பணம் கொடுத்த சீனா ! தேச விரோத செய்திகளை பரப்பிய இந்திய செய்தி நிறுவனம்! விசாரணையை தீவிரப்படுத்தியது அமலாக்கத்துறை!

இந்தியாவில் செயல்பட்டு வரும் நியூஸ்கிளிக் எனப்படும் செய்தி நிறுவனம் சீன நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்று, இந்தியாவில் தேச விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் சில தினங்களுக்கு மமுன் செய்தி வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டே அமலாக்கத்துறையினர் நியூஸ்கிளிக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனை பெரும் பரபரப்பினை கிளப்பியது. இந்தியாவில் செயல்பட்டு வரும் நியூஸ்கிளிக் நிறுவனம் சட்டவிரோதமாக சீன போன்ற நாடுகளில் நிதி பெற்று செயல்பட்டு வந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டார்கள்.

சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கவில் வெளியாகும் பிரபலமான பத்திரிகையான ‘தி நியூயார்க் டைம்ஸ்’, நியூஸ் கிளிக் நிறுவனத்துக்கு சீனாவிடமிருந்து நிதி வருகிறது என்று செய்தி வெளியிட்டது. இது மீண்டும் பாரபரப்பை கிளப்பியது. இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை நியூஸ்கிளிக் நிறுவனம் மீதான தனது நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. வெளிநாடுகளிடமிருந்து நிதி பெற்றதற்காகன ஆவணங்களை கையப்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை.

நியூஸ்கிளிக் நிறுவனத்தின் முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்கயாஷ்தாவுக்குச் சொந்தமான ரூ.4.5 கோடி மதிப்புள்ள வீட்டையும் ரூ.41 லட்சம் நிரந்தர வைப்புத் தொகையையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நியூஸ்கிளிக் நிறுவனத்தின் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அமலாக்கத் துறை கூறுகையில், “2018 முதல் 2021 வரையிலான மூன்றாண்டு காலகட்டத்தில் அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்களிடமிருந்து நியூஸ்கிளிக் நிறுவனத்துக்கு ரூ.86 கோடி நிதியுதவி வந்துள்ளது. நியூஸ்கிளிக் நிறுவனத்துக்கு நிதியுதவி வழங்கிய நிறுவனங்களை ஆய்வு செய்கையில், சீன ஆதரவாளர் நெவில் சிங்கத்துக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

நியூஸ்கிளிக் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மீது மத்திய மந்திரி அனுராக் தாகூர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் 'நியூஸ்கிளிக் நிறுவனம் நெவில்லி ராய் சிங்கம் என்ற வெளிநாட்டவர் மற்றும் சீன நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்று வருவது தெரியவருகிறது. நெவில்லி ராய் சிங்கத்துக்கு சீன கம்யூனிஸ்டு கட்சி மற்றும் சீன ஊடக நிறுவனமான குழுமத்துடன் தொடர்பு உள்ளது' என குற்றம் சாட்டினார்.

நியூஸ்கிளிக் நிறுவனம் இலவச செய்தி என்ற பெயரில் பொய் செய்திகளை பரப்புவதாக குற்றம் சாட்டிய தாகூர், காங்கிரசும் பிற கட்சிகளும் இந்த நிறுவனத்தை ஆதரிப்பதாகவும் சுட்டிக்காட்டினார். ராகுல் காந்தியின் அன்புக்கடையில் சீன பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறை கூறினார்.
Exit mobile version