காங்கிரசுக்கு காரியம் செய்யும் கமிட்டி – விஷயம் சீரியஸ் தானோ?

தலைமை நீதிபதிக்கு ஏன் கடிதம் எழுதினார்கள்? காங்கிரஸ் காரியம் கமிட்டி – விஷயம் சீரியஸ் தானோ?

கபில் சிபல், மனீஷ் திவாரி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 பேர், ‘காங்கிரஸ் தலைமையில் மாற்றம், கட்சி ஜனநாயகம்’ உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி சோனியாவுக்கு எழுதிய கடிதத்தை கசிய விட்டு, அதை இண்டியன் எக்ஸ்பிரஸ் ஞாயிற்றுக் கிழமை வெளியிட்டுள்ளது!

திங்கட் கிழமையே கமிட்டி கூட்டப்பட்டது (வர்ச்சுவல் கூட்டம்).

‘அந்த’ 23 பேரையும் காங்கிரஸ் காரிய(ம்) கமிட்டி வன்மையாக கண்டித்தது. அவர்களை பாஜக கைக்கூலிகள் என்றது. கபில் சிபல், “30 ஆண்டுகளாக காங்கிரஸுக்காக போராடிய என்னை பாஜக கைக்கூலி என்பதா?” என்று ட்வீட் போட்டார். பின்னர் அவரே, “ராகுல் காந்தி என்னிடம் பேசினார். என்னை பாஜக கைக்கூலி என்று சொன்னது உண்மையில்லை என்று உறுதி செய்தார். எனவே, முந்தைய ட்வீட் வாபஸ் பெறப்படுகிறது” எனக்கூறி அதை டிலீட் செய்தார்.

பர்க்காவின் மோஜோவுக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் அடிமை நிருபர் ராஷீத், “அந்த 23 பேரும் சோனியாவுக்கு மட்டும் எழுதவில்லை. 3 கடிதங்கள் எழுதியுள்ளார்கள். அதில் ஒன்று சோனியாவுக்கு. இரண்டாவது கடிதம் தலைமை நீதிபதிக்கு.” என்கிறார். (மூன்றாவது கடிதம் யாருக்கு என்று தெரியவில்லை).

“கட்சியில் ஜனநாயகம் இல்லை. கட்சி தலைமை அத்துமீறி செயல்படுகிறது” என குற்றம் சாட்டுபவர்கள், தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்கலாம். நீதிமன்றம் செல்லலாம். தலைமை நீதிபதிக்கு ஏன் கடிதம் எழுதினார்கள்? அவரால் இதில் தலையிட முடியாது. தனக்கு வந்த கடிதத்தை அவர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பலாம் அல்லது வழக்கு பதிய சொல்லலாம். இது தெரியாதவரில்லை வழக்கறிஞர் கபில் சிபல்…

தலைமை நீதிபதி கடிதம் லீக் ஆனால் மேலும் விவரங்கள் கிடைக்கலாம்.

‘காங்கிரஸ் தலைமை அத்துமீறல்கள்’ என்று எடுத்துக் கொண்டால்…

1, நேஷனல் ஹெரால்டுக்கு காங்கிரஸ் நிதியை வழங்கியது – சட்டப்படி குற்றம். இதை கட்சி முடிவெடுத்ததா?

2, தமிழக காங்கிரஸ் சொத்துக்களை ஆட்டையை போட்டது (ஆடிட்டர் குருமூர்த்தி ஏற்கனவே அது பற்றி புகாரளித்திருக்கிறார்).

3, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் 2008இல் காங்கிரஸ் ஒப்பந்தம் போட்டது கட்சியின் முடிவா?

4, இந்தியா விரோதி துருக்கியில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் தொடங்கியது கட்சியின் முடிவா அல்லது மைனோ முடிவா?

இன்னும் பல கேள்விகள்…

இவர்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதாமல் இருந்திருந்தால், இந்த காரிய கமிட்டி கூட்டத்தை வெறும் நாடகம் என்று எண்ணியிருக்கலாம். தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருப்பது விஷயத்தின் தீவிரத்தை காட்டுகிறது.

இவர்கள் அத்தனை பேரும் பல ஆண்டுகள் காங்கிரஸில் இருந்து கூட்டாக திருடியவர்கள். ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்து தப்பிக்கவும் முடியாது.

மைனோவை எதிர்த்தவர்கள் ஆயுள் குறைவது வரலாறு காட்டும் உண்மை.

வரும் காலம் சுவாரசியமாக இருக்க வாய்ப்பு. பாப்கார்ன் ???? ???? ???? வாங்கி வைத்துக் கொள்ளவும்!

https://twitter.com/BDUTT/status/1297938562596220928

கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் செல்வநாயகம்.

Exit mobile version