பஞ்சாப்புக்கு கவுன்டவுன் ஸ்டார்ட்! மணிப்பூரில் காங்கிரஸ் கட்சி காலி! 8MLAக்கள் பாஜகவில் இணைகிறார்கள்!

மணிப்பூர் மாநிலத்தில் 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜகவுக்கு 21 இடங்கள் கிடைத்தன. சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகளின் எம்எல்ஏ-க்கள் ஆதரவோடு பாஜக ஆட்சி செய்து வருகிறது.

இந்த நிலையில் அனைவரும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா அரசியலை கவனித்து கொண்டு இருக்கிறோம்.ஆனால் மணிப்பூரில் சத்தமின்றி காங்கிரஸ் கட்சியை காலி செய்து கொண்டு இருக்கிறது பா.ஜ.க மணிப்பூர் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கொந்துஜாம் கோவிந்தாஸ் சிங் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினமா செய்து இருக்கிறார்.இவருடன் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய இருக்கிறார்கள்.

மணிப்பூர் சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த எம்.எல்.ஏக்களே 17 பேர் தான். இப்பொழுது அதில் 8 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைய இருக்கிறார்கள்.இதில் மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் கொந்துஜாம் கோவிந்தாஸ் சிங்
இருக்கிறார்

இவர் பிஷ்னுபூர் சட்டமன்ற தொகுதியின் செல்ல பிள்ளை பிஷ்னுப்பூர் தொகுதியில் தொடர்ந்து 6முறை வெற்றி பெற்று இருக்கிறார்.மணிப்பார் மாநில அரசியலில் செல்வாக்கு பெற்றவர். அடுத்த வருடம் பிப்ரவரியில் மணிப்பூர் மாநிலத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.காங்கிரஸ் எப்படியாவ து வெற்றி பெற்று விட வேண்டும் என்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் தான் கொந்து ஜாம் கோவிந்தாஸ் சிங்கை மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்தது.

அந்தோ பரிதாபமாக மணிப்பூர் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக இருக்கும் கொந்துஜாம் கோவிந்தாஸே பிஜேபிக்கு காங்கிரஸ் கட்சியையே காலி செய்து பாஜகவிற்கு வர இருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு மணிப்பூரிலேயே இந்த அடியை கொடுக்கும் பாஜக பஞ்சாபில் அளிக்க இருக்கும் அடி மிக அதிகமாக இருக்கும்.பஞ்சாப் காங்கிரஸ் கட்சிக்கு பாஜக அளிக்க இருக்கும் அடியின் டிரையல் இன்று மணிப்பூரில் ஆரம்பமாகி விட்டது.

Exit mobile version