நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதலில் துருக்கி நம் நாட்டை கண்டித்தது. பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு வழங்கியது. இதையடுத்து துருக்கி நாட்டை நம் மக்கள் புறக்கணிக்க தொடங்கி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக ஆசியாவின் மிகப்பெரிய மார்பிள் ஏற்றுமதி செய்யும் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மார்பிள் புராசசர்ஸ் கமிட்டி துருக்கிக்கு அடி கொடுத்துள்ளது.நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் பலியானதற்கு நம் நாடு பாகிஸ்தான் உள்ளே ஏவுகணைகளை அனுப்பி பயங்கரவாத தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள், 3 விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டது.
நம் நாட்டின் அடியை தாங்க முடியாமல் பாகிஸ்தான் போர் நிறுத்தம் கேட்டு கெஞ்சியது. நம் நாடும் ஒப்புக்கொண்டதால் போர் நிறுத்தம் அமலில் உள்ளது. ஆனாலும் கூட பாகிஸ்தானுக்கு 3 நாடுகள் தொடர்ந்து ஆதரவு அளிக்கின்றன. பயங்கரவாதிகளை பாகிஸ்தான் வளர்த்து வந்தாலும் கூட நாங்கள் பாகிஸ்தான் உடன் தான் இருப்போம். பாகிஸ்தானை தான் தூக்கி பிடிப்போம் என்று முட்டாள் தனமான முடிவை சீனா, துருக்கி, அஜர்பைஜான் நாடுகள் எடுத்துள்ளன.
இதனால் இந்த நாடுகளை புறக்கணிக்க நம் நாட்டு மக்கள் தொடங்கி உள்ளனர். துருக்கி, அஜர்பைஜான் ஆகியவை சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற இடங்களாகும். நம்நாட்டில் இருந்து துருக்கிக்கு ஆண்டுக்கு 3 லட்சத்துக்கு அதிகமானவர்களும், அஜர்பைஜானுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களும் சுற்றுலா செல்கின்றனர். இதனால் நம் நாட்டில் செயல்பட்டு வரும் சுற்றுலா நிறுவனங்கள் அந்த நாடுகளுக்கான சுற்றுலா பேக்கேஜை ரத்து செய்துள்ளன. அதேபோல் துருக்கி, அஜர்பைஜானுக்கு சுற்றுலா செல்ல முன்கூட்டியே முடிவு செய்து புக்கிங் செய்த மக்களும் அதனை கேன்சல் செய்ய தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் தற்போது துருக்கிக்கு நம் நாட்டின் மார்பிள் கமிட்டி சம்மட்டி அடி கொடுத்துள்ளது. துருக்கியில் இருந்து மார்பிள் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில் அதனை கைவிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உதய்ப்பூர் மார்பிள் புராசசர்ஸ் கமிட்டியின் தலைவர் கபில் சுரானா கூறுகையில், ‛‛ஆசியாவின் மிகப்பெரிய மார்பிள் ஏற்றுமதியாளராக உதய்ப்பூர் உள்ளது. இப்போது பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் கமிட்டியின் அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக துருக்கியுடனான வர்த்தகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளோம். நம் நாட்டுக்கு வரும் மார்பிள் கல்லில் சுமார் 70 சதவீதம் துருக்கியில் இருந்து தான் இறக்குமதி செய்கிறோம். இனி அது இருக்காது. பாகிஸ்தானுக்கு எதிராக பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு நாங்கள் முழுமையாக ஆதரவு தெரிவிக்கிறோம் ” என்றார்.
இந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹிதேஷ் படேல் கூறுகையில், ‛‛எங்களை பொறுத்தவரை தொழில் மற்றும் தொழிற்சாலையை விட நாடும் நாட்டின் நலனும் தான் முக்கியம். இதனால் துருக்கியில் இருந்து மார்பிள் கற்களை இறக்குமதி செய்வதை நிறுத்த முடிவு எடுத்துள்ளோம்” என்றார்.
துருக்கியில் இருந்து மார்பிள் இறக்குமதியை நிறுத்தும் முடிவை அந்த கமிட்டி தன்னிச்சையாக எடுத்துள்ளது. நம் நாட்டுக்கும், ராணுவத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளனர். அதேபோல் நாட்டின் மற்றவர்களும் துருக்கியை புறக்கணிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி துருக்கி மீது அதிகாரப்பூர்வமாக மார்பிள் இறக்குமதிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
நம் நாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் 14 முதல் 18 லட்சம் டன் அளவுக்கு மார்பிள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் துருக்கியில் இருந்து மட்டும் 70 சதவீதம் வரை மார்பிள் கற்கள் வாங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ரூ.2,500 முதல் ரூ.3 ஆயிரம் கோடி வரை வருமானம் ஈட்டியது. தற்போது துருக்கியில் இருந்து மார்பிள் இறக்குமதி நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால் அந்த நாட்டுக்கு நஷ்டம் ஏற்பட உள்ளது. முன்னதாக புனே வியாபாரிகள் துருக்கியை புறக்கணிக்கும் முடிவை எடுத்தனர். துருக்கி நாட்டில் இருந்து ஆப்பிள் இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்தனர். இப்படியாக தொடர்ந்து துருக்கி நாட்டுக்கு நம் நாட்டு மக்கள் அடி மேல் அடி கொடுத்து வருகின்றனர். இது துருக்கியின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் ஆண்டு மட்டும் மொத்தம் ஐந்து கோடி இந்திய சுற்றுலாப் பயணிகள் அஜர்பைஜானுக்கும் துருக்கிக்கும் சென்றிருந்தனர். தற்போது பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு காரணமாக துருக்கியையும் அஜர்பைஜானையும் இந்தியர்கள் புறக்கணித்து வருகின்றனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் பிரச்சாரம் வலுத்து வருகிறது. ஏற்கனவே இந்திய சந்தைகளில் விற்பனையாகி வந்த துருக்கி ஆப்பிள்களை பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு காரணமாக புறக்கணிப்பதாக வணிகர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
இந்தியர்களின் இந்த முடிவை தேசத்தின் ஒற்றுமை மற்றும் இந்திய ராணுவத்தின் மீதான மரியாதையின் காரணமாக முழுமையாக ஆதரிக்கிறோம். துருக்கி அஜர்பைஜானுக்கு தேவையில்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும். இரு நாடுகள் தொடர்பான சுற்றுலா சலுகைகள் மற்றும் விளம்பரங்களை மேக் மை ட்ரிப் தளத்திலிருந்து நீக்கி இருக்கிறோம் எனக் கூறியுள்ளது. அந்த நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு இந்தியர்கள் முழு ஆதரவு தெரிவித்திருக்கிறார்