கேரள முன்னாள் முதல்வர் சாண்டி மீது பெண் தொழிலதிபர் பாலியல் புகார் சிபிஐ வழக்கு பதிவு.

கேரளாவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொழிலதிபர் சரிதா நாயர் கடந்த 2013-ல் கைது செய்யப்பட்டார்.

இவர் கடந்த 2013, ஜூலை 19-ம்தேதி, எர்ணாகுளம் காவல் ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டி, அவரது 2 அமைச்சர்கள், 2 முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோகம் மற்றும்ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.இதுகுறித்து பினராயி விஜயன் தலைமையிலான முந்தைய ஆட்சியில் மாநில குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் எம்.பி.க்கள் அடூர் பிரகாஷ், ஹைபி ஈடன் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ ஏ.பி. சூரிய ஊழல் வழக்கு தொடர்பாக ஒரு பெண் தொழில்முனைவோரின்.

சிபிஐ திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள தலைமை நீதித்துறை நீதிமன்றங்களில் எஃப்ஐஆரை சமர்ப்பித்தது. சிபிஐயின் திருவனந்தபுரம் பிரிவு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.முன்னதாக, மாநில அரசு இந்த வழக்குகளை சிபிஐ -யிடம் ஒப்படைத்தது.

புகார்தாரர், சோலார் திட்டங்களைப் பற்றி தங்களைச் சந்திக்கச் சென்றபோது குற்றம் சாட்டப்பட்டவர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாகக் கூறினார்.முறைகேடு பெரும்பாலும் அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ குடியிருப்புகள், எம்எல்ஏ விடுதிகள் மற்றும் ஹோட்டல் அறைகளில் நடந்தது.அவர்கள் மீது போலீசார் 2018 ல் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்குகளை சிபிஐ விசாரிக்க, பினராயி விஜயன் அரசு கடந்த ஜனவரியில் பரி்ந்துரை செய்தது. இந்த நிலையில் உம்மன் சாண்டி, காங்கிரஸ் எம்.பி.க்கள், கே.சி.வேணுகோபால், ஹைபி ஈடன், அடூர் பிரகாஷ், அப்துல்லா குட்டி ஆகிய 5 பேர்மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version