Get real time update about this post category directly on your device, subscribe now.
நடப்பு காரீப் சந்தைக் காலத்தில் (2020-21), காரீப் பயிர்களை, விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், தெலங்கானா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், குஜராத், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பிகார் மற்றும் கேரளாவில் நெல் கொள்முதலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இங்கு டிசம்பர் 11 வரை 372.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டில் இதே காலத்தில் 308.57 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. கடந்தாண்டைவிட இந்தாண்டு நெல் கொள்முதல் 20.68 சதவீதம் அதிகம். இந்தாண்டில் இது வரையிலான மொத்த கொள்முதலில், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 202.77 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நடப்பு காரீப் சந்தை காலத்தில் 40.53 லட்சம் விவசாயிகள் ஏற்கனவே பயனடைந்துள்ளனர். இவர்கள் தங்களது விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 70311.78 கோடி பெற்றுள்ளனர். மேலும், மாநிலங்கள் வேண்டுகோள்படி, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து 48.11 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆதரவு விலையில் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சந்தை விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைந்தால், மற்ற மாநிலங்களில் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்ய, வேண்டுகோள் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்படும்.
பண்டிகை சிறப்பு ரயில் உள்ளிட்ட அனைத்து சிறப்பு மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் முன்பதிவுடன் மட்டுமே இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்படாத பயணச் சீட்டுகளும் அனுமதிக்கப் படுவதாக ஒருசில...
நாடாளுமன்றத்தில் கடந்த 2001ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலில், உயிரிழந்த தியாகிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். 19 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள்...
அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி உத்தரபிரதேசம், பஞ்சாப் (punjab), ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 18வது நாளாக போராட்டம்...
இந்த நிலையில் டிச., 19 அன்று 2 நாள் பயணமாகஉள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்கம் செல்ல உள்ளார். மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசார திட்டத்தை...
"இந்த வழக்கு மகா முக்கியமான வழக்கு, ஆனால் போதிய ஆவணங்களை சி.பி.ஐ சமர்பிக்கவில்லை, அவர்கள் பொறுப்பில் இருந்து தவறிவிட்டனர். இதனால் சந்தேகத்தின் பலன் குற்றம் சாட்டபட்டவர்களுக்கு சாதகம்...
இந்தியாவில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட எம்ஆர்என்ஏ தடுப்பூசியை மனிதர்களிடம் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. புனேவில்...
பா.ஜ., தேசிய தலைவர் நட்டா மீதான தாக்குதலை தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை எழுந்துள்ளது. இந்த நிலையில் டிச., 19 அன்று 2 நாள்...
இந்தியன் ரயில்வேயில் வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ரயில்வேயின் 21 ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், மிகப்பெரிய ஆட்சேர்ப்பு பணியைத் தொடங்க உள்ளது. இந்த செயல்முறை...
தில்லியில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள், புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, மத்திய...
