Get real time update about this post category directly on your device, subscribe now.
அனைத்து நாட்களிலும் கோவிலுக்கு செல்ல அனுமதி கோரி பாஜக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள்...
ஆந்திர அரசியல் களை கட்ட ஆரம்பித்துஇருக்கிறது. இது வரை ஒய்எஸ்ஆர் காங்கிரசின் மோனோபோலி அரசியலில் பிடிபட்டு இருக்கும் ஆந்திராவை வருகின்றஅக்டோபர் 30 ம் தேதி நடைபெற இருக்கு...
மஹாளய அமாவாசையை முன்னிட்டு தங்களின் குழந்தைகள் நலம் வேண்டி, முன்னோருக்கு திதி தர்ப்பணம் செய்யும் வழக்கத்தை நீண்ட நாட்களாக ஹிந்துக்கள் (அனைத்து சாதியினரும்) தங்களது வழக்கமாக, கடமையாக,...
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க அங்கம் வகித்தபோது, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தார். அப்போது, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக,...
எண்ணுவதெல்லம் உயர்வுள்ளல் என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப தமிழகத்தை உயர்த்துவோம் என்று ஸ்டாலின் சொல்வது தவறில்லை, வரவேற்கிறோம். ஆனால் Made in India விற்கு நிகராக Made in...
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அண்மையில் அளித்த பேட்டியில், உத்தரப் பிரதேச மாநிலம் பாஜக அரசிற்கு முன் முன்பு ஆறாவது பெரிய பொருளாதாரமாக மாநிலமாக இருந்தது....
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மாவட்டம் தோறும் பாஜக கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். மேலும் மாவட்டம் தோறும் செயல் வீர்கள் கூட்டம் நடத்தி கட்சியை...
நீட் தேர்வு குறித்த உண்மைகளைப் பேச பாஜகவை அனுமதிக்கவில்லை தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் (13-9-2021) நிறைவுப் பெற்றது. நிறைவு நாளான இன்று நீட்...
மறைக்கப்படும் சமூக பிரச்சனையை திரைப்படங்களை இயக்கி வருகிறார் இயக்குனர் மோகன். அவரின் 3 வைத்து படம் ருத்ர தாண்டவம். சில வருடங்களுக்கு முன் ஜி. ஜி.எம். ஃபிலிம்ஸ்...
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் ஏற்படும் அமளிகள் குறித்து தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, பொதுவாழ்வில் கண்ணியத்தைக் காப்பாற்றி, இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழுமாறு மக்கள் பிரதிநிதிகளை அவர் கேட்டுக்கொண்டார். பெங்களூருவில் உள்ள எம் எஸ் ராமையா குழுமத்தின் தலைவர் திரு எம் ஆர் ஜெயராமுக்கு ‘சர் எம் விஸ்வேஸ்வரய்யா நினைவு விருதை' வழங்கிய பிறகு, மாநிலங்களவை தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் குடியரசு துணைத் தலைவர், அண்மையில் நாடாளுமன்றத்திலும் தமிழகம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் சட்டமன்றங்களிலும் ஏற்படும் நிகழ்வுகளால் தாம் மிகுந்த வருத்தம் அடைந்ததாகக் கூறினார். நாடாளுமன்றத்தில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், ஒரு சில உறுப்பினர்களின் மோசமான நடவடிக்கையால் தாம் மிகவும் கவலை அடைந்ததாகத் தெரிவித்தார். சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடையூறு அளிக்கும் செயல்பாடுகளைக் கண்டித்த திரு நாயுடு, நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும் விவாதம் மேற்கொள்ளவும், ஆலோசனை நடத்தவும், முடிவுகளை மேற்கொள்வதற்குமான தளமே தவிர இடைஞ்சல்களை ஏற்படுத்துவதற்கான இடமல்ல என்று கூறினார். மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கும் அதே வேளையில் மக்களின் தீர்ப்பிற்கும் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “உடல் ரீதியாக எவரையும் உங்களால் நிர்ப்பந்திக்க முடியாது”, என்றார் அவர். சர் எம் விஸ்வேஸ்வரய்யா போன்ற மாபெரும் நபர்களை உத்வேகமாகக் கொண்டு, நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமையான யோசனைகளை மேற்கொள்ளுமாறு இளம் தலைமுறையினரை அவர் கேட்டுக்கொண்டார். தற்சார்பு இந்தியாவை நோக்கி முன்னேறும் வேளையில், வறுமையை ஒழிக்கவும், மண்டல ரீதியான ஏற்றத்தாழ்வுகளைக் களையவும், வலுவான நாட்டை கட்டமைக்கவும் இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் கூறினார். மேலும், இளைஞர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் சிறப்பாக செயல்படவும் பாடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பெங்களூருவின் விதான் சவுதாவில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மாநில ஆளுநர் திரு தாவர்சந்த் கெலாட், முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, மக்களவை உறுப்பினர் திரு பி சி மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
