Get real time update about this post category directly on your device, subscribe now.
கலவரத்தை தூண்டுகிறவர்களின் நோக்கம் மோடி அரசுக்கு மக்களிடம் கெட்ட பெயர் வரவேண்டும் என்பதா? நிச்சயமாக இல்லை. சிஏஏ வன்முறைகளுக்கு பிறகும் மோடிக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவு இன்னும்...
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே மோடி அரசின் முக்கிய குறிக்கோள் என்றும் புதிய வேளாண் சட்டங்கள் இதற்கு வழிவகுக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்....
காரீப் 2020-21 பருவத்தில், தமிழகம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, உத்தராகண்ட், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், கேரளா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், சட்டீஸ்கர், ஒடிசா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பிகார், ஜார்க்கண்ட், அசாம், கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளத்தில் கடந்த 19.01.2021 வரை, 572.32 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு, இதே காலத்தின் கொள்முதலை...
தமிழகத்தில் இடி இடித்தால் பாண்டிச்சேரியில் மழை பெய்யும் என்பார்கள்.அதாவது தமிழக அரசியலில் ஏற்படும் நிகழ்வுகள் பாண்டிச்சேரியில் எதிரொலிக்கும். ஆனால் இப்பொழுது பாண்டிச்சேரியில் இடி இடிக்க ஆரம்பித்து இருக்கிறது....
ரசிகர்களுக்காக உருக்கமான வீடியோ ஒன்றை அக்ஷய்குமார் வெளியிட்டுள்ளார். இதனை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எதற்கு நன்கொடை வழங்க வேண்டும் என்று வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் ராமாயண...
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே மோடி அரசின் முக்கிய குறிக்கோள் என்றும் புதிய வேளாண் சட்டங்கள் இதற்கு வழிவகுக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்....
பாஜக தேசியச் செயலாளர் சுனில் தியோதர் கண்டனம். ஜகன்மோகன் ரெட்டியின் தலைமையிலான ஆந்திர மாநில அரசு திருமலா-திருப்பதி தேவஸ்தானத்தின் பக்தர்கள் அளிக்கும் பணம், சொத்துக்களைத் தன் உபயோகத்துக்குக்...
இந்தியா உலக அரங்கில் தனி முத்திரையினை வல்லரசு நாடுகளுக்கு இணையாக பதித்து வல்லரசு என நிமிர்ந்து நிற்கின்றது ஆம், கொரோனாவிற்கு தடுப்பூசி என வெகு சில வல்லரசுகளே...
மத்திய அரசு புதிய வேளாண் சட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் தேவைப்பட்டால் சிறு சிறு திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என்கிறது. ஆனால் போராட்டக்காரர்கள் மூன்று வேளாண் சட்டத்தையும் ரத்து...
இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்நிகழ்ச்சி நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் நடந்தது. இந்த விழாவில் தேசியளவில் வெற்றி பெற்ற மூன்று இளம் வெற்றியாளர்களின் கருத்துக்களை பிரதமர் கேட்டார். மக்களவைத் தலைவர், மத்திய கல்வி அமைச்சர், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்த பிரதமர், காலம் கடந்தாலும் கூட சுவாமி விவேகானந்தரின் தாக்கமும், ஈர்ப்பும் நமது தேசிய வாழ்க்கையில் அப்படியே மாறாமல் உள்ளன என்றார். தேசிய வாதம் மற்றும் நாட்டை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அவரது கருத்துக்கள், மக்களுக்கும், உலகத்துக்கும் சேவை செய்வதில் அவர் ஆற்றிய போதனைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கின்றன. தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு சுவாமி விவேகானந்தரின் பங்களிப்பு பற்றி பிரதமர் பேசினார். தனிநபர்கள் சுவாமி விவேகானந்தரை தொடர்பு கொண்டனர் மற்றும் நிறுவனங்களை உருவாக்கினர். பதிலுக்கு, அவை புதிய நிறுவன மேம்பாட்டாளர்களை உருவாக்கியது. இந்த நடைமுறை, தனிநபர் வளர்ச்சி, நிறுவன மேம்பாட்டை ஏற்படுத்தும் நல்ல சுழற்சியைத் தொடங்கியது. தனிதொழில் முனைவோர் மற்றும் சிறந்த நிறுவனங்கள் இடையேயான தொடர்பை பிரதமர் எடுத்து கூறியதுபோல், இதுதான் இந்தியாவின் மிகப் பெரிய பலம். அண்மையில் புதிய கல்வி கொள்கை வழங்கிய வசதி மற்றும் புத்தாக்க கற்றல் முறைகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். நாட்டில் நல்ல சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க நாம் முயற்சிக்கிறோம். இது இல்லாதததால்தான், இளைஞர்கள் வெளிநாடு செல்ல நேரிடுகிறது என பிரதமர் கூறினார். https://www.youtube.com/watch?v=BAmDbd0n0BQ நம்பிக்கையான, தெளிவான, அச்சமற்ற, தைரியமான இளைஞர்களை நாட்டின் அடித்தளமாக சுவாமி விவேகானந்தர்தான் அங்கீகரித்தார் என பிரதமர் வலியறுத்தி கூறினார். இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர் கூறிய மந்திரங்களை திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். உடல் தகுதிக்கு, இரும்பு தசைகளும், எஃகு நரம்புகளும் தேவை; ஆளுமை வளர்ச்சிக்கு தன்னம்பிக்கை தேவை; தலைமைப் பண்புக்கும், குழுப் பணிக்கும் அனைவரையும் நம்ப வேண்டும் என சுவாமி விவேகானந்தர் கூறினார். அரசியலில் இளைஞர்கள் தன்னலமற்ற மற்றும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளிக்க வேண்டும் என பிரதமர் அறிவுரை கூறினார். நேர்மையற்ற செயல்பாடுகளின் தளம்தான் அரசியல் என்ற பழைய கருத்து மாறி, இன்று நேர்மையானவர்களுக்கும் பொது சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது என அவர் கூறினார். நேர்மையும், செயல்பாடும்தான் இன்றைய தேவை. வாரிசு அரசியலால் ஏற்படும் தீங்குகளையும் அவர் விரிவாக எடுத்துரைத்தார். ஊழல் மக்களுக்கு சுமையாக மாறிவிட்டது என அவர் கூறினார். வாரிசு அரசியல் முறையை ஒழிக்க வேண்டும் என அவர் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஜனநாயக அமைப்பில் வாரிசு அரசியல், திறமையின்மைக்கும், சர்வாதிகாரத்துக்கும் வழிவகுக்கிறது. இது போன்ற நபர்கள், குடும்ப அரசியல், அரசியலில் குடும்பம் என்ற நிலையை ஏற்படுத்துகின்றனர். ‘‘வம்சாவழி பெயர் மூலம் தேர்தலில் வெற்றி பெறும் காலம் எல்லாம் தற்போது முடிந்து விட்டது. வாரிசு அரசியல் நோய் இன்னும் ஒழியவில்லை.... வாரிசு அரசியல், நாட்டை முன்னேற்றாமல், தன்னையும் குடும்பத்தையும்தான் வளர்க்கிறது. இந்தியாவில் சமூக ஊழலுக்கு இதுதான் முக்கிய காரணம்’’ என பிரதமர் கூறினார். புஜ் நிலநடுக்கத்துக்குப்பின் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புப் பணிகளை உதாரணமாகக் கூறிய பிரதமர், பேரழிவில் தங்கள் சொந்த பாதையை உருவாக்க கற்றுக்கொள்ளும் சமூகம், தங்கள் விதியை எழுதுகிறது. அதனால்தான், 130 கோடி இந்தியர்களும் தங்கள் சொந்த விதியை இன்று எழுதுகின்றனர். இன்றைய இளைஞர்களின் ஒவ்வொரு முயற்சியும், புத்தாக்கமும், நேர்மையும் நமது நாட்டின் எதிர்காலத்துக்கு வலுவான அடித்தளம் அமைக்கிறது என பிரதமர் கூறினார்.
