இந்தியாவுக்கும் நம் அண்டை நாடான சீனாவுக்கும் இடையில் கடந்த சில மாதங்களாக இரு தரப்பு உறவுகள் கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. கிழக்கு லடாக்கில் கீழ்த்தர சீனாவின் அவமான செயலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள சீன ஈடுபாகுகளை குறைக்க இந்தியா பல வித முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதுநாள் வரையில் ரயில்வே, நெடுஞ்சாலைகள் மற்றும் தொலைத் தொடர்பு போன்ற துறைகளில் சீனாவின் நிறுவனங்களை செல்வாக்கைக் கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் புது தில்லி மேற்கொண்டுள்ளது. இப்போது, மோடி அரசு சீன கல்வி நிறுவனங்களை நோக்கி தன் கவனத்தைத் திருப்பவுள்ளது.
இந்தியாவில் சீன நிறுவனங்களின் ஊடுருவல் தொடர்பாக ஜூலை 15 அன்று மறுஆய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், இந்திய கல்வித் துறையில் சீனாவின் செல்வாக்கைக் குறைக்கும் திட்டங்களை வகுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 15 ஆம் தேதி நடைபெற்ற சந்திப்பு முக்கியமாக இரண்டு துறைகளை இலக்காகக் கொண்டிருந்தது. அவை தொலைத் தொடர்புத் துறை மற்றும் கல்வித் துறையாகும். பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் சீன நிறுவனங்களுடன், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) மூலம் தேவையான ஒப்புதல்களைப் பெறாமல் பல கூட்டுறவுகளை மேற்கொண்டுள்ள பல நிகழ்வுகள் உள்ளன என்று பாதுகாப்பு அதிகாரிகள் உயர்மட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
பீஜிங்கால் நிதியுதவி வழங்கப்பட்டு, ஹான் சீன மொழியையும் சீன கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கும் பல கல்வி நுறுவனங்களை அதிகாரிகள் உதாரணமாகக் காட்டினர். பல காரணங்களுக்காக இந்த நிறுவனங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், இந்த கல்வி நிறுவனங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார இயந்திரங்களாக மாறியுள்ளன என்று கூறப்படுகிறது.
சீன கல்வி நிறுவனங்களைப் பற்றி இந்தியா மட்டும் யோசிக்கவில்லை. ஸ்வீடன் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் சீன ஒருங்கிணைப்புடன் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களை கண்காணித்து வருகின்றன. சில நாடுகள் இவற்றை மூடவும் தொடங்கிவிட்டன.
இந்தியாவைப் பொறுத்த வரை, பல பெரிய கல்வி நிறுவனங்களுக்கு சீன நிறுவனங்களுடன் பல்வெறு விதமான உடன்பாடுகள் இருப்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது. எனினும், இதன் பக்கம் தற்போது அரசின் கவனம் திரும்பியுள்ளது. கல்வித் துறையில் ஊடுருவல் என்பது மிகவும் அபாயகரமான ஒரு விஷயமாகும். அது மறைமுகமாக நமது நாட்டின் வரும் தலைமுரையினரை திசை திருப்புவது போன்றது.
இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், ரயில்வே, தொலைத் தொடர்புத் துறைக்குப் பிறகு, கல்வித் துறையிலும் சீனாவை ஒதுக்க அரசு எடுத்து வரும் முடிவுகள் தொலை நோக்குப் பார்வையுடன் எடுக்கப்பட்டவை, பாராட்டப்பட வேண்டியவை என்று கூறினால் அது மிகையல்ல!!
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















