கொங்கு மண்டலம் ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவில் மிகவும் பிரசித்திபெற்ற கோவில். பல சிறப்புகளை அடக்கிய கோவில்.3000 வருடம் பழமையான கோவில் என அப்பகுதிவாசிகள் கூறுகின்றார்கள். ஆண்டுதோறும் லட்சணக்கணக்கான மக்கள் முருகனை தரிசித்து வருகிறார்கள். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் சென்னிமலை முருகன் கோவில் உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் இருக்கும் சென்னிமலையை ஏசுமலை என பெயர் மாற்றம் செய்வோம் என கிறிஸ்துவ முன்னனி பகிரங்கமாக மேடை போட்டு அறிவித்துள்ளது.இதனால் அப்பகுதி முருக பத்தர்கள் கொந்தளித்துள்ளார்கள்.
தினசரி பல ஆயிரம் முருக பக்தர்கள் தரிசனம் செய்யும் கொங்குநாட்டின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலுக்கே இந்த நிலை.என தங்களின் ஆதங்கத்தைசமூக வலைதள பக்கத்திலும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.சனாதன ஒழிப்பை தன்னுடைய லட்சியமாக கொண்டிருக்கும் முதல்வரும், சின்ன முதல்வரும் இதை தடுத்து நிறுத்த வேண்டி அனைத்து முருக பக்தர்களும் வரும் 13.10.23 அன்று சென்னிமலையில் மாபெரும் ஆர்பாட்டம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஆன்மீக பெரியோர்களே 3000 ஆண்டு பழமையான ஸ்ரீ அருணகிரிநாதர் திருப்புகழ் பாடப்பெற்ற 18 சித்தர்கள்
ஒருவரான பின்னோக்கு சித்தர் வாழ்ந்து முக்தியடைந்த ஸ்தலமாகிய நமது சென்னிமலை ஆண்டவர் பல நெடுங்காலமாக வீற்றிருந்து நமக்கெல்லாம் அருள்பாலித்து கேட்டவர்களுக்கு கேட்ட வரம் கொடுத்து கொண்டருக்கிறார்.
வழிவழியாக நமது பாட்டன். முப்பாட்டன் தொழுத சென்னிமலை ஆண்டவர் நமது குடும்பத்தில். ஒருவராக நமது இல்லத்திலும் உள்ளத்திலும்கலந்து அருள்பாலித்து கொண்டிருக்கிறார். இப்பழபட்ட மலையை சில சுயநல அரசியல்வாதிகளால் தூண்டிவிட்டு கிருஸ்துவ முன்னனி என்ற அமைப்பு கடந்த வாரம் இதை கல்வாரி மலை எனவும் இதை ஏசு மலையாக மாற்றுவோம் எனவும் மேடை போட்டு பேசியிருக்கிறார்கள்.
இதை கண்டிக்கும் வகையில் அனைத்து ஆன்மீக பெரியவர்களும், முருகபக்தர்களும்’ மற்றும் சென்னிமலை ஊர்பொதுமக்களும் இணைந்து, ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்து உள்ளார்கள்.எனவே அனைத்து பக்தகோடிகளும் குடும்பத்தோடு கலந்தூ கொண்டு எசன்னிமலையை காப்பாற்றும் இந்த புனித முயற்சியில் இணைந்து கொள்வோம்.