தேசிய ஒற்றுமைக்கான கட்சி தானா காங்கிரஸ் என எண்ணும் வகையில், காஷ்மீரில்
மீண்டும் 370 ஐ கொண்டு வருவோம் கம்யூனிஸ்ட், தேசிய மாநாடு பிடிபி ஆகிய கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் அறிவித்துள்ளது.
தேசத்துக்கு ஆதரவான நிலைப்பாடுகளை காங்கிரஸ் எடுத்து பல காலங்கள் ஆகிவிட்டது. மாறாக தேசத்துக்கு எதிரான ஆபத்தான தேச ஒற்றுமைக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதில் தீய சக்திகளோடு போட்டி போடும் கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது. அதன் காரணமாக, பாதாள வீழ்ச்சிக்கு கட்சி சென்று கொண்டிருந்தாலும் கடந்த காலங்களில் இருந்து அது பாடம் கற்றுக்கொள்ளவில்லை. தற்போது அது, உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, மெகபூபா வின் மக்கள் ஜனநாயக கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இதர இரண்டு கட்சிகளுடன் இணைந்து ( ஆறு கட்சி கூட்டணி ) 370 அரசியலமைப்புச் சட்டத்தை மீண்டும் கொண்டுவர தாங்கள் அயராது உழைப்போம் என அறிவித்திருக்கிறது.
இதன் மூலம், பட்டியலின மக்களின் முன்னேற்றம் எங்களுக்கு முக்கியமில்லை, பெண்களின் சொத்துரிமை முன்னேற்றம் எங்களுக்கு முக்கியமில்லை, இந்திய ராணுவத்தினர் கொல்லப்படுவது எங்களுக்கு முக்கியமில்லை, இஸ்லாமிய ராஜ்யத்தை அமைப்பது தான் முக்கியம் என காங்கிரஸ் தெரிவித்திருப்பதாக,தலை நகரத்து அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
370 ரத்து செய்யப்பட்ட போது, அதற்கு ஆதரவான நிலைப்பாடு தான் எடுக்க வேண்டுமென காங்கிரசின் மூத்த தலைவர்கள் ஹோடா, மாதவராவ் சிந்தியா, ஜனார்த்தன் திவேதி, அபிஷேக் மனு சிங்வி, மிலின் தோரா உட்பட பத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூறிய போதும், அவர்கள் புறந்தள்ளப்பட்டு தேசவிரோத கருத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் நிலைப்பாடு எடுத்துக்கொண்டது.
இதன் மூலம், காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே வர்த்தக இணைப்பு இருக்கிறது என்று கூற்றுக்கும், தொழில் கூட்டணி இருக்கிறது என்று கூற்றுக்கும் காங்கிரஸ் கட்சி வலு சேர்த்திருக்கிறது. முன்னாள் உள்துறை அமைச்சரே இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பது மிகுந்த அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருக்கிறது.
காங்கிரஸ் இனி மாறாது, தேறாது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















