கொங்கு தமிழச்சிக்கு கிடைத்த கௌரவம்! வானதி சீனிவாசன் தலைமையில் 11 பெண் மத்திய அமைச்சர்களுக்கு பாராட்டு விழா!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் 11 பெண் அமைச்சர்களுக்கு தேசிய மகளிர் அணி தலைவர் திருமதி வானதி சீனிவாசன் தலைமையில் பாராட்டு விழா பாஜக டெல்லி தலைமையகத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

பா.ஜ.க வில் அடிமட்ட தொண்டராக பணியாற்றி படி படியாக முன்னேறியவர் வானதி சீனிவாசன் அவர்கள் தனது 20 வயதில் ABVP அமைப்பில் இணைந்து 30 வருட காலமாக தேச பணியில் ஈடுபட்டுள்ளார். ஒரு தொண்டராக இணைந்து தமிழக பாஜக மாநிலத் துணைத்தலைவர் பொது செயலாளர் என உயர்ந்தவர்.

தற்போது கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினராகவும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியாகவும் இருக்கிறார் திருமதி வானதி சீனிவாசன். தமிழகத்தில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்துள்ளார். வானதி சீனிவாசன் கோவையில் மக்களோடு மக்களாக கலந்து அவர்களிடம் பேசி பழகி அவர்களின் குறைகளையும் கேட்டு அதற்கான நிவர்த்தி செய்யும் பணியையும் மேற்கொண்டு வந்தவர்.

நேர்மை, ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, தீயவைகண்டு அஞ்சுவது என்னும் நிறைகுணங்களால் முழுமை பெற்றுத் திகழ்பவர் வானதி சீனிவாசன் தெளிவான திட்டங்களையும், நெகிழ்வான அணுகு முறைகளையும் வகுத்துக் கொண்டு, செயலாற்றும் நேர்மையான சட்டமன்ற உறுப்பினரக வலம் வருகிறார் வானதி சீனிவாசன்.

இவர் ஒரு சாதனை நட்சத்திரம்.அக்கறை மிகுந்த சமூக செயற்பாட்டாளர். சாமானியர்களின் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். எத்தனை “கடுஞ்சொற்கள்” என்னும் “கற்களை” வீசித் தாக்கினாலும், அக்கற்களையே, தன் முன்னேற்றத்திற்ககான, படிக்கற்களாக மற்றிக் கொண்டு, வளரும், மனதிடம் மிக்க ஃபீனிக்ஸ் பறவையாக வலம் வருபவர் வானதி சீனிவாசன்.

நாடு முழுதுவம் பா.ஜ.க வின் மகளிர் அணியை பலப்படுத்துவதில் ஓய்வில்லாமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15 க்கும் மேற்பட்ட பயணங்களை மேற்கொண்டு நாடு முழுவதும் மகளிர் அணியினை பலப்படுத்தியுளளார். தனது சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் மக்கள் குறைகளை தீர்த்தும் வருகிறார்.

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்ற தகவல் கடந்த சில மாதங்களாக பரவிய நிலையில், ஜூலை 7 ஆம் தேதி மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் புதிதாக 43 மத்திய அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டார்கள். 43 அமைச்சர்களில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் ஒருவர். தமிழகத்தில் இருந்து தற்போது 3 பேர் தற்போது மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மீனாக்சி லேகி, அனுப்ரியா படேல், ஷோபா கரந்தலஜே உள்ளிட்ட 7 பெண்கள் புதிதாக அமைச்சர் பதவியேற்றுள்ளனர்.

ஏற்கெனவே அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, சாத்வி நிரஞ்சன் ஜோதி, ரேணுகா சிங் ஆகியோருடன் சேர்த்து பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக பிரதமர் மோடியின் முதல் ஆட்சியில், ஒன்பது பெண் அமைச்சர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

11 பெண் அமைச்சர்களுக்கும் பா.ஜ.க சார்பில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேசிய மகளிர் அணி தலைவர் திருமதி. வானதி சீனிவாசன் அவர்கள் தலைமையில் நடக்க வேண்டும் என கட்சி மேலிடம் கூறிவிட்டது. தேசிய அளவில் மிக பெரிய அங்கீகாரம் கொங்கு தமிழச்சிக்கு கிடைத்துள்ளது. இந்த பாராட்டு விழாவானது இன்று 27 ஆம் தேதி செவ்வாய் கிழமை 6 மணி அளவில் டெல்லியில் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற உள்ளது. சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய தலைவர் நட்டா கலந்து கொள்ள உள்ளார்.

Exit mobile version