ராஜஸ்தானில் 25ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நட்டா பேசியதாவது: நிலக்கரி, காமன்வெல்த் விளையாட்டு என பல ஊழல்களை காங்கிரஸ் கட்சி செய்துள்ளது. ராஜஸ்தானில் அசோக் கெலாட் அரசு, முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் கூட ரூ.450 கோடி ஊழல் செய்துள்ளது.
அவரது சகோதரர் மானிய உரங்களை ஏற்றுமதி செய்துள்ளார், ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான அரசு ஒப்பந்தங்களை கைப்பற்றி தங்கள் வீடுகளில் பணத்தை நிரப்புகிறது. இவர்கள் ஊழல் தொடர்பான சாதனைகளை முறியடிக்கின்றனர். பெண்களுக்கு எதிரான கற்பழிப்புகள், பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் ராஜஸ்தான் மாநிலத்தில் தான் அதிகம் நடந்துள்ளன. மேடையில் பேச முடியாத அளவுக்கு பல சம்பவங்கள் இங்கு நடந்துள்ளன. என இவ்வாறு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நட்டா பேசினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















