நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அகில இந்திய அளவில் அமைப்புசாரா துறைக்கு மத்திய அரசால் முன்னெடுக்கப்படும் புதிய திட்டமாக ரூ.10,000 கோடி திட்ட மதிப்பீட்டில், ...
இந்திய வானிலை ஆய்வு துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் / புயல் எச்சரிக்கை பிரிவின் தற்போதைய ( 10.00 மணி அளவில் ஐஎஸ்டி) நிலவர அறிக்கையின் படி கீழ் கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான உம்பன் என அழைக்கப்படும் சூப்பர் புயல் காற்று இப்போது வடக்கு-வடகிழக்கை நோக்கி நகர்ந்துள்ளது. இதன் வேகம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 22 கிலோ மீட்டர் என்றளவில் உள்ளது. இது இப்போது 08.30 மணி வாக்கில் வடமேற்கு வங்களா வி்ரிகுடா பகுதியில் நிலைக் கொண்டுள்ளது. இது 19.8 டிகிரி அட்ச ரேகையிலும் 87.7 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் உள்ளது. இது ஏறக்குறைய பாராதீப் ( ஒடிஸா) அருகே 120 கிழக்கு –தென்கிழக்கில் உள்ளது. மேற்கு வங்க மாநிலம் திஹாவுக்கு தெற்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும், கேப்புபாரா ( வங்க தேசம்)வுக்கு 360 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இது வங்களா விரிகுடாவுக்கு வடக்கு-வடகிழக்கு பகுதியை நோக்கி நகரந்து மேற்கு வங்க மற்றும் வங்க தேசத்தின் திஹா (மேற்கு வங்கம்) மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் ( வங்க தேசம்)இன்று மதியம் அல்லது மாலை (20ம் தேதி மே, 2020) கரையை கடக்கும் எனத் தெரிகிறது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 155-165 கிலோ மீட்டராக இருக்கும். வேகம் படிப்படியாக அதிகரித்து மணிக்கு 185 கிலோ மீட்டராக உயரலாம். இன்று மதியம் முதல் நிலச்சரிவு முறைகள் தொடங்கும். பின்னர் இது படிப்படியாக வடக்கு-வடகிழக்கில் கொல்கத்தாவை நோக்கி நகர வாய்ப்புள்ளது. டோப்ளர் ரேடார் முறையில் ( டிடபிள்யுஆர்) முறையில் தொடர்ச்சியாக விசாகப்பட்டினம் ( ஆந்திர மாநிலம்) பாராதீப் (ஒடிஸா) மற்றும் கோபால்பூர் ( ஒடிஸா) ஆகிய இடங்களில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. முன்னறிவிப்பு: அடுத்த 25 மணி நேரத்தில் ஒடிஸாவின் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக ( ஆங்காங்கே) கன மழை முதல் அதிககன மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு வங்கத்தின் கடலோர பகுதியில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. மணிக்கு 100-110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். ஒடிஸா மற்றும் கடலோர மாவட்ட பகுதிகளில் இது மணிக்கு 125 கிலோ மீட்டர் சூறாவளி காற்று வேகத்தை எட்டவும் கூடும். ஒடிஸா மற்றும் தெற்கு கடலோர மாவட்ட உள்பகுதிகளில் இது மணிக்கு 55-65 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும்.
உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனவால் உலகமே அச்சத்தில் உள்ளது. இதன் காணமாக உலகம் முழுவதும் பலவேறு நாடுகளில் ஊரடங்கு போடப்பப்ட்டுள்ளது. இந்தியாவிலும் கடந்த 50 நாட்களுக்கு மேல்...
கொரோனா காரணமாக நாடு முழுவதும் கடந்த 50 நாட்களுக்கு மேல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடித்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஊரடங்கு பல தளர்வுகளுடன் மே 31...
சுயசார்பு பாரதம் #AatmaNirbharBharatPackage - நிதி அமைச்சரின் நேற்றைய அறிக்கையிலிருந்து சில… அறிக்கை நாளையும் தொடரும். இன்றைய அறிவிப்புகள் - புலம்பெயர் தொழிலாளர்கள் , சாலையோர விற்பனையாளர்கள்,...
இந்திய உணவுக் கழகத்தின் 12.05.2020 தேதியிட்ட அறிக்கையின்படி, அதன் கையிருப்பில் 271.27 இலட்சம் மெட்ரிக் டன் அரிசியும், 400.48 இலட்சம் மெட்ரிக் டன் கோதுமையும் உள்ளது. ஆகவே,...
உலக நாடுகள் அனைத்தையும் கொரா னா அடித்து துவைத்து தொங்கப் போட்டுவரும் நிலையில் இந்தியா கொரானாவிற்கு பிந்தைய பொருளாதார மேம்பாட்டிற்காக 20 லட்சம் கோடியை அறிவித்து உலகின்...
கொவிட்-19 பொது முடக்கம் காரணமாக, பொருள் போக்குவரத்து பாதிப்பு உள்பட ஏராளமான சவால்களை சந்தித்து வரும் நிலையில், ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிகல்ஸ் துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை...
இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்த இதர பிரிவினர் சிறப்பு ரயில்களில் பயணிப்பது தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, "ஷ்ராமிக் சிறப்பு" ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்தது. 12 மே, 2020 வரை, நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 524 "ஷ்ராமிக் சிறப்பு" ரயில்கள் இயக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றில் 448 ரயில்கள் சேருமிடங்களை அடைந்துவிட்டன, 94 ரயில்கள் பயண வழியில் இருக்கின்றன. ஆந்திரப்பிரதேசம் (1 ரயில்), பீகார் (117 ரயில்கள்), சத்தீஸ்கர் (1 ரயில்), ஹிமாச்சல் பிரதேசம் (1 ரயில்), ஜார்கண்ட் (27 ரயில்கள்), கர்நாடகா (1 ரயில்), மத்தியப்பிரதேசம் (38 ரயில்கள்), மகாராஷ்டிரா (3 ரயில்கள்), ஒடிஷா (29 ரயில்கள்), ராஜஸ்தான் (4 ரயில்கள்), தமிழ்நாடு (1 ரயில்), தெலங்கானா (2 ரயில்கள்), உத்திரப்பிரதேசம் (221 ரயில்கள்) மற்றும் மேற்கு வங்கம் (2 ரயில்கள்) என பல்வேறு மாநிலங்களை 448 ரயில்கள் சென்றடைந்தன. திருச்சிராப்பள்ளி, டிட்லகர், பரவுனி, கண்ட்வா, ஜகன்நாத்பூர், குர்தா ரோடு, பிரக்யாராஜ், சப்பரா, பாலியா, கயா, புர்ணியா, வாரணாசி, தர்பங்கா, கோரக்பூர், லக்னோ, ஜாவ்ன்பூர், ஹாட்டியா, பஸ்டி, காடிஹார், தனப்பூர், முசாபர்பூர், சஹஸ்ரா ஆகிய இடங்களுக்கு இடம் பெயர்ந்தோரை இந்த ரயில்கள் ஏற்றி சென்றன. இந்த ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் ஏறுவதற்கு முன்பாக, முறையான பரிசோதனைக்கு பயணிகள் உட்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது. பயணத்தின் போது இலவச உணவும், தண்ணீரும் பயணிகளுக்கு வழங்கப்பட்டது. ****
சீனாவின் ஊகான் நகரத்திலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகை ஆட்டி படைத்தது வருகிறது. இந்த வைரஸ் குறித்து சீனா வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடந்து கொண்டது....