Get real time update about this post category directly on your device, subscribe now.
இன்று தடுப்பூசித் திருவிழாவின் 2வது நாள் நாடு முழுவதும் நடக்கிறது. நாட்டில் இது வரை போடப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10.45 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணி வரை, மொத்தம் 10,45,28,565 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசித் திருவிழாவில் முதல்நாளான நேற்று சுமார் 30 லட்சம் (29,33,418 ) தடுப்பூசிகள் போடப்பட்டன. தினசரி போடப்படும் தடுப்பூசிகள் எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இவற்றின் தினசரி சராசரி 40,55,055 டோஸ்களாக உள்ளன. நாட்டில் தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், 1,68,912 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 83.02 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தில்லி, சட்டீஸ்கர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 63,294 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 16 மாநிலங்களில் தினசரி கொவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது. நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 12,01,009-ஐ எட்டியுள்ளது. நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,21,56,529-ஆக உள்ளது. இவர்கள் எண்ணிக்கை 89.86 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 75,086 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி கொவிட் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 904 பேர் இறந்துள்ளனர்.
தேவைக்கேற்ப , ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது சராசரியாக நாள் ஒன்றுக்கு, 1402 சிறப்பு ரயில்களை, இந்திய ரயில்வே இயக்குகிறது. மொத்தம் 5381 புறநகர் ரயில்கள் மற்றும் 830 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ...
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் இலவச தரிசனம்...
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு காஷ்மீர் தொடர்ந்து இருக்கும் என குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு கூறினார். ஜம்மு காஷ்மீரின் ஒட்டு மொத்த...
உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர்: உலகின் மிகப்பெரிய ஸ்டேடியத்திற்கு பிரதமர் மோடி பெயர். உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை குடியரசுத் தலைவர்...
மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாஎனது சட்டமன்ற தொகுதியில் சாலைகள் போடப்படவில்லை என பேசிய திமுக எம்.பி கனிமொழி, எந்த இடத்தில் சாலை போடப்படவில்லை என்பதை...
பாரத பிரதமரே பாராட்டி விட்டு சென்றது எங்களுக்கு எனர்ஜியாக இருக்கிறது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் மதுரையில்...
நெல்லை பாளையங்கோட்டை பர்கிட் மாநகரம் அருகிலுள்ள புதுமனை கிராமத்தில் முஸ்லீம் - இந்து மாணவர்களிடையே கிரிக்கெட் விளையாட்டு பிரச்சனை. இந்து மாணவர்கள் மீது தாக்குதல் கடைக்கு சென்ற...
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ்...
சர்வதேச கட்சியாகிறதா பாஜக! அமித்ஷா வின் அடுத்த திட்டம்...! நேபாளம் மற்றும் இலங்கையில் கட்சியை விரிவுபடுத்துவதற்கும் இரு நாடுகளில் கட்சியை வலுப்படுத்தற்கும் ஆன அமித்ஷா திட்டமிட்டார் என...
