தரமான சம்பவம் செய்த சென்னை அணி! ‘ருத்ரதாண்டவம்’ ஆடிய ருதுராஜ்! மும்பை அணியை பழிதீர்த்தது!

IPL 2021 OREDESAM

IPL 2021 OREDESAM

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல். 2021-ஆம் ஆண்டிற்கான எஞ்சிய ஆட்டங்கள் துபாயில் உள்ள மைதானத்தில் நேற்று மீண்டும் தொடங்கியது.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 2ம் கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கால் சொதப்பினார்கள். வரிசையாக நடையை கட்டினார்கள்.சென்னை அணியின் பலமான பேட்டிங் வரிசை டு ப்ளிசிஸ், மொயின் அலி, ரெய்னா, தோனி ஆகியோர் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்தனர்.அம்பத்தி ராயுடு காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார்.

சென்னை அணி 24 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் இணைந்த ருதுராஜ், ரவிந்திர ஜடேஜா ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. பின்னர் ருத்ரதாண்டவம் ஆடினார்
ருதுராஜ்

100 ரன்களை கடக்குமா சென்னை அணி என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஜடேஜா,ருதுராஜ்,பிராவோ ஆகியோரின் பொறுப்பான அதிரடி ஆட்டத்தால் 156 ரன்கள் குவித்தது. தனி ஆளாக போராடிய ருதுராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் 88 ரன்களை குவித்தார். இறுதியில், ரவீந்திர ஜடேஜா 26 ரன்களும், ப்ராவோ8 பந்துகளில் 23 ரன்களும் எடுத்தார்கள்

அடுத்து களமிறங்கிய மும்பை அணி சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறியது. குறிப்பாக ப்ராவோ, தீபக் சாஹர் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியாது மும்பை இந்தியன்ஸ்

இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வியை தழுவியது.

மும்பை அணிக்கு எதிராக சென்னை அணி சார்பில் அதிகபட்ச ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை ருதுராஜ் கெய்க்வாட் 88 ரன்கள் குவித்ததன் மூலம் படைத்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் மைக் ஹஸ்ஸி 86 ரன்கள் எடுத்திருந்ததே இதற்கு முன்பு சாதனையாக இருந்து வந்தது.

மைக்ஹஸ்ஸி கடந்த 2013-ஆம் ஆண்டு இந்த சாதனையை படைத்திருந்தார். 8 ஆண்டுகளாக நீடித்து வந்த மைக் ஹஸ்ஸியின் சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் நேற்று முறியடித்தார். நேற்றைய போட்டியில் 88 ரன்கள் குவித்ததன் மூலம் மும்பை அணிக்கு எதிராக தனிநபராக அதிகபட்ச ரன்களை குவித்த சென்னை வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

Exit mobile version