Friday, June 13, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட செலவில் 65 சதவீதத்தை அறிவித்து மத்திய அரசு.

Oredesam by Oredesam
October 5, 2024
in செய்திகள்
0
சென்னை – நாகர்கோவில் வந்தேபாரத் ரயிலை வரும் 31ல் துவக்குகிறார் பிரதமர் மோடி
FacebookTwitterWhatsappTelegram

1.  மொத்தம் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டுச் செலவில் ‘மத்திய துறை’ திட்டமாக,  சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

2. இதுவரை இந்தத் திட்டம்,மதிப்பிடப்பட்ட திட்டச் செலவில்  சுமார் 90 சதவீதம் அளவிற்கு திட்ட நிதியுதவி முதன்மையாகத் தமிழ்நாடு அரசின் பொறுப்பு என்ற நிலையில்  ‘மாநிலத் துறை’ திட்டமாக செயல்படுத்தப்பட்டு வந்தது.  மெட்ரோ ரயில் கொள்கை 2017-ன் படி, நிலத்தின் விலை மற்றும் சில பொருட்களைத் தவிர்த்து, திட்டச் செலவில் 10 சதவீதம்  நிதியளிப்பதே மத்திய அரசின் பங்காக இருந்தது.  இருப்பினும், இருதரப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து  மாநில அரசு ரூ.32,548 கோடி கடனாக நிதி திரட்டுவதில் மத்திய அரசு அதற்கு நேரடியாக உதவி செய்துள்ளது. இதில் இதுவரை சுமார் ரூ.6,100 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

READ ALSO

மொசாத்… கதையல்ல நிஜம்… ஈரானின் அணு ஆயுத திட்டத்தையே காலி செய்தது இஸ்ரேல் ? பின்னணி என்ன?

கமலஹாசனை ஓரம் கட்டிய காளி வெங்கட்,விமல் ! தக் லைஃபை ஓரங்கட்டி மாஸ் காட்டிய சம்பவம்! ஆண்டவருக்கு ஒரே அசிங்கமா போச்சு குமாரு!

3.   சமீபத்திய ஒப்புதலின் மூலம், சென்னை மெட்ரோ ரயில் 2-ம்  கட்டத்திற்கான மதிப்பீட்டுச் செலவில்   ஏறத்தாழ  65 சதவீதத்தை இப்போது மத்திய அரசு வழங்குகிறது. இந்த நிதியுதவியில் ரூ.33,593 கோடி முழுக் கடனும், சமபங்கு மற்றும் சார்நிலைக் கடனான (subordinate debt) ரூ.7,425 கோடியும் அடங்கும்.

4. எஞ்சிய 35 சதவீத மதிப்பீட்டுச் செலவுக்கு  மாநில அரசு நிதியுதவி செய்யும்.

5. பன்னாட்டு மற்றும் இருதரப்பு மேம்பாட்டு முகமைகளிடமிருந்து பெறப்படும் கடன்கள் மத்திய அரசின் கடனாகக் கருதப்பட்டு, மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) க்கு நேரடியாக வழங்கப்படும்.

6. மத்திய அரசால் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு முன், திட்டத்திற்கான கடன் நிதி கிடைக்கச் செய்வது அல்லது ஏற்பாடு செய்வது மாநில அரசு  குறித்ததாக இருந்தது.

7. மத்திய அமைச்சரவை ஒப்புதலால், இதர வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.33,593 கோடி அளவுக்கு நிதியளிக்க மாநில அரசின் பட்ஜெட் நிதி ஆதாரம்  விடுவிக்கப்பட்டுள்ளது.

8. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, கடன், திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் மீது மறு பேச்சுவார்த்தை நடத்த, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (Japan International Cooperation Agency), ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank), ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank), புதிய வளர்ச்சி வங்கி (New Development Bank) ஆகிய இருதரப்பு மற்றும் பன்னாட்டு முகமைகளை நிதி அமைச்சகம் அணுகும். இதற்கான அம்சங்கள் வருமாறு:

(1) இந்தக் கடன்களை மாநில அரசுக்கானதாக இல்லாமல் மத்திய அரசுக்கானதாகக் கருதுதல்,

(2) சம்பந்தப்பட்ட முகமையிடமிருந்து கடன் தொகை மாநில அரசுக்கும் மாநில அரசின் பட்ஜெட்டிலிருந்து சிஎம்ஆர்எல் (CMRL) நிறுவனத்திற்கும் செல்லும் தற்போதைய வழிமுறைக்கு மாறாக, சம்பந்தப்பட்ட முகமையிடமிருந்து மத்திய அரசுக்கும் மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து பாஸ் த்ரூ உதவி (pass-through assistance) என்ற முறையில் நேரடியாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்  (CMRL) நிறுவனத்திற்கு செல்லும் வழிமுறையாக மாற்றியமைத்தல்

(3) சிஎம்ஆர்எல் மூலம் திட்ட செயலாக்க முகமையாக மாநில அரசு இருக்கும் இடத்தில் சிஎம்ஆர்எல் மூலம் திட்ட செயலாக்க முகமையாக மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் செயல்பட நியமித்தல்

9. கடன், திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்ளில் இந்த மாற்றங்களுக்கான நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. மாநில அரசின் ஒத்துழைப்புடன் இது விரைந்து முடிக்கப்படும்.

10. கடனை திருப்பிச் செலுத்தும் பொறுப்பு சிஎம்ஆர்எல் நிறுவனத்தைச் சார்ந்தது. திருப்பிச் செலுத்துதல், பொதுவாக குறைந்தபட்சம் 5 ஆண்டு மாரடோரியம் (moratorium) காலத்திற்குப்பின், அதாவது ஏறத்தாழ திட்டம் முடிந்த பின் தொடங்கும். கடனைத் திருப்பிச் செலுத்தும் நிலையில் சி.எம்.ஆர்.எல். இல்லாத பட்சத்தில், அந்த ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு ஏதுவாக அந்த நிறுவனத்திற்கு நிதி உதவி வழங்குவது மாநில அரசின் கடமையாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது .

ShareTweetSendShare

Related Posts

இஸ்ரேலின் தாக்குதல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது’  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
உலகம்

மொசாத்… கதையல்ல நிஜம்… ஈரானின் அணு ஆயுத திட்டத்தையே காலி செய்தது இஸ்ரேல் ? பின்னணி என்ன?

June 13, 2025
Thug Life Roast
சினிமா

கமலஹாசனை ஓரம் கட்டிய காளி வெங்கட்,விமல் ! தக் லைஃபை ஓரங்கட்டி மாஸ் காட்டிய சம்பவம்! ஆண்டவருக்கு ஒரே அசிங்கமா போச்சு குமாரு!

June 13, 2025
ArtOfPrediction
இந்தியா

விமான விபத்து துல்லியமாக கணித்த ஜோதிடர்..சொல்லி ஒருவாரத்தில் நடந்த துயர சம்பவம்! இணையவாசிகள் அதிர்ச்சி!

June 13, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

ஈரானின் அணுசக்தி நிலையங்களை பொளந்து கட்டிய இஸ்ரேல்! அதிகாலையில் சரமாரி அட்டாக்..கதிகலங்கிய ஈரான்!

June 13, 2025
🔴 ஏர் இந்தியா விமான விபத்து – 133 பேர் இறந்ததாக தகவல் ! இதுவரை உள்ள தகவல்கள்
செய்திகள்

🔴 ஏர் இந்தியா விமான விபத்து – 133 பேர் இறந்ததாக தகவல் ! இதுவரை உள்ள தகவல்கள்

June 12, 2025
Modi
இந்தியா

மோடி 3.0 ஓராண்டு நிறைவு: நக்சல் வேட்டை.. தொடரும் நலத் திட்டங்கள் அனைத்துறைகளிலும் அபரிமிதமான வளர்ச்சி!

June 10, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

உலக நாடுகளை திரும்ப செய்த அறிவிப்பு ! வல்லரசு நாடாக மாறும் இந்தியா!

May 13, 2020
OOSI BIRIYANI DMK

ஓசி பிரியாணி ஓட்டல் ஓனரை மிரட்டிய தி.மு.க நிர்வாகி! வைரல் வீடியோ! பிரியாணி பஞ்சாயத்து தான் பெரிய பஞ்சாயத்து!

October 23, 2021

வசந்தகுமார் மறைவுக்கு பாரதப் பிரதமர் மோடி,பொன்னார்,Hராஜா,தமிழிசை, மற்றும் தலைவர்கள் அஞ்சலி.

August 28, 2020
பிரதமர் மோடியின் இதயம் தமிழகத்திற்காகவே துடிக்கிறது.. ‘காசி தமிழ் சங்கமம்’ பற்றி பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு !

பிரதமர் மோடியின் இதயம் தமிழகத்திற்காகவே துடிக்கிறது.. ‘காசி தமிழ் சங்கமம்’ பற்றி பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு !

November 17, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • மொசாத்… கதையல்ல நிஜம்… ஈரானின் அணு ஆயுத திட்டத்தையே காலி செய்தது இஸ்ரேல் ? பின்னணி என்ன?
  • கமலஹாசனை ஓரம் கட்டிய காளி வெங்கட்,விமல் ! தக் லைஃபை ஓரங்கட்டி மாஸ் காட்டிய சம்பவம்! ஆண்டவருக்கு ஒரே அசிங்கமா போச்சு குமாரு!
  • விமான விபத்து துல்லியமாக கணித்த ஜோதிடர்..சொல்லி ஒருவாரத்தில் நடந்த துயர சம்பவம்! இணையவாசிகள் அதிர்ச்சி!
  • ஈரானின் அணுசக்தி நிலையங்களை பொளந்து கட்டிய இஸ்ரேல்! அதிகாலையில் சரமாரி அட்டாக்..கதிகலங்கிய ஈரான்!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x