கோவையில் பிரதம மந்திரியின் கடன் திட்டத்தின் கீழ் ரூ. 3,749 கோடி கடன் தொகையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில நாட்களுக்கு முன்னர் வழங்கினார். இதற்கு காரணம் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எடுத்த முயற்சிகள் தான். இதன் மூலம் கோவை மாவட்ட மக்கள் சுமார் 1 லட்சம் பேர் பயனடைந்துள்ளார்கள் .
கோவை கொடிசியாவில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கடன் வழங்கும் நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.
கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்புத் திட்டம், யோஜனா திட்டம், ஜன்தன் யோஜனா திட்டம், பயிர்க்காப்பீடுத் திட்டம், சுரக்க்ஷா பீமா யோஜனா திட்டம் போன்ற இந்த திட்டங்களின் கீழ் கடன் தொகை ரூ. 3,749 கோடி வழங்கினார்.
பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், பட்டதாரிகள் சுய தொழில் செய்யும் முனைவர்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்கள், மூத்த குடிமக்கள், சிறு குறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்படும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சுமார் 3,000 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிகளை கோவை மாவட்ட முன்னோடி வங்கி, கனரா வங்கி, மாநில வங்கிகள் குழுமம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பாஜகவின் வானதி சீனிசவாசன்MLA ஏற்பாடுகளை செய்தார்கள்.
கோவையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் இந்த முயற்சி தொடங்கப்பட்டது. இதற்கு வித்திட்டவர் வானதி சீனிவாசன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம் பேசி கோவை மாவட்டத்திற்கு பிரதம மந்திரியின் திட்டங்கள் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைத்தார். அதன் விளைவாக ரீடெயல் லோன் பிரிவில் 23,800 பேர் பயன்பெற்றுள்ளனர் அவர்களுக்கு ரூ.1,278 கோடி கடனுதவி வழங்கப்படுகிறது. மிகச்சிறிய அளவிலான தொழில்களை நடத்துவோருக்கு சொத்து பிணையமின்றி கடனுதவி வழங்கும் ‘முத்ரா’ திட்டத்தின்கீழ் 2,904 புதிய முத்ரா கடனுதவி ரூ.25.83 கோடி வழங்கப்படுகிறது.
ஸ்டேண்ட் அப் இந்தியா’ திட்டத்தின்கீழ் 18 பேருக்கு கிட்டதட்ட ரூ.4 கோடி கடனுதவி மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் 7,911 பேருக்கு ரூ.9.27 கோடி கடனுதவி வழங்கப்ட்டது. ‘எம்எஸ்எம்இ’ தொழிலுக்கு ரூ.1,043 கோடி, விவசாயிகளுக்கு 2,867 பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டது. மீன்வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்காக ரூ.30 கோடி வழங்கப்படுகிறது. 2,500-க்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழுவை சேர்ந்தவர்களுக்கு என ஒரே நாளில் மொத்தமாக ரூ.3,749 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.