டப் பாதுகாப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















