சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை முழு ஊரடங்கு..

வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு..

சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளில் ஞாயிறு முதல் செவ்வாய்கிழமை வரை முழு ஊரடங்கு..

5 மாநகராட்சிகளை தவிர பிற இடங்களில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும்..

முழு ஊரடங்கு சமயத்தில் 5 மாநகராட்சிகளில் மிக மிக அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி…

பெருநகரங்களில் நோய்த் தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதால் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்..

கொரோனாவை தடுக்க 5 மாநகராட்சிகளில் தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் நடவடிக்கை..

முழு ஊரடங்கு காலத்தில் 5மாநகராட்சிகளில் அரசு, தனியார் நிறுவனங்கள் (அத்தியாவசிய தேவை தவிர) எதுவும் செயல்படாது..

முழு ஊரடங்கை மீறுபவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்..

5 மாநகராட்சிகளிலும் நடமாடும் காய்கறி வாகனங்கள் மட்டுமே அனுமதி, பிற காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை…

Exit mobile version