கேரள மாநிலத்தில் , முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. கேரளாவை உலுக்கி வரும் பிரச்சனை என்று பார்த்தால் சொப்னாவும் தங்கக் கடத்தல் விவகாரமும் தான்.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் கிளை அலுவலகத்தில் பணியாற்றும் சிலரின் உதவியுடன் தங்கக் கடத்தல் நடந்து வருவது சுங்கத்துறைக்கு தெரியவந்தது. சுதாரித்து கொண்ட சுங்கத்துறை விமான நிலையங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டது. அமீரகத்தில் இருந்து தூதரக அலுவலகத்திற்கு வந்த தூதரக சரக்கு(டிப்ளமேட்டிக் லக்கேஜ்) சோதனையை மேற்கொண்டது சுங்கத்துறை. அந்த சோதனையில் தங்க கட்டிகள்பிடிபட்டது இவை சட்ட விரோதமாக கடத்தப்பட்டது என்பதும் தெரியவந்தது.
இதுவரை தூதரகத்திற்கு வரும் பார்சல்களை சோதனை செய்யாமல் அனுப்ப வேண்டும் என முதல்வர் அலுவலகத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கடத்தலில் சிவசங்கரைப் பொறுத்தவரையில் முதல்வரின் முதன்மை செயலாளர் என்பதால் அடிக்கடி முதல்வருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். முதல்வர் மகள் தொடர்புடைய ‘ஸ்பர்க்ளர்’ என்ற அமெரிக்க கம்பெனியிடம், ஒன்றே முக்கால் லட்சம் கேரள மக்களுடைய அந்தரங்க உடல்நிலை பற்றிய டேட்டா பேஸ் எடுத்துக் கொடுத்த வழக்கில் இருந்து முதல்வரை காப்பாற்றியதும் இந்த சிவசங்கர் தான்.
தங்கக் கடத்தல் மாஃபியாக்களுடன் சிபிஎம்க்கு உள்ள தொடர்பை பார்க்கும் போது இது இன்று நேற்று தொடங்கியது அல்ல. கேரளாவைச் சேர்ந்த பிரபல தங்க கடத்தல்காரன் முஹம்மது பயாஸ் என்பவனுடன் நெருங்கிய தொடர்பு சிபிஎம் வட்டாரங்களுக்கு உண்டு.
இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், என்பவர் தான் இவர் கைது செய்யப்பட்டு திரிச்சூர் மாவட்டத்தின் விய்யூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிறையில் இருந்த ஸ்வப்னா சுரேஷுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் திரிச்சூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.