2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கிசான் கிரெடிட் கார்டின் (Kisan Credit Card) அடிப்படையில் பசு கிரெடிட் கார்டு திட்டம் (Pashu Credit Card) தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திலும், விவசாயிகளுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
கால்நடை பராமரிப்பை மேம்படுத்துவதற்காக இந்த கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மீனவர், கோழி, செம்மறி மற்றும் ஆடு வளர்ப்பு, மாடு-எருமை வளர்ப்பு தொழிலில் ஈடுப்படும் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது.கால்நடை வளர்ப்பை மேம்படுத்துவதற்காக கால்நடை கடன் அட்டை திட்டத்தை ஹரியானா அரசு முதலில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வட்டி-இல்லா கடன் இந்த திட்டத்தின் கீழ், ரூ.1.60 லட்சம் வரை கடன்களுக்கு வட்டி வசூலிக்கப்படாது. அதாவது இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதில், மத்திய அரசு மூன்று சதவீத மானியத்தையும், மீதமுள்ள 4 சதவீத வட்டிக்கு ஹரியானா அரசு தள்ளுபடியையும் அளிக்கிறது. இந்த வழியில், இந்த திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட கடன் வட்டி இல்லாமல் இருக்கும். ஹரியானாவின் அனைத்து கால்நடை வளர்ப்பாளர்களும் விலங்கு கடன் அட்டை திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் பெறுவது எப்படி?
விலங்கு கடன் திட்டத்தின் கீழ், ரூ .1.60 லட்சம் வரை கடன் வாங்கும்போது, விவசாயி அல்லது மேய்ப்பர்கள் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை துணை இயக்குநருக்கு மட்டுமே பிரமாண பத்திரம் கொடுக்க வேண்டும். இதற்கு முன், விவசாயி தனது விலங்கையும் காப்பீடு செய்ய வேண்டும். இதற்கு 100 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.
எவ்வளவு கடன் பெறலாம்?
இந்த திட்டத்தின் கீழ், ஒரு மாடு வைத்திருக்கும் மாநில விவசாயிகளுக்கு ஒரு மாட்டுக்கு 40783 ரூபாய் வரை கடன் பெறலாம். இந்த கடன் 6 சம தவணைகளில் (ஒரு தவணைக்கு ரூ.6,797) வசூளிக்கும் நிபந்தனையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல், ஒரு எருமை மாடு வளர்ப்பு விவசாயிக்கு ரூ.60,249 வரை கடன் வழங்கப்படும். இந்த பணத்தை 1 வருடத்திற்குள் விவசாயிக்கு ஆண்டுக்கு 4% வட்டியுடன் திருப்பித் தர வேண்டும். சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு 100 சதவீதம் வட்டி விலக்கு வழங்கப்படும்.
ஒரு விவசாயி 1.60 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றால், அவருக்கு சாதாரண வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கும். இதற்காக, அவர் ஏதாவது அடமானம் வைக்க வேண்டும் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இங்கேயும், விவசாயி ஒரு வருடத்திற்குள் கடன் தொகையை செலுத்தினால், அவருக்கு வட்டி தள்ளுபடியின் பலன் கிடைக்கும்.