ஜெய்பீம் படம் மிகப்பெரும் அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியதற்கு படத்தில் ஒரு காட்சியில் வரும் காலண்டர் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என நினைத்துவிட கூடாது அது வன்னிய சமுதாயத்தை குறிவைத்து எடுக்கப்பட்ட படம் என ஆதரங்களோடு புட்டு புட்டு வைத்துள்ளார் சமூக ஆர்வலர் மாரிதாஸ். ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்தும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. இயக்குநர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா மீது தமிழகம் முழுவதும் வழக்குகள் தொடரப்பட்டன.
ஒரே ஒரு காட்சியால் படமே தவறு என சொல்வது எப்படி நியாயம் என திருமா,திமுக போன்ற கட்சிகள் இயக்குனர் பாரதி ராஜா திரையுலக சூப்பர்ஸ்டார் கருணாஸ்,சூரி, சொம்பு ஊடகங்கள் என பல பேர் போன்றவர்கள் சூர்யாவுக்கு துணைநின்றார்கள். ஆனால் வன்னிய சமுதாய மக்கள் இளைஞர்கள் ஒரே புள்ளியில் இணைந்தார்கள். இதனால் ஜெய் பீம்க்கு நெருக்கடி அதிகரித்தது. மேலும் அக்கினி கலசத்துடன் வைக்கப்பட்ட அந்த காலண்டர் திட்டமிட்டு தான் வைத்தார்கள் என்பதை தகுந்த விளக்கத்துடன் சூர்யாவின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளார் மாரிதாஸ். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்
“1.05 நிமிடத்தில் வரும் இந்த காட்சியில் ஒரு மெடிக்கல் (மருந்தகம்) வருகிறது. இதில் woodwards gripe water calendar வருகிறது. மெடிக்கல் என்பதால் woodwards gripe water 1995களில் பிரபலம் என்பதாலும் இந்த காட்சியில் இந்த காலண்டர் வைத்துள்ளனர். இதுவும் சரி! அடுத்து
“1.24 நிமிடத்தில் மூத்த வழக்கறிஞர் அலுவலகத்தில் காட்சி வைத்துள்ளனர். அதில் நீதிமன்ற சிம்பல் உடன் கூடிய காலண்டர் வைத்துள்ளனர். படக்குழுவினருக்கு எங்கே எப்படியான காலண்டர் 1995களில் வைத்திருப்பர் என்று திட்டமிடல் இருந்துள்ளது. அடுத்து
“1.33 நிமிடத்தில் ஒரு ரைஸ் மில் முதலாளி போனில் பேசும் காட்சி. அதில் பின்புலத்தில் ரைஸ் மில் என்று எழுதப்பட்ட காலண்டர் வைத்துள்ளனர். அடுத்து”1.50நிமிடத்தில் போலிஸ் உயர் அதிகாரி மக்கள் குறை கேட்கும் கூட்டம் ஒரு தொண்டு நிறுவன நிறுவன கட்டிடத்தில் நடத்துகிற காட்சி. அந்த காட்சியில் குமர விகடன் காலண்டர் வைத்துள்ளனர். இது கல்யாண மண்டபங்கள் ஆரம்பித்து சமுதாயக் கூடங்கள் வரை இருக்கக் கூடிய பொதுவான காலண்டர். அடுத்து
“2.14நிமிடத்தில் போலிஸ் உயர் அதிகாரிகள் பேசிக் கொள்ளும் காட்சி. அதில் வைக்கப்பட்டுள்ள காலண்டரில் இருக்கும் சின்னம் முக்கியம். அது indian police service சின்னம். ஆக எந்த இடத்தில் என்ன காலண்டர் வைக்க வேண்டும் என்பதைச் சரியாகத் திட்டமிட்டுள்ளனர் ஜெய்பீம் சூர்யா ஞானவேல் குழுவினர். அடுத்து
“2.04 நிமிடத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த காட்சியில் கொடூரமான ஈவு இரக்கம் இல்லாத ஒரு போலிஸ் வீட்டில் உள்ள காலண்டர் வன்னியர் சமூகத்தைப் பிரதிபலிக்கும் அக்னி கலசம். தற்போது அது இந்து கடவுளான லட்சுமி தேவி காலண்டர் மாற்றியுள்ளனர். ஆக சரியான திட்டமிட்டலுடனே வைத்துள்ளனர் காலண்டர்களை.
“கதை அற்புதமானது அவசியமானது, ஆதிக்க அதிகார வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்தே ஆக வேண்டும். ஆனால் அதைப் பேசுவதாகச் சொல்லித் திட்டமிட்டு ஒரு சமூகத்தையே சாதிவெறியர்களாகக் கொடூரமாகக் காட்ட முயல்வதும் நியாயமா? தெரியாமல் நடந்துவிட்டது என்பது வடிகட்டிய பொய்” என்று பதிவிட்டுள்ளார்.
இதனால் விஷயம் மீண்டும் பெரிதாக வெடித்ததுள்ளது. சூர்யாவை உதைத்தால் 1 லட்சம் என பாமக நிர்வாகி கூறியது,வட தமிழகத்தில் சூர்யா திரைப்படம் ஓடிய தியேட்டரை மூட வைத்தது,ரசிகர் மன்றங்கள் கலைப்பு என சூர்யாவுக்கு எதிராக பல சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. ஜெய் பீம் திரைப்படத்தை எதிர்க்க பிரிந்து கிடந்த அனைத்து வன்னியர் சங்கங்கள் ஒன்று சேர்ந்தது.
வேறு சேனல் ஒன்றில் நடைபெற்ற ஒரு விவாதத்தில் யார் புகைப்படத்தை காலண்டரில் வைக்க வேண்டும் என நெறியாளர் சுகிதா எழுப்பிய கேள்விக்கு பாமகவை சேர்ந்த வினோபா, தொல். திருமாவளவன் போட்டோவை வைக்க வேண்டும் என கூறியதும் அதன் பிறகு நெறியாளர் பதறியதும் குறிப்பிடத்தக்கது. ஜெய்பீம் கருத்து சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என சொல்பவர்கள் கர்ணன் விவகாரத்தில் உதயநிதி தலையிடக்கூடாது என்று கேட்கப்பட்டதா என்ற கேள்விகள் தற்போது முன்வைத்து வருகிறார்கள்.