உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும் என பிரச்சார மேடையில் கூறியுள்ளார் தெலுங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி. பொதுவாக வேலை முடிந்தவுடன் கழற்றி விடுவது திமுகவின் பண்பு, அதாவது தேர்தல் இல்லாத சமயத்தில் ஈ.வே.ராமசாமி புராணம் பாடி கொண்டு இருப்பார்கள்.தேர்தல் என்று வந்துவிட்டால் ஈ.வே.ரா பற்றி ஒரு பேசமாட்டார்கள் பிரச்சாரத்தில் 80% இந்துக்கள் தி.மு.க ஆதரவாளர்கள் என கூறுவார்கள்.
தேர்தல் வரலாற்றில் திமுக ஒருபோதும் தனித்து தேர்தலை சந்தித்தது கிடையாது. கூட்டணி பலத்தினால்தால் இதுவரை வென்றுள்ளது. அதுமட்டுமில்லை பொய் வாக்குறுதிகள் பொய் பிரச்சாரங்கள் பத்திரிக்கைகளின் உதவி பணபலம் மூலம் தான் வென்றுள்ளது தி.மு.க. அதேபோல் தேர்தல் வரும் நேரத்தில் கூட்டணி கட்சிகளை அரவணைப்பதும் தேர்தல் முடிந்தபின் ஒதுக்குவதும் தான் திமுகவின் பாலிசி.
ஆனால் திமுகவின் பாலிசியையே எடுத்து, திமுகவிற்கே திருப்பி கொடுத்திருக்கிறது காங்கிரஸ் தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் முடியும் வரை, திமுக எவ்வளவு தான் தங்களை இழிவு படுத்தினாலும், அது எல்லாம் பொறுத்துக் கொண்டு முட்டுக் கொடுத்துக் கொண்டு இருந்தது காங்கிரஸ் !!தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டத்துக்கு தேர்தல் முடிந்து விட்டதால், இப்போது திமுகவின் தயவு காங்கிரசுக்கு சுத்தமாக தேவைப்படாது !!
அதனால் தேர்தல் முடிந்த கையோடு வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார்கள் அட மேகதாது அனையைக் கட்டுவோம் என்று கூறியதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்.நேரடியாக இப்போ திமுக அடிமடியிலேயே கை வைத்திருக்கிறது காங்கிரஸ் உதயநிதி ஸ்டாலின் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியிருக்கிறார்.
சனாதான தர்மத்தை பற்றி இழிவாக பேசியது தவறு என்றும்,அதனால் உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார் திமுகவை கூட்டணியில் வைத்துக்கொண்டு தமிழகத்தை தவிர வேறு எங்கும் வாக்கு வாங்க முடியாது என்பது காங்கிரஸுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதுவும் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய தி.மு.கவை அருகில் வைத்துக்கொண்டு, மற்ற மாநிலங்களில் மக்களிடம் மரியாதையை கூட எதிர்பார்க்க முடியாது என்பதையும் அவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.
அதனால்தான் திமுகவை கிடா வெட்டுவது போல வெட்டி விடலாம் என்று நினைத்து விட்டார்கள் 2026 தேர்தலில் விஜயுடன் கூட்டணி செல்லலாம் என காங்கிரசில் தற்போதே பேச்சுக்கள் தொடங்கிவிட்டதாக தெரிகிறது. தி.மு.கவை போல் அடுத்த பிரதமர் நான் தான் என விளம்பரம் செய்ய ஆளில்லை தமிழ்கத்தில் அண்ணாமலையின் விஸ்வரூப வளர்ச்சியால் திமுக அதிமுக கட்சிகளுக்கு பெரிய இடி இறங்கியுள்ளது. இனி அதன் மேல் சவாரி செய்தால் எடுபடாது என இந்த கோணத்தில் யோசிக்கிறார்களாம் காங்கிரஸ். எனவே கூட்டணி குறித்து தேர்தல் முடிந்த கையோடு பேச ஆரம்பித்துவிடுவார்கள்.
மத்தியில் பாஜக ஆட்சி என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தஞ்சம் அடைய வேற வழியில்லை. முதலில் யார் பாஜகவை நோக்கி வருகிறார்கள் என்பது போக போக தெரியும். திமுகவிற்கு பாஜகவுடன் கூட்டணி வைக்கவும் தயங்கமாட்டார்கள். அவர்கள் தேவைக்காக எந்த நிலைக்கும் செல்வார்கள் என்பது தமிழகம் அறிந்தது. ஆனால் பாஜக தமிழகத்தில் காலூன்ற வேண்டுமென்றால் அதற்கு பலமான சித்தாந்த ரீதியிலான எதிரி திமுக என்பதை உணர்ந்துள்ளதால் திமுக கூட்டணி என்பதை விரும்பமாட்டார்கள்.
என்னவோ எந்த ஊரிலும் யாரும் மதிக்காத காங்கிரசை, ஒரு பொருட்டாக மதித்து இங்க பத்து சீட்டு கொடுத்ததற்கு.எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் என்று நொந்து கொண்டிருக்கிறது திமுக. அது சரி ஏதாவது கொள்கையில் கூட்டணி வைத்திருந்தால் தானே இவர்களிடம் கருணையை எதிர்பார்க்க முடியும் இது காழ்ப்புணர்ச்சி கூட்டணி அல்லவா !!