உலகை புரட்டி போட்டு வரும் கொரோனாவுக்கு அதிகாரப்பூர்வமாக எந்த நாடும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. உலக நாடுகள் அதன் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது . ரஷ்யா இஸ்ரேல் போன்ற நாடுகள்...
வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை கடல் வழியாக இந்தியாவுக்குக் கொண்டு வரும் தேசிய முயற்சிக்கு இந்தியக் கடற்படை உறுதுணையாக மேற்கொண்டு வரும் ஆபரேசன் சேதுவின் மூன்றாவது பயணமாக, இந்தியக் கடற்படை...
இந்திய மருத்துவம், ஹோமியோபதிக்கான மருந்தக ஆணையத்தை (PCIM&H) ஆயுஷ் அமைச்சகத்தின் துணை அலுவலகமாக அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. காசியபாத்தில் 1975-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இரண்டு மத்திய ஆய்வகங்களான இந்திய மருத்துவத்துக்கான மருந்தக ஆய்வகம் ((PLIM) மற்றும் ஹோமியோபதி மருந்தக ஆய்வகம் ஆகியவற்றை PCIM&H உடன் இணைப்பதன் மூலம் இது உருவாக்கப்படும். 2010இல் அமைக்கப்பட்ட இந்திய மருத்துவம், ஹோமியோபதிக்கான மருந்தக ஆணையம், ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற அமைப்பாக தற்சமயம் உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் மூன்று அமைப்புகளின் நிதி வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்தவும், ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகளின் நிர்ணயிக்கப்பட்ட வெளிப்பாடுகளை மேம்படுத்தவும், அவற்றின் சிறப்பான ஒழுங்குமுறை மற்றும் தரக் கட்டுப்பாட்டுக்காகவும் இந்த இணைப்பு செய்யப்படுகிறது. ஆயுஷ் மருந்துகளின் தர மேம்பாட்டுக்கும், மருந்தின் குணங்களையும், செய்யும் முறைகளையும் விளக்கும் நூல்களின் வெளியீட்டுக்கும் ஒன்றிணைந்த மற்றும் கவனம் மிகுந்த முயற்சிகளை மேற்கொள்ள இந்த இணைப்பு வழி வகுக்கும். மருந்துகள், அழகு சாதனப் பொருள்களுக்கான விதிகள், 1945-இல் தேவையான மாறுதல்களைச் செய்து, வழிவகைகளை உருவாக்குவதன் மூலம், இணைக்கப்பட்ட அமைப்பான இந்திய மருத்துவம், ஹோமியோபதிக்கான மருந்தக ஆணையம் மற்றும் அதன் ஆய்வகத்துக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநர், மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மருந்துகள் தொடர்பாக ஆலோசனை வழங்க மருந்துகள், அழகு சாதனப் பொருள்களுக்கான சட்டம், 1940-இன் கீழ் அமைக்கப்பட்ட சட்டப்பூர்வ அமைப்பான ஆயுர்வேத, சித்த மருத்துவ மற்றும் யுனானி மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் ஆகியவற்றுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இணைக்கப்பட்ட நிறுவனத்தின் பதவிகளையும், படிநிலைகளையும் மாற்றியமைக்கும் திட்டத்துக்கு நிதி அமைச்சகத்தின் செலவுகள் துறை ஒத்துக்கொண்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்,3.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளார். இந்த வைரஸ் சீனாவில் இருந்து உலகம் பரவியது....
உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு எதிராக மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றார்கள். மக்களின் உயிர்களை காப்பாற்ற தன்னுயிரை பணயம் வைத்து...
உலகை அச்சுறுத்தி வரும் கொரோன நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடித்து வருகிறது. ஊரடங்கால் ஏழை எளிய சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்கள் பாதிக்கப்பட்ட கூடாது என்பதற்காக பாரதிய...
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனாளிகள் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியதால், பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர்...
கொரோனா வைரஸை அழிப்பதற்கோ உடலில் தொற்றாமல் முன்கூட்டியே தடுப்பதற்கோ மருந்துகள் இல்லாத நிலையில் நமக்கு இருக்கும் ஒரே வழி நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துவதே...
மாலத் தீவுகளில் இருந்து 588 இந்தியர்கள் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ என் எஸ் ஜலஷ்வா மூலம் இன்று காலை கொச்சி துறைமுகம் வந்து சேர்ந்தனர். கொரோனா வைரஸ்...
மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு பல உண்மைகள் மறைக்கப்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. அங்கு தற்போதைய நிலைமை மோசமாக இருக்கிறது....