Get real time update about this post category directly on your device, subscribe now.
மத்திய அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட வேளாண் சீர்திருத்தங்கள், விவசாயிகளுக்கு வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்று வர்த்தகம், தொழில்கள் மற்றும் ரயில்வே அமைச்சர் திரு பியூஷ் கோயல் வர்ணித்துள்ளார். தெலங்கானா...
சாலை விபத்துக்களில் உதவி செய்யும் கருணை உள்ளம் கொண்டவர்களை பாதுகாப்பதற்கான விதிமுறைகளை, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள், உதவி செய்பவர்களுக்கான உரிமைகளை வழங்குகிறது. விபத்துக்களில்...
பிரதமர் திரு. நரேந்திர மோடி 2020 அக்டோபர் 3 ஆம் தேதி காலை 10 மணிக்கு ரோட்டங்கில் அடல் சுரங்கப்பாதையைத் திறந்து வைக்கிறார். உலகில் மிக நீளமான சுரங்க நெடுஞ்சாலையாக இது இருக்கிறது. 9.02 கிலோ மீட்டர் நீளம்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைபொருள் கடத்தல் மற்றும் விற்பனை அதிகமாக நடைபெறுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளதால் மாவட்ட காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவஸ்தலம் பகுதியில்...
வீரத்துறவி இராமகோபாலன் மறைவொட்டி பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் ப செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:- இந்துக்களுக்காக வாதாடவும், போராடவும், பரிந்து பேசவும் தொடங்கப்பட்ட அமைப்புதான், இந்து முன்னணி பேரியக்கம். இதன் அமைப்பாளராக தனது 94-வது வயது வரை செயல்பட்டு வந்தவர் வீரத்துறவி ஐயா இராமகோபாலன். தமிழகத்தில் சிறுபான்மை ஓட்டு வங்கி காரணமாக பெரும்பான்மை இந்துக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அரசியல் கட்சிகள் நடத்தி வருகின்றனர். இந்துக்கள் தங்களின் உரிமைகளுக்காகவும், நியாயமான கோரிக்கைகளுக்காகவும் குரல் கொடுக்க நாதியற்றவர்களாக இருந்ததை பார்த்த வீரத்துறவி ஐயா இராமகோபாலன், இந்துக்களின் உரிமைகளைப் போராடி பெறுவதற்கு ஓர் அமைப்பு தேவை என்பதை உணர்ந்தார். அதன் காரணமாக ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான், இந்து முன்னணி பேரியக்கம். இந்து முன்னணியை தோற்றுவித்தவுடன், ஐயா தாணுலிங்க நாடாரை கண்டெடுத்து, அவரை இந்து முன்னணியின் முதல் தலைவராக பொறுப்பேற்று செயல்பட வைத்தார் வீரத்துறவி ஐயா இராமகோபாலன். ஐயா தாணுலிங்க நாடார், தனது இறுதி மூச்சு வரை இந்து முன்னணியின் தலைவராக இருந்து இந்துக்களுக்காக போராடினார்கள், வாதாடினார்கள், பரிந்து பேசினார்கள். வீரத்துறவி ஐயா இராமகோபாலன், 1927-ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் சீர்காழியில் பிறந்தார். ஆர்.எஸ்.எஸ் பேரியக்கத்தின் பொது சேவை மற்றும் தேச தொண்டால் இயக்கப்பட்டு, தான் பார்த்து வந்த மின்சாரத்துறை அரசு வேலையை உதறி தள்ளிவிட்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் முழு நேர ஊழியராக தன்னை இணைத்துக் கொண்டார். 1948-இல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தடை செய்யப்பட்ட போதும், 1975-ஆம் ஆண்டு அவசரநிலை காலகட்டத்திலும் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வழிநடத்தியவர் வீரத்துறவி ஐயா இராமகோபாலன். இந்து முன்னணி பேரியக்கம் தொடங்கப்பட்ட பிறகு, முழு நேரமும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்துக்களுக்காக குரல் கொடுத்து வந்தார். இதன் காரணமாக 1984-ஆம் ஆண்டு மதுரை ரயில் நிலையத்தில் வைத்து வீரத்துறவி ஐயா இராமகோபாலன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அதிர்ஷ்டவசமாக ஐயா உயிர் தப்பினார். இருந்தாலும் கழுத்திலும், தலையிலும் பலத்த வெட்டுகளால் ஏற்பட்ட தழும்புகள் இருந்தன. அவற்றை மறைப்பதற்காகதான் அவர், இறுதிவரை தலையில் காவி தொப்பியை அணிந்து வந்தார். https://www.youtube.com/watch?v=sxR0LO9tb4A இன்று தமிழகமெங்கும் இந்துக்கள் மத்தியில் மாபெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது என்றால், அதற்கு முழுமுதற் காரணம் வீரத்துறவிதான். எங்களைப்போன்ற லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் ஊட்டியவர் வீரத்துறவி ஐயா இராமகோபாலன்தான். எங்களுக்கெல்லாம் முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் அவர்....
நாடக கலையில் நடிப்பு என்பது ஒரு சிரமான இடம். கதாரிசியன் மனதில் இருக்கும் கற்பனை பிம்பத்துக்கும், ஒரு எழுத்தாளன் எழுதும் வரிகளுக்கும் , இயக்குநர் வைக்கும் காட்சிகளுக்கும்,...
ராஜாராம் ஆப்கானிய ஹிந்து. இவருடைய முன்னோர்கள் காலந் தொட்டே ஆப்கானிஸ்தானில் உள்ள கஜினி நகரில் வாழ்ந்து வருபவர்கள். 1980 கள் வரை ஆப்கானின் முக்கிய நகரங்கள் பலவற்றில்...
இவர் அறியாத ஒரு சொல் அச்சம். அதிகாலையில் எழுந்து தினசரி 1008 காயத்ரி ஜபம். இடைவிடாத உழைப்பு. எப்படி காந்தி சுதந்திர போராட்டத்தை சாமானிய மக்களிடையே எடுத்து...
"நாட்டின் சட்டத்தை மீறுவதற்கு மனித உரிமையை உபயோகிக்காதே" என்று இந்தியா விரோதி, இந்து விரோதி ஆம்னெஸ்டி பற்றி உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது 2018இல் ஆம்னெஸ்டி...
"ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்" இடம் பெயரும் தொழிலாளர்களின் பசியை போக்க மத்திய அரசு ஒரே நாடு,...
