Get real time update about this post category directly on your device, subscribe now.
'புலித் திட்டம்' மற்றும் 'யானைத் திட்டம்' ஆகியவற்றின் வெற்றியை தொடர்ந்து அருகிவரும் உயிரினங்களை பாதுகாப்பதற்காக 'சிங்கத் திட்டம்' மற்றும் 'டால்பின் திட்டம்' ஆகிய பிரத்யேக திட்டங்களை நாடு செயல்படுத்தி வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். வன உயிர்கள் வாரத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த திட்டங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் விளைவுகளை எட்டுவதற்காக அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் கோரினார். அமைதி மற்றும் அகிம்சையின் அடையாளமாக விளங்கிய மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி கொண்டாடப்படும் வன உயிர்கள் வாரம், வன உயிர்களை பாதுகாப்பதற்கும், அனைத்து உயிர்களும் இணக்கத்தோடு இணைந்து வாழ்வதற்குமான உறுதியை வலியுறுத்துவதற்கான சரியான தருணம் என்று பிரதமர் கூறினார். https://www.youtube.com/watch?v=Lo1e27nR-yQ பாதுகாக்கப்பட்ட பகுதிகள் துடிப்புடனும் அதிக அளவிலும் விளங்கும் இன்றைய காலகட்டத்தில், வன உயிர்களின் பாதுகாப்பும் முன்னெப்போதையும் விட வலிமை பெற்று இருப்பதாக அவர் கூறினார். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்த திரு மோடி, வன உயிர்கள் செழிப்புடன் திகழ இத்தகைய பகுதிகள் அதிகரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆசிய சிங்கங்களின் கடைசி மக்கள் தொகை இந்தியாவில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கான இலக்கு முன்னதாகவே எட்டப்பட்டதாக கூறினார். நெகிழி கழிவு மேலாண்மைக்கு இந்தியா அளித்துவரும் முக்கியத்துவத்தை பற்றி குறிப்பிட்ட பிரதமர், நீடித்த வளர்ச்சிக்காகவும், வளமான பல்லுயிர் தன்மைக்காகவும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியின் பயன்பாட்டை குறைக்க இந்தியா முயற்சிகள் எடுத்து வருவதாக தெரிவித்தார். இடம்பெயரும் உயிர்களின் இல்லமாக இந்தியா திகழ்வதால் இந்த உயிர்களுக்கு உரிய முக்கியத்துவத்தையும், பாதுகாப்பையும் நாடு அளித்து வருவதாக திரு மோடி கூறினார். https://www.youtube.com/watch?v=sxR0LO9tb4A&t=4s\ உலகின் நிலப் பரப்பளவில் 2.4% உள்ள இந்தியா, உலக மக்கள் தொகையில் 17 சதவீதத்தை தன்னகத்தே கொண்டு இருப்பதாக கூறிய திரு மோடி, இந்தியாவின் வளர்ச்சி தேவைகள் மிகவும் அதிகமானவை என்றார். அதேசமயம் வன உயிர்கள் மற்றும் பல்லுயிர்களின் பாதுகாப்பும் அதே அளவுக்கு முக்கியமானது என்று அவர் கூறினார்.---- ...
நம் தமிழகத்தில் சென்னையில் உள்ள ஆவடி குறித்து நம்மில் பலரும் சரியாக அறிந்து இருப்பது இல்லை. ஆவடி என்பது,Armored Vehicles and Ammunition Depot of India...
தமிழகத்தில் கந்த சஷ்டி கவச விவகாரத்தில் திமுக அடி வாங்கிய தருணத்தில் முதல் உஷாரான மீடியாக்கள் இந்தி ஏர்போர்ட் என்று தனது வேலைகளை மாற்றுப்பாதையில் துவங்கி விட்டன....
முழு இந்திய எதிர்ப்பு படமாகத்தான் இருக்கும் அப்படி நக்சலைட்டுகள் சேர்ந்து "ரணசிங்கம்" என்றொரு படத்தை எடுத்திருக்கின்றன, முழுக்க முழுக்க உணர்ச்சியினை மட்டும் தூண்டி அறிவினை மழுங்கடிக்க வைக்கும்...
கொரோன பரவல் காரணமாக உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு ஊரடங்கு போடப்பட்டது தற்போது தான் இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. தமிழகத்திணை பொறுத்தவரையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் சுமார் 75%...
மூலபத்திரம் என்றால் திமுகவிற்கு மூலம் வந்துவிடும் என்பதே உண்மை. முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தை அபகரித்து கட்டப்பட்டது என முதலில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆரம்பிக்க அதை...
கடந்த 28 ஆண்டுகளுக்கு பின்னர் புதிய கல்விக் கொள்கையினை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் எப்போதும் போல் அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் திராவிட...
தமிழ்நாட்டில் 'ஒரே நாடு, ஒரே ரேசன்' திட்டத்தை, முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தின்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைபொருள் கடத்தல் மற்றும் விற்பனை அதிகமாக நடைபெறுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளதால் மாவட்ட காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவஸ்தலம் பகுதியில்...
வீரத்துறவி இராமகோபாலன் மறைவொட்டி பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் ப செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:- இந்துக்களுக்காக வாதாடவும், போராடவும், பரிந்து பேசவும் தொடங்கப்பட்ட அமைப்புதான், இந்து முன்னணி பேரியக்கம். இதன் அமைப்பாளராக தனது 94-வது வயது வரை செயல்பட்டு வந்தவர் வீரத்துறவி ஐயா இராமகோபாலன். தமிழகத்தில் சிறுபான்மை ஓட்டு வங்கி காரணமாக பெரும்பான்மை இந்துக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அரசியல் கட்சிகள் நடத்தி வருகின்றனர். இந்துக்கள் தங்களின் உரிமைகளுக்காகவும், நியாயமான கோரிக்கைகளுக்காகவும் குரல் கொடுக்க நாதியற்றவர்களாக இருந்ததை பார்த்த வீரத்துறவி ஐயா இராமகோபாலன், இந்துக்களின் உரிமைகளைப் போராடி பெறுவதற்கு ஓர் அமைப்பு தேவை என்பதை உணர்ந்தார். அதன் காரணமாக ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான், இந்து முன்னணி பேரியக்கம். இந்து முன்னணியை தோற்றுவித்தவுடன், ஐயா தாணுலிங்க நாடாரை கண்டெடுத்து, அவரை இந்து முன்னணியின் முதல் தலைவராக பொறுப்பேற்று செயல்பட வைத்தார் வீரத்துறவி ஐயா இராமகோபாலன். ஐயா தாணுலிங்க நாடார், தனது இறுதி மூச்சு வரை இந்து முன்னணியின் தலைவராக இருந்து இந்துக்களுக்காக போராடினார்கள், வாதாடினார்கள், பரிந்து பேசினார்கள். வீரத்துறவி ஐயா இராமகோபாலன், 1927-ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் சீர்காழியில் பிறந்தார். ஆர்.எஸ்.எஸ் பேரியக்கத்தின் பொது சேவை மற்றும் தேச தொண்டால் இயக்கப்பட்டு, தான் பார்த்து வந்த மின்சாரத்துறை அரசு வேலையை உதறி தள்ளிவிட்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் முழு நேர ஊழியராக தன்னை இணைத்துக் கொண்டார். 1948-இல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தடை செய்யப்பட்ட போதும், 1975-ஆம் ஆண்டு அவசரநிலை காலகட்டத்திலும் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வழிநடத்தியவர் வீரத்துறவி ஐயா இராமகோபாலன். இந்து முன்னணி பேரியக்கம் தொடங்கப்பட்ட பிறகு, முழு நேரமும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்துக்களுக்காக குரல் கொடுத்து வந்தார். இதன் காரணமாக 1984-ஆம் ஆண்டு மதுரை ரயில் நிலையத்தில் வைத்து வீரத்துறவி ஐயா இராமகோபாலன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அதிர்ஷ்டவசமாக ஐயா உயிர் தப்பினார். இருந்தாலும் கழுத்திலும், தலையிலும் பலத்த வெட்டுகளால் ஏற்பட்ட தழும்புகள் இருந்தன. அவற்றை மறைப்பதற்காகதான் அவர், இறுதிவரை தலையில் காவி தொப்பியை அணிந்து வந்தார். https://www.youtube.com/watch?v=sxR0LO9tb4A இன்று தமிழகமெங்கும் இந்துக்கள் மத்தியில் மாபெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது என்றால், அதற்கு முழுமுதற் காரணம் வீரத்துறவிதான். எங்களைப்போன்ற லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் ஊட்டியவர் வீரத்துறவி ஐயா இராமகோபாலன்தான். எங்களுக்கெல்லாம் முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் அவர்....
