தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் போட்டோஷாப் செய்ப்பட்ட புகைப்படம் பதிவிட்டு பின்னர் அதை நீக்கிய சம்பவம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக் கடலில் நவம்பர் 9 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் கனமழை தொடரும் என அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் கடந்த ஞாயிறு மதியம் முதல் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
எழும்பூர், சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம், அண்ணாநகர், சைதாப்பேட்டை உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மழையில் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.தமிழகத்தில் தற்பொழுது பெய்யும் மழைக்கு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சிறு மழைக்கே அவதிப்படும் சென்னை இது போன்ற கனமழைக்கு கடும் பாதிப்படைந்துள்ளது. சென்னையில் பல பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. ஆளும் தி.மு.க அரசோ மழை நீரை வடிய வைக்க வழியின்றி மக்களை தண்ணீரில் தவிக்க விட்டுள்ளது.
மேலும் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஓட்டி செல்கிறார்கள். கடந்த வாரம் சாலையில் உள்ள குழியால் நிலை தடுமாறி அருகே சென்ற அரசுப்பேருந்து மோதி உயிரிழந்தார்.பலி சம்பவம் நடந்தும் கண்டுகொள்ளாத விடியல் அரசு தற்போது சென்னையை முழ்கடித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக முதல்வரின் அதிகாரப்பூரவ ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட இளங்கோ நகரில் மோட்டர் பம்ப் வைத்து தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுவதை பார்வையிடுவது போல் ஒரு புகைப்படம் பதிவிட்டிருந்தது. அனால் அது உண்மை புகைப்படம் அல்ல அந்த புகைப்படம் போட்டோஷாப் செய்து பதிவிட்டிருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து பா.ஜ.க செய்தி தொடர்பாளர் எஸ்.ஜி சூர்யா அவர்கள் அந்த பதிவினை டேக் செய்துஉ.பிஸ் போட்டோஷாப், போட்டோஷாப்ன்னு சலம்பிட்டு இருந்தானுவ, இப்ப என்னடான்னா நம்ம முதல்வரே போட்டோஷாப் படத்தை தான் பதிவிட்டுள்ளார். Poetic Justice. என பதிவிட்டார். அதனை தொடர்ந்து போட்டோ ஷாப் செய்யப்பட்ட புகைப்படம் தமிழக அதிகாரப்பூரவ முதல்வர் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ள சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் இதுகுறித்து தி.மு.கவினரை விமரிசித்தும் முதல்வரின் நடவடிக்கை குறித்தும் பாஜக செய்தி தொடர்பாளர் எஸ்.ஜி சூர்யா பல பதிவுகளை பதிவிட்டு வருகிறார். இன்று முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் கொளத்தூரில் மழை நிவாரணம் செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அவர் பதிவிட்டது போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் என நாம் சுட்டிக்காட்டியவுடன், கையும் களவுமாக பிடிபட்ட முதல்வர் அப்பதிவை ‘டெலிட்’ செய்து விட்டு ஓட்டம் பிடித்தார். வாழ்க்கை முழுக்க இனி எந்த உ.பி-யும் மத்த கட்சிக்காரனுங்கள போட்டோஷாப் பண்றவங்கன்னுலாம் பேசவே கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.

















