செய்திகள்

Get real time update about this post category directly on your device, subscribe now.

கோவையை கலக்கி வரும் வானதி சீனிவாசன்! மக்களிடையே வரவேற்பை பெற்ற #தாமரையின்துளசிபயணம்

கோவையை கலக்கி வரும் வானதி சீனிவாசன்! மக்களிடையே வரவேற்பை பெற்ற #தாமரையின்துளசிபயணம்

பா.ஜ.க வில் மாநிலத் துணைத்தலைவராக இருக்கும் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் தற்போது கோவையில் துளசி பயண யாத்திரையை இந்த மாத தொடக்கத்தில் தொடங்கியுள்ளார். இந்த யாத்திரை...

ஆத்மனிர்பர் பாரத் மகாத்மா காந்தியின் தொலை நோக்கு பார்வையான சுதேசி இயக்கமும் கிராமப்புற மறுமலர்ச்சியும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.

ஆத்மனிர்பர் பாரத் மகாத்மா காந்தியின் தொலை நோக்கு பார்வையான சுதேசி இயக்கமும் கிராமப்புற மறுமலர்ச்சியும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.

தன்னிறைவு கொண்ட சமுதாயத்தை உருவாக்க மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் முழுமூச்சுடன் செயல்படுத்தப்பட வேண்டும்  என்று காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக  துணைவேந்தர் டாக்டர் பி சுப்புராஜ் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில்,  மகாத்மாவின் கனவை நனவாக்குதல் என்ற தலைப்பில் இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மக்கள் தொடர்பு அலுவலகம், வேலூர் மற்றும் பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை இணைந்து நடத்திய இணைய கருத்தரங்கில் அவர் இதனைத் தெரிவித்தார். ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு, பதினாறாம் நூற்றாண்டு வரை தன்னிறைவடைந்த நாடாகவே இந்தியா இருந்தது என்று கூறிய அவர், சிலப்பதிகாரம் உள்ளிட்ட எந்த ஒரு நூலிலும் பட்டினி,  கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெற்றதாகக் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்தார். பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் தொழிற்புரட்சியைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு காலனிகளில் இருந்து கச்சாப் பொருட்களை இறக்குமதி செய்து அவர்களுக்கு தயாரித்த பொருட்களை விற்றார்கள். அது முதற்கொண்டு தன்னிறைவு சமுதாயமாக இருந்த இந்தியா ஆங்கிலேயர்களையும் மேற்கத்திய நாடுகளையும் சார்ந்திருக்கத் தொடங்கியது என்றும் அவர் மேலும் கூறினார். ஆங்கிலேயரின் இந்தப் போக்கு காந்தியை வெகுண்டெழச்செய்தது. அவர் இந்தியனாய் இரு, இந்திய பொருட்களையே வாங்கு என்ற சுதேசி இயக்கத்தை தொடங்கினார். இதன் காரணமாக ஏராளமான மக்கள் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஆடைகளைத் தீயிட்டுக் கொளுத்தவே, இங்கிலாந்தில் நெசவுத்தொழில் பெரும் பாதிப்படைந்ததாக அவர் தெரிவித்தார் சிறு தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து அவற்றை மேம்படுத்த மத்திய அரசு ஆத்மனிர்பர் பாரத், ஸ்வச்ச் பாரத் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்று துணைவேந்தர் மேலும் கூறினார். நிகழ்ச்சியில் பேசிய காந்திகிராம கிராமிய  பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் டாக்டர் டி. ரவிச்சந்திரன், மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை எடுத்துக்கூறினார். எவ்வளவுதான் சுதந்திரத்திற்காக மகாத்மா காந்தி போராடினாலும் அவர் பதவி ஆசையற்று  இருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார். மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, பராக் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்களும்  காந்திய வழியைப் பின்பற்றுவதாக அவர் தெரிவித்தார். முசோலினியும், காந்தியும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக குரல் கொடுத்தாலும்,  காந்தியின் அகிம்சைப் போராட்டத்தை முசோலினி ஏற்கவில்லை, இதேபோல் ஹிட்லரிடமும் அகிம்சையைக் கடைபிடிக்குமாறு மகாத்மா காந்தி கடிதங்களை எழுதியதாக அவர் மேலும் குறிப்பிட்டார். அனைத்து வயதினரும் மகாத்மாவின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இணைய கருத்தரங்கில் உரையாற்றிய காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தின்  ஊரகத் தொழில் மேலாண்மைத் துறை இயக்குனர் டாக்டர் ஆர் சீரங்கராஜன், தன்னிறைவு கொண்ட சமுதாயத்தை உருவாக்குவது குறித்து கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். மாசற்ற, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் செயல்படும் ஊரகத் தொழில் துறைகளுக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆண்டுக்கு குறைந்தது பத்தாயிரம் ரூபாய் அளவிலாவது கதர் ஆடைகளையும் உள்ளூர் மக்கள் தயாரித்த சோப்பு,, மருந்து, எண்ணெய் முதலியவற்றையும் அவர்களிடமிருந்து வாங்குமாறு அவர் வலியுறுத்தினார். முன்னதாக தொடக்க உரை நிகழ்த்திய சென்னை மண்டல பத்திரிக்கை தகவல் அலுவலக இயக்குனர் திரு குருபாபு பலராமன், மகாத்மா காந்தி எளிய வாழ்வு வாழ்ந்தார் என்றும் தொலைநோக்கு பார்வை கொண்டிருந்தார் என்றும் குறிப்பிட்டார். மேலும் அவர் மகாத்மா காந்தியின் அதிகாரப் பங்கீடு, அகிம்சை, பொறுப்புத் தன்மை முதலிய பண்புகள்,  எக்காலத்திற்கும் சமுதாயத்திற்குத் தேவை என்று வலியுறுத்தினார். வரவேற்புரை நிகழ்த்திய சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இணை இயக்குனர் திரு ஜே காமராஜ், காந்திஜி துணிவுடனும், நெஞ்சுறுதியுடனும், செயல்பட்டார் என்றும், அவரது வாழ்க்கை வருங்கால சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக, மறைந்த மத்திய அமைச்சர் திரு ராம் விலாஸ் பஸ்வானின் மறைவிற்கு இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கேரளாவில் 13 வயது சிறுமியை கூட்டு சேர்ந்து கற்பழித்த கயவர்கள்! நான்கு பேர் கைது!

கேரளாவில் 13 வயது சிறுமியை கூட்டு சேர்ந்து கற்பழித்த கயவர்கள்! நான்கு பேர் கைது!

கொரோனாவால் நாடு முழுவதும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது அதிகமாகிவிட்டது. ஆன்லைன் வகுப்பு என பள்ளிகளும் இறங்கி விட்டது. இதன் காரணமக மாணவ...

நீர்நிலைகளின் மேல் பறக்கும்  ‘சீ ப்ளேன்’விமான சேவை ! சென்னை டு கன்யாகுமரி! வெளிவந்த தகவல் !

நீர்நிலைகளின் மேல் பறக்கும் ‘சீ ப்ளேன்’விமான சேவை ! சென்னை டு கன்யாகுமரி! வெளிவந்த தகவல் !

தமிழகத்தில் பல்வேறு தேசிய நெடுஞசாலை பணிகள் நடைபெற்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மத்திய அரசு பாலங்கள் கட்டி வருகிறது, விரைவாகவும் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு...

இதெல்லாம் பினராயி விஜயனுக்கு தெரியும்! போட்டு கொடுத்த தங்க கடத்தல் ராணி ஸ்வப்னா சுரேஷ்! குற்றப்பத்திரிகையில் பினராயி பெயர்!

இதெல்லாம் பினராயி விஜயனுக்கு தெரியும்! போட்டு கொடுத்த தங்க கடத்தல் ராணி ஸ்வப்னா சுரேஷ்! குற்றப்பத்திரிகையில் பினராயி பெயர்!

கேரள மாநிலத்தில் , முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. கேரளாவை உலுக்கி வரும் பிரச்சனை என்று பார்த்தால் சொப்னாவும் தங்கக்...

எடப்பாடியிடம் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்டு கெஞ்சிய தி.மு.க! இது தேவையா உதயநிதி!

எடப்பாடியிடம் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்டு கெஞ்சிய தி.மு.க! இது தேவையா உதயநிதி!

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி, அநாகரிகமாக பேசுவது வாடிக்கையாகிவிட்டது. எதோ டீ கடையில் நின்று அரசியல் பேசுவது போல் நாகரீகமற்ற பதிவுகளை டுவிட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்....

எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர் – பன்னீர்செல்வம் அறிவிப்பு!

 அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து நீண்ட ஆலோசனை நடைபெற்று வந்தது. இதனிடையே கட்சியின் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு 7-ம் தேதியான இன்று வெளியாகும்...

இரண்டு நாள் இந்திய-கனடா வேளாண் தொழில்நுட்ப மாநாடு தொடங்கியது

இரண்டு நாள் இந்திய-கனடா வேளாண் தொழில்நுட்ப மாநாடு தொடங்கியது

ஒரே தேசம் ஒரே சந்தையை உருவாக்குவதற்கான கொள்கை சீர்திருத்தங்கள், சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகளை பாதுகாப்பதற்காக சரியான நடவடிக்கைகளுடன் கூடிய ஒப்பந்த விவசாயம், ரூபாய் ஒரு லட்சம் கோடி விவசாய உள்கட்டமைப்பு நிதி ஆகியவை பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் அறிவிக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கைகள் என்று மத்திய வேளாண், விவசாயிகள் நலம், ஊரக வளர்ச்சி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறினார். இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய அரசின் வெளியுறவுத்துறை ஆகியவற்றுடன் இணைந்து, இந்திய கனடா வர்த்தக சபை ஏற்பாடு செய்த இரண்டு நாள் இந்திய-கனடா வேளாண் தொழில்நுட்ப மெய்நிகர் மாநாட்டில் தொடக்க உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார். ஆன்லைன் சந்தைகள் மற்றும் திறன்மிகு வேளாண்மையை உருவாக்க இந்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், விவசாயத்துறையை ஒரு முதலீட்டு வாய்ப்பாக மாற்ற இந்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் திரு தோமர் தெரிவித்தார். https://www.youtube.com/watch?v=sxR0LO9tb4A&t=4s கடந்த ஆறுமாத சர்வதேச பெருந்தொற்று காலத்தில் இந்திய விவசாயத் துறையில் குறிப்பிடத்தகுந்த சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் மேலும் கூறினார். வேளாண் தொழில்நுட்ப துறையில் மட்டுமே 450க்கும் மேற்பட்ட புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) இந்தியாவில் இருப்பதாக அமைச்சர் கூறினார். உலகில் தொடங்கப்படும் ஒன்பது புது நிறுவனங்களில் ஒன்று இந்தியாவில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய கனடா அரசின் வேளாண் மற்றும் விவசாய உணவுகள் அமைச்சர் திருமிகு மேரி கிளவுட் பிபு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

வன உயிர்களை பாதுகாப்பதற்கும், இணக்கத்தோடு இணைந்து வாழ்வதற்குமான உறுதியை வலியுறுத்துவதற்கான நிகழ்வே வன உயிர்கள் வாரம்: பிரதமர் மோடி.

'புலித் திட்டம்' மற்றும் 'யானைத் திட்டம்' ஆகியவற்றின் வெற்றியை தொடர்ந்து அருகிவரும் உயிரினங்களை பாதுகாப்பதற்காக 'சிங்கத் திட்டம்'  மற்றும் 'டால்பின் திட்டம்' ஆகிய பிரத்யேக திட்டங்களை நாடு செயல்படுத்தி வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். வன உயிர்கள் வாரத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த திட்டங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் விளைவுகளை எட்டுவதற்காக அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் கோரினார். அமைதி மற்றும் அகிம்சையின் அடையாளமாக விளங்கிய மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி கொண்டாடப்படும் வன உயிர்கள் வாரம், வன உயிர்களை பாதுகாப்பதற்கும், அனைத்து உயிர்களும் இணக்கத்தோடு இணைந்து வாழ்வதற்குமான உறுதியை வலியுறுத்துவதற்கான சரியான தருணம் என்று பிரதமர் கூறினார். https://www.youtube.com/watch?v=Lo1e27nR-yQ பாதுகாக்கப்பட்ட பகுதிகள் துடிப்புடனும் அதிக அளவிலும் விளங்கும் இன்றைய காலகட்டத்தில், வன உயிர்களின் பாதுகாப்பும் முன்னெப்போதையும் விட வலிமை பெற்று இருப்பதாக அவர் கூறினார். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்த திரு மோடி, வன உயிர்கள் செழிப்புடன் திகழ இத்தகைய பகுதிகள் அதிகரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆசிய சிங்கங்களின் கடைசி மக்கள் தொகை இந்தியாவில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கான இலக்கு முன்னதாகவே எட்டப்பட்டதாக கூறினார். நெகிழி கழிவு மேலாண்மைக்கு இந்தியா அளித்துவரும் முக்கியத்துவத்தை பற்றி குறிப்பிட்ட பிரதமர், நீடித்த வளர்ச்சிக்காகவும், வளமான பல்லுயிர் தன்மைக்காகவும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியின் பயன்பாட்டை குறைக்க இந்தியா முயற்சிகள் எடுத்து வருவதாக தெரிவித்தார். இடம்பெயரும் உயிர்களின் இல்லமாக இந்தியா திகழ்வதால் இந்த உயிர்களுக்கு உரிய முக்கியத்துவத்தையும், பாதுகாப்பையும் நாடு அளித்து வருவதாக திரு மோடி கூறினார். https://www.youtube.com/watch?v=sxR0LO9tb4A&t=4s\ உலகின் நிலப் பரப்பளவில் 2.4% உள்ள இந்தியா, உலக மக்கள் தொகையில் 17 சதவீதத்தை தன்னகத்தே கொண்டு இருப்பதாக கூறிய திரு மோடி, இந்தியாவின் வளர்ச்சி தேவைகள் மிகவும் அதிகமானவை என்றார். அதேசமயம் வன உயிர்கள் மற்றும் பல்லுயிர்களின் பாதுகாப்பும் அதே அளவுக்கு முக்கியமானது என்று அவர் கூறினார்.----                        ...

கற்பனைகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது! தெறிக்கவிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் !

கற்பனைகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது! தெறிக்கவிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் !

நேற்று பாஜக சார்பில் விவசாய அணியின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது, சிறப்பு அழைப்பாளராக நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் பங்கேற்றார் அப்போது வேளாண்...

Page 286 of 370 1 285 286 287 370

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x