Get real time update about this post category directly on your device, subscribe now.
சமூக வலைத்தளங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிகளை மத்திய அரசு செயல்படுத்தியது .இந்த விதிகளுக்கு ட்விட்டர் மட்டும் பிடிவாதமாக ஒப்புக்கொள்ள மாட்டோம் என அடம் பிடித்து வந்தது. இந்த...
உலகம் முழுவதும் கொரானாவின் தாக்கம் குறைந்தபாடில்லை . அனைத்து நாடுகளும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு கட்டிவருகின்றது. இந்தியாவை பொறுத்தவரையில் 37 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது...
ஜம்மு காஷ்மீர் பாஜக மகளிரணி மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜம்மு - காஷ்மீர் வந்திருக்கிறேன்.செயற்குழு கூட்டம் முடிந்ததும் நேற்று (10-7-2021) மாலை நான் பிறந்த கோவையில்...
கடந்த வாரம் முழுவதும் உலக கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருப்பவர்கள் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள். எப்போதும் சச்சின் தோனி கோஹ்லி என பேசப்படுவது தான் வழக்கம்...
அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம். உத்திர பிரேதசம். 23 கோடி மக்கள் தொகையை கொண்ட மாநிலம் ஆகும். மினி இந்தியா...
மோடி அரசின் மிக முக்கியமான தேர்தல் வாக்குறுதிகள் காஷ்மீரின் தனி அந்தஸ்து ரத்து, அயோத்தியில் ராமர் கோவில் மற்றும் பொது சிவில் சட்டம். இந்த 3 முக்கிய...
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறிவருகிறது. இது மத்திய அரசால் பிரிவினை பேச்சாக பார்க்கப்படுகிறது. மேலும் ஆளூநர் தனது...
உத்தரப்பிரதேசத்தில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதா 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக சட்டப்பேரவையில் அம்மாநில அரசு நிறைவேற்ற உள்ளதாக தெரியவந்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் குறைந்த அளவிலான பழங்கள்...
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களது இல்லங்களிலும் கோவில்களிலும் மலர்களால் அலங்காரம் செய்வதற்கு ஏதுவாக புவிசார் குறியீட்டு சான்றிதழ் பெற்றுள்ள மதுரை மல்லி மற்றும் பட்டன் ரோஜா, அல்லி, சாமந்தி, மேரிகோல்டு போன்ற இதர பாரம்பரிய பூக்கள் தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா மற்றும் துபாய்க்கு இன்று ஏற்றுமதி செய்யப்பட்டது. நிலக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் சத்தியமங்கலத்தில் இருந்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான அபெடாவில் பதிவு செய்யப்பட்டுள்ள கோயம்பத்தூரைச் சேர்ந்த வேன்கார்ட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்த பூக்களைப் பெற்றது. மலர்கள், நீண்ட நாட்கள் வாடாமல் இருப்பதற்காகத் தகுந்த தொழில்நுட்பத்துடன் கூடிய பேக்கேஜிங் முறையை வழங்கி, ஏற்றுமதியாளர்களுக்கு கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மலர் வளர்ப்புத் துறை ஆதரவளித்தது. தரமான மலர்களைப் பெறுவதற்காக ஏற்றுமதியாளர்கள் விவசாயிகளுடன் நேரடியான தொடர்பை ஏற்படுத்தினர். இதன் மூலம் 130 பெண் தொழிலாளர்களுக்கும், 30 திறமைவாய்ந்த தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டது. இந்த ஏற்றுமதி சீரான இடைவெளியில் மேற்கொள்ளப்பட்ட பிறகு, துபாய் மற்றும் அமெரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தினர், நறுமணம் கமழும் மலர்களை பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்களின் போது தங்களது இல்லங்களில் உள்ள இறைவனுக்கும் ஆலயங்களிலும் பயன்படுத்த உதவிகரமாக இருக்கும். 2020-21-ஆம் ஆண்டில் ரூ. 66.28 கோடி மதிப்பிலான மல்லிகை பூக்கள் மற்றும் பூங்கொத்துகள் (மல்லிகை மற்றும் இதர பாரம்பரிய மலர்களை உள்ளடக்கியது) அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் ரூ. 11.24 கோடி மதிப்பிலான மலர்கள் சென்னை, கோயம்பத்தூர், மதுரை விமான நிலையங்கள் வாயிலாக தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. உலகெங்கும் மிகவும் பிரசித்தி பெற்ற மலர்களுள் மதுரை மல்லிகையும் ஒன்று. அதன் நறுமணம், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் பேரழகுக்கு இணையான புகழைப் பெற்றது. மல்லிகையின் முக்கிய சந்தையாக உருவாகியுள்ள மதுரை, இந்தியாவின் ‘மல்லிகை தலைநகரமாகவும்' வளர்ந்துள்ளது.
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 37 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 48,04,423 முகாம்களில் 37,21,96,268 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 30,55,802 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொடர்ந்து 13-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது. நம் நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,55,033 ஆக சரிந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 1.48 சதவீதமாகும். இதுவரை மொத்தம் 2,99,33,538 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 45,254 பேர் குணமடைந்தனர். இதன்படி குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.20 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,55,225 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 42,90,41,970 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.34 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.19 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 19 நாட்களாக இந்த எண்ணிக்கை 3 சதவீதத்திற்கு குறைவாகவும், 33 நாட்களாக 5 சதவீதத்திற்கு குறைவாகவும் உள்ளது.
