பிரதமர் மோடியின் 9 ஆண்டுக்கால சாதனைக்கு எடுத்துக்காட்டு புதிய பார்லிமென்ட் கட்டடம். எனவே கட்டட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்க கூடாது. புதிய பார்லி., கட்டடத்தில் சோழர் காலத்தில் பயன்படுத்தியது போன்ற தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதினத்திடம் இருந்து 1947ல் பெறப்பட்ட செங்கோலை பிரதமர் மோடி வைக்க உள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
புதிதாக கட்டப்பட்டுள்ள பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் மோடி மே 28ம் தேதி நாட்டிற்காக அர்பணிக்கிறார். பார்லிமென்ட் திறப்பு விழாவை அரசியலாக்க விரும்பவில்லை. மக்களே முடிவு செய்துகொள்ளட்டும். பிரதமர் மோடியின் 9 ஆண்டுக்கால சாதனைக்கு எடுத்துக்காட்டு புதிய பார்லிமென்ட் கட்டடம். புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்க கூடாது.
பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவின் போது தமிழக செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்படும். இதற்காக தமிழகத்தில் இருந்து ஆதின குழு டில்லிக்கு பயணம் செய்து செங்கோலை பிரதமரிடம் ஒப்படைக்கும். இந்தியாவின் முதல் பிரதமர் நேருவிடம் ஒப்படைக்கப்பட்ட செங்கோலை பார்லிமன்றத்தில் பிரதமர் மோடி வைக்கிறார். 1947ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறிய போது நேருவிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது.
புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்ட, 60 ஆயிரம் தொழிலாளர்களையும் திறப்ப விழாவின் போது பிரதமர் மோடி கவுரவிப்பார். கட்டடம் திட்டமிட்டப்பட்ட படி, சரியான நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. நமது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நாகரிகத்தை நவீனத்துவத்துடன் இணைக்கும் அழகான முயற்சிதான். புதிய பார்லிமென்ட் கட்டடம். இவ்வாறு அவர் கூறினார்.