Get real time update about this post category directly on your device, subscribe now.
ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி குழு தேர்தலில் ஜம்முவில் உள்ள 10 மாவட்டங்களில் ரஜோரியை தவிர ஏனைய 9 மாவட்ட ங்களிலும் சேர்மன் பதவியை பிஜேபி கைப்பற்றுகிறது....
தெலங்கானாவில் இருதரப்பினர் மோதலில், நடுரோட்டில் 3 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இது தொடர்பாக எம்ஐஎம் கட்சி மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டார். தெலங்கானாவில் எம்ஐஎம் கட்சி...
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் உயர்மட்ட குழு ஒன்றை அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது...
வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் செய்ய முடியாததை பா.ஜ., செய்துள்ளதாக பாஜ.,வில் உள்ள நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் செய்தித்தொடர்பாளராக இருந்து சமீபத்தில் பா.ஜ.,வில்...
பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மானியங்களை செலுத்தியதன் மூலம் டிசம்பர் 2014 லிலிருந்து மார்ச் 31, 2020 வரையிலான ஐந்தரை வருடங்களில், ரூபாய் 1 லட்சத்து 78...
மத்தியபிரதேசத்தில் உள்ள பல்வேறு இடங்களில், இன்று, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீடியோ கான்பரென்சிங் மூலமாக பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய...
அசோசெம் நிறுவன வாரம் 2020 நிகழ்வில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் சிறப்புரையாற்றினார். `நூற்றாண்டின் அசோசெம் தொழில்முனைவோர் விருதை' திரு. ரத்தன் டாட்டாவுக்கு பிரதமர் அளித்தார். டாடா குழுமம்...
எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக இதுவரை தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதையடுத்து இந்த மாநிலங்களுக்குக் கூடுதலாக ரூ.16,728 கோடி நிதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் மைய சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் மாநிலங்கள் கூடுதல் கடன் பெறலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான சீர்திருத்தங்களை ஏற்படுத்த மாநிலங்களை ஊக்குவித்துள்ளது. இதன்படி தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் எளிதான வர்த்தகம் தொடர்பான சீர்திருத்தங்களை நிறைவேற்றியுள்ளன. இதனால் கூடுதல் நிதியாக தமிழகத்திற்கு ரூ.4,813 கோடியும், ஆந்திரப்பிரதேசத்திற்கு ரூ. 2,525 கோடியும் , கர்நாடகாவிற்கு ரூ. 4,509 கோடியும், மத்தியப்பிரதேசத்திற்கு ரூ. 2,373 கோடியும், தெலங்கானாவிற்கு ரூ. 2,508 கோடியும் நிதி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் மாநிலப் பொருளாதாரத்தில் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் என்பதால் இதுதொடர்பாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் மாநிலங்களுக்குக் கூடுதல் கடன் வழங்கப்படும் என்று கடந்த மே மாதம் மத்திய அரசு முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி 2020 டிசம்பர் 22 அன்று காலை 11 மணிக்கு காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியின் போது ஒரு தபால் தலையையும் பிரதமர் வெளியிடுவார். பல்கலைக்கழகத்தின் வேந்தர் மேன்மைமிகு திரு. சையேத்னா முஃபதல் சைபுதீன் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். அலிகார்முஸ்லீம்பல்கலைக்கழகத்தைப்பற்றி: இந்திய மேலவைச் சட்டத்தின் கீழ் முகமது ஆங்கிலோ ஓரியண்டல் (எம்.ஏ.ஓ) கல்லூரியை மத்தியப் பல்கலைக்கழகமாக உயர்த்தியதையடுத்து, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், கடந்த 1920-ஆம் ஆண்டு பல்கலைக்கழகமாக மாறியது. எம்.ஏ.ஓ கல்லூரி, கடந்த 1877-ஆம் ஆண்டு சர் சையது அகமது கானால் நிறுவப்பட்டது. உத்தரப்பிரதேசத்தின் அலிகர் நகரில் 467.6 ஹெக்டர் நிலப்பரப்பில் பல்கலைக்கழக வளாகம் அமைந்துள்ளது. மல்லபுரம் (கேரளா), முர்ஷிதாபாத் ஜங்கிபூர் (மேற்கு வங்காளம்) மற்றும் கிஷன்கஞ் (பிகார்) ஆகிய மூன்று நகரங்களிலும் இந்தப் பல்கலைக்கழகத்தின் மையங்கள் இயங்குகின்றன.
ஒரு வழியாக மிட்னாப்பூர் மேடையில் அமித்ஷா முன்னிலையில் சுவேந்து அதிகாரி பிஜேபியில் இணைந்து வி ட்டார்.இவருடன் பிஜேபியில் பல எம்எல்ஏக்கள் இணைந்து இருக்கிறார்கள். அவர்களின் விவரங்கள் வந்து...
