Get real time update about this post category directly on your device, subscribe now.
மிகமோசமான ஊழல் ஆட்சியை நடத்தியதால், கடந்த பத்தாண்டுகளாக திமுகவால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை! இந்நிலையில் தற்போது எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று தவியாய் தவிக்கிறது...
பாரத பிரதமரே பாராட்டி விட்டு சென்றது எங்களுக்கு எனர்ஜியாக இருக்கிறது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் மதுரையில்...
திமுக தலைவர் ஸ்டாலின் கனவில் கூட எக்காலத்திலும் முதல்வராக முடியாது. அவரது கனவு, கனவாக தான் இருக்கும். நனவாகாது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், விலைவாசி உயரும், மின்வெட்டு...
திமுக நிர்வாகி மீது ஸ்டாலினிடம் அளித்த நில அபகரிப்பு புகார்… நாகப்பட்டினம், வடக்கு பொய்கைநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி. இவருடைய 39.5 சென்ட் நிலத்தை, கீழையூர் திமுக...
சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்ட வரி ஆலோசகர் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட கும்பல் ஒன்றை சென்னை வெளிப்புற மத்திய ஜிஎஸ்டி ஆணையரகத்தின் அமலாக்கம் மற்றும் இணக்க மேலாண்மை பிரிவு கைது செய்துள்ளது. 24 போலி நிறுவனங்களின் வாயிலாக போலி ரசீதுகள் மூலம் ரூ.299 கோடியும், இதர நிறுவனங்களுக்கு சட்டவிரோத உள்ளீட்டு வரி கடனை வழங்கியதன் மூலம் ரூ. 53.35 கோடியும் மோசடி செய்யப்பட்டுள்ளது தொழில்நுட்ப உதவியோடு நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முதல் முறையாக, ஒட்டுமொத்த கும்பலையும் (அதன் மூளையாக செயல்பட்டவர் உட்பட), அமலாக்கம் மற்றும் இணக்க மேலாண்மை பிரிவு கைது செய்துள்ளது. தீவிர விசாரணை, பல்வேறு இடங்களில் நன்கு திட்டமிடப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள், தொழில்நுட்பத்தின் பயன்பாடு, சாத்தியமுள்ள அனைத்து ஆதாரங்களையும் சேகரித்தல் ஆகியவற்றின் மூலம் இந்த நடவடிக்கை சாத்தியமாகியுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதால், மோசடியின் மதிப்பு இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021 பிப்ரவரி 12 அன்று கைது செய்யப்பட்ட இந்த கும்பலின் உறுப்பினர்கள், தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றங்களுக்கான மாண்புமிகு நீதிபதி II முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பின்பு இவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதர நபர்களின் கேஒய்சி ஆவணங்களை பயன்படுத்தி இந்த மோசடி செய்ததும், போலி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி பதிவு உள்ளிட்டவற்றை வரி ஆலோசகர் செய்து தந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கடன் மோசடிகளுக்காகவே தொடங்கப்பட்ட இந்த போலி நிறுவனங்கள், சரக்குகள் மற்றும் சேவைகளை வழங்காமலேயே போலி ரசீதுகளை பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளன. இவற்றின் மூலம் பலனடைந்த நிறுவனங்கள் குறித்தும், வேறு யாரேனும் இதில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும், அண்ணா நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் செயல்படும் உதவி மையத்தை நேரடியாகவோ, தொலைபேசி மூலமோ வரி செலுத்துவோர் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: 26142850 மற்றும் 26142852. மின்னஞ்சல்: Sevakendra-outer-tn@gov.in கூடுதல் ஆணையர் திருமதி. பி ஜெயபாலசுந்தரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை பர்கிட் மாநகரம் அருகிலுள்ள புதுமனை கிராமத்தில் முஸ்லீம் - இந்து மாணவர்களிடையே கிரிக்கெட் விளையாட்டு பிரச்சனை. இந்து மாணவர்கள் மீது தாக்குதல் கடைக்கு சென்ற...
இந்து முன்னணி உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மேற்கு மேலேரி கிராமத்தில், கடந்த ஆறு மாதங்களாக கிறிஸ்தவ மதமாற்ற கும்பல் ஜெபக்கூட்டம் நடத்தியதை இந்து...
மனிதர்களை மாற்றி வந்த கிறிஸ்தவ மிஷநரிகளின் கும்பல் இன்று ஒரு படி மேல சென்று ஊரின் பெயர்களையே மாற்றி வருவது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும்...
கோவை தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசியதாவது. பிரதமர் சென்னை வந்த...
தி.மு.க., மகளிர் அணி செயலாளர் கனிமொழி, எம்.பி., திருப்பூரில், 12ம் தேதி திமுக சார்பில் தேர்தல் பிரசாரம் செய்தார். போக்குவரத்து நெருக்கடி மிகுந்த குமரன் ரோட்டில், வாகனத்தில்...
