அனுமதியின்றி கிறிஸ்தவ மதபோதக கூடம்: தூத்துக்குடியில் இந்து முன்னணி புகார்!

தூத்துக்குடியில் அனுமதியின்றி கிறிஸ்தவ மதபோதக கூடம் கட்டப்படுவதாக இந்து முன்னணி மாவட்ட தலைவர் தாசில்தாரிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்து முன்னணி தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவராக இசக்கிமுத்து உள்ளார். இவர் தாசில்தார் செல்வக்குமாரிடம் நேற்று (ஜூலை 18) ஒரு புகார் மனு அளித்தார்.

அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகே, பெரியநாயகிபுரம் மெயின் ரோட்டில் தொழிற்சாலை போன்று ஒரு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தற்போது அதனை கிறிஸ்தவ மத போத¬னை கூடமாக மாற்றியுள்ளனர். அரசிடம் எவ்வித அனுமதியின்றி குடியிருப்பு பகுதியில் அமைக்கப்படும்.

இது போன்ற போதனை கூடத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேணடும். இவ்வாறு அவர் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

source Dinamalar

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version