திரைக்கு முன்னால் தொண்டு! திரைக்கு பின்னால் சுயநலம் ஊழல்!

சமீப காலமாக திரைத்துறையினருக்கு சேவை மனப்பான்மை,சமூக அக்கறை, சமூக விழிப்புணர்வு, சமுதாய சீர்திருத்தம் போன்ற செயல்களில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். இது ஒரு நல்ல அறிகுறி, இது போன்ற விழிப்புணர்வு, பொது மக்களிடையே துரிதமாக சென்றடைந்ததோடு மட்டுமின்றி,இது சமூகத்தில் ஒரு நேரடியான தாக்கத்தை உருவாக்குகின்றது. இதனால் நேரடியாகவோ மறைமுகமாகவோ சில நூறாயிரக் கணக்கான மக்கள் பயனடைந்து உள்ளனர். இது போன்ற சேவைகளை, பிற மனிதருக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு , வாயில்லா ஜீவன்களின் நலன் மற்றும் பாதுகாப்பிலும் அக்கறை காண்பித்து வருகின்றன.

இச்ச்செயல்கள் பெருமளவு வரவேற்கப்பட்டாலும், இந்த மனிதாபிமானசெயல்களில் , பயனாளிகள் பயனடைவதை விட, இதை பயன்படுத்தி கொள்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
உதவி என்ற திரைக்கு பின், சுயநலம் மேலோங்கி இருக்கிறது

இதை பிரதிபலிக்கும் விதத்தில், சமீபத்தில் கொரோன நோய் தோற்று கட்டுப்பாட்டில், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தாமாக முன்வந்து, உதவும் கரங்களாக செயல்பட்டு வருகின்றது. மனிதர்களுக்கு மட்டுமின்றி பல்வேறு ஜீவா ராசிகளுக்கும் தொண்டு நிறுவனங்கள் உணவளித்து வருகின்றன.

இவர்களின் தொண்டுகள் வார்த்தைகளில் அடங்காது. 2015-ல் வெள்ளம் வந்த பொது, தமிழ்நாட்டில் முகம் தெரியாத நபர்கள் கரம் கொடுத்து உதவியதை நாம் மறக்க முடியாது.

“ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.”

வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும்.என்பது வள்ளுவனின் வாக்கு.
ஒரு மனிதன் பசியுடன் இருந்தால், அவன் உதவியை நாடலாம், இது மனிதனால் புரிந்துகொள்ளத்தக்கது. சக ஜீவராசிகளின் பசியை தீர்க்கும் விதமாக ஒரு சில தொண்டு நிறுவனங்கள், அக்கறை செலுத்தி வருகின்றன. அவ்வாறான ஒரு தொண்டு நிறுவனம் “Kodaikanal Society for the Protection and Care for Animals” ஆகும்.

தற்போது கொரோன கட்டுப்பாட்டிலும், அவர்கள் தொண்டு செய்து வருகின்றன. வரலக்ஷ்மி சரத்குமார் கடந்த வாரம் இணையத்தளத்தில் கால்நடை சேவை மற்றும் இந்த தொண்டு நிறுவனத்தை ஆதரித்து பதிவிட்டு இருந்தார். இதை தொடர்ந்து இச்சேவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைப் பார்த்து தன்னார்வலர்கள் வரலக்ஷ்மியை தொடர்பு கொண்டு “Kodaikanal Society for the Protection and Care for Animals” தொண்டு நிறுவனம் ஜீவராசிகளுக்கான தீவனங்களை இலவசமாக பகிர்ந்தனர்.
இப்பதிவினை பார்த்து, பல்வேறு கால்நடை ஆர்வலர்கள் வரலக்ஷ்மி சரத்குமாரிடம் தொடர்பு கொண்ட போது இவர், இலவசமாக கிடைத்த தீவனத்தை, லாப நோக்கத்திற்காக விற்க முயற்சி செய்தது தெரியவந்தது. வேறு வழி இன்றி கால்நடை பட்டினியாக இருக்கக்கூடாது என்ற காரணத்தினால் கால்நடை ஆர்வலர்கள் இதனை பணம் கொடுத்து வாங்கி உள்ளனர். இதனை அறிந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் அதிர்ச்சி அடைந்ததோடு மட்டுமின்றி தங்களது வருத்தத்தையும் கண்டனத்தையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில் “
விலங்குகளின் பராமரிப்பு பாதுகாப்பாக குரல் கொடுப்போர் அதிலிருந்து பணம் சம்பாதிப்பது துரதிர்ஷ்டவசமானது.

நீங்கள் சேவையைச் செய்ய முடியாவிட்டால் தயவுசெய்து அதைச் செய்ய வேண்டாம். கால்நடை தன்னார்வலர்கள் , தனிநபர்களிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு அதை சேவை என்றும் அழைக்க வேண்டாம். சேவை மனப்பான்மையில் நான் என்ற சொல்லுக்கு இடமில்லை, நாம் என்ற சொல்லே சேவையாகும்.

சிலருக்கு நெருக்கடியில் கருணை மனப்பான்மை என்பது பணம் சம்பாதிப்பதற்காகவும் சுய விளம்பரத்திருக்காகவும் மட்டுமே . தங்களின் வார்த்தைகள் இரவு பகல் பாராமல் அயராது உழைத்து கொண்டு இருப்போர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் இருந்தது.

வரும் காலங்களில் தங்களின் சேவைகள் நம்பிக்கை ஊட்டும் விதமாக இருக்கவேண்டும் என்று வரலக்ஷ்மி சரத்குமாரின் காணொளி பதிவை நீக்குவதாக தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் தங்களின், இவ்வகையான கால்நடைகள் நலனில் நடைபெறும் ஊழல்களில் ஈடுபடுத்தாதீர் என்று கேட்டுக்கொண்டனர்”.

இப்பதிவின் அடிப்படையில் அந்த தொண்டு நிறுவனத்தினை தொடர்பு கொண்ட போது தங்களின் வருத்தத்தை குமுறினர், மேலும் இந்த ஊழலுக்கும் அவர்களுக்கும் எந்த விதமான சம்மந்தம் இல்லை என்று தெளிவு படுத்தினர். கடந்த 40 ஆண்டுகளாக அந்த தொண்டு நிறுவனம், சேவை மனப்பான்மையோடு மட்டுமே செயல்பட்டு வரும் நிலையில், இச்சம்பவத்தினால் அவர்கள் அதிரிச்சி அடைந்து உள்ளனர்.

இது போன்ற நபர்களின் லாப நோக்கத்திற்காகவும் , விளம்பரத்திருக்கும், இது போன்ற சிறு தொண்டு நிறுவனத்தினை களங்கப்படுத்துவது மிகவும் அறுவறுக்கத்தக்கதாகும். அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், மின்சார ஊழல் இதைக்கண்ட தமிழகத்திற்கு கால்நடை தீவனத்திலும் ஊழல் என்பது சற்று புதியதே.. !

திரைத்துறையினர் (ஒரு சிலரை தவிர) சேவைகளில், சுயநலமும், விளம்பரமும் பிரதிபலிக்கின்றது என்பது மேற்கூறிய கூற்றும் ஒரு சான்றே. தொண்டு செய்யும் அனைவரையும் குறை கூற இயலாது, எனினும் மக்கள் ஈகை செயல்களில் ஈடுபடும்போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய கட்டயத்திற்கான அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

Exit mobile version