தீப்பிடிக்கும் ரோம் அணைக்கும் மோடி-

உலகளவில் இப்பொழுது இத்தாலியில் தான் மிக அதிக அளவில் கொரானாவினால்
மக்கள் இறந்து கொண்டு இருக்கிறார்கள்.

இதனால் அங்குள்ள இந்தியர்களை மீட்கவும் இத்தாலிக்கு உதவவும் பல முயற்சியில் இறங்கியுள்ளது இந்திய வெளியுறவுத்துறை

ரோம் நகரமே கொரானாவினால் கிழித்து போட்ட துணியாக பல துண்டுகளாக சிதைந்து கொண்டு இருக்கிறது.

சிதைந்து கொண்டடு இருக்கும் இத்தாலியை மீட்டெடுக்கும் முயற்சியில் மோடி ஈடுபட்டதோடு அங்கிருக்கும் இந்தியர்களை தேடிப்படித்து அவர்களுக்கு
இந்திய தூதரகம் மூலமாக உணவளித்து இந்திய மருத்துவர்கள் மூலமாக மருத்துவ உதவிகளை செய்து அவர்களை இந்தியாவு க்கு அழைத்து வந்து கொண்டு இருக்கிறார்.


இத்தாலியை பற்றி சொல்லும் பொழுது ஒரு பழமொழி தான் அனைவருக்கும் நினை
வுக்கு வரும்.ரோம் நகரம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த மன்னன் என்கிற பழமொழி
யை சரியாக செயல்படாத ஆட்சியாளர்களை
நோக்கி கூறப்படுவது வழக்கமாக இருக்கிற து

நீரோ மன்னன் ரோமாபுரியை கிபி 54 ல்
ஆட்சி செய்ய ஆரம்பித்தான்அவன் ஆண்ட காலத்தில் கிபி 64ல் ஒரு பெரிய தீ விபத்து நடந்தது. இந்த தீயை அணைக்காது அப்பொ ழுது பிடில் வாசித்து கொண்டு இருந்தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறினாலும் அது உண்மையல்ல.

ரோம் நகரை புதுப்பிக்க நீரோ தான் தீ வை த்ததாகவும் அதனால் தான் உலக அதிசயமா ன கொலேசியம் கட்ட முடிந்தது என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.ரோம் நகர் தீப்பிடித்த வரலாற்றை நீரோ காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் யாரும் கூற வில்லை.

நீரோ இறந்து 150 ஆண்டுகளுக்கு பிறகு தான் ரோம் நகரம் பற்றி எரிந்த்தாக சிலரால்
எழுதப்பட்டது.நீரோ மன்னனுக்கும் யூதர்களு க்கும் ஆகாது நீரோவுக்கு மட்டுமல்ல எந்த
ஒரு ரோமானிய அரசனும் யூதர்களை விட்டு
வைத்ததில்லை.

இன்று யூதர்களின் நாடாகஇருக்கும் இஸ்ரேல் அப்பொழுது ரோமானியபேரரசின் கட்டுப்பா ட்டில் இருந்த பூமி தான்.அங்கிருந்து தான் ரோ மானியர்களால் யூதர்கள் வெளியேற்றப்பட்ட னர்

நீரோ மன்னன் யூதர்களை அடி பின்னி எடு த்து இருக்கிறார். ஆனாலும் எந்த ஒரு யூத அறிஞரும் நீரோவை பற்றி குறை கூறியதில்
லை.மாறாக கான்ஸ்டன்டைன் காலத்தில்
தான் நீரோவை பற்றி குறை கூற ஆரம்பித்தா ர்கள்

ரோமப் பேரரசின் முதலாம் கிறிஸ்தவ மன்ன ன் முதலாம் கான்ஸ்டன்டைன் தான். தன்னு டைய 40 வயதில் கிறிஸ்தவ ராக மாறி ரோம
புரி மக்களை கிறிஸ்தவர்களாக மாற்ற ஆரம் பி த்தார்.அதற்கு பிறகு தான் நீரோ ஒரு கொ டுங்கோலன் கிறிஸ்தவர்களை கொடுமை ப்படு த்தினான் என்று ரோம வரலாற்று ஆசி ரியர்கள் அள்ளி விட ஆரம்பித்தார்கள்.

இது எதற்காக கூறப்பட்டது என்றால் கிறி ஸ்தவர்கள் ரோம புரியில் கிபி முதலாம்
நூ ற்றாண்டிலேயே இருந்தார்கள் என்பத ற்காக திணிக்கப்பட்ட கட்டுக்கதை.ஏனென்றா ல் இன்றும் கூட இயேசு கிறிஸ்து என்பவர்
உண்மையில் இருந்தார் என்பதற்கு எந்த ஒரு வரலாற்று சான்றுகளும் கிடையாது.

கிமு 20ல் இருந்து கிபி 50 வரை ரோம ப்பேரர
சில் வாழ்ந்த யூத தத்துவ ஆசிரியர் பிலோ ஜுடாயஸ் ரோமாபுரியை பற்றியும் அப்பொழு து வாழ்ந்த மக்களிடம் இருந்த மத பழக்க வழ
க்கங்கள் பற்றியும் 8,50000 வார்த்தைகளில் கூறி இருக்கிறார். ஆனால் அதில் ஒரு வார் த்தை கூட இயேசு கிறிஸ்துவை பற்றியும்
கிறிஸ்தவ சமயம் பற்றியும் கூற வில்லை.

2 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் கிறி ஸ்தவ மதம் ரோமாபுரியில் பரவ ஆரம்பிக்கிற து.அப்பொழுது அங்கு செல்சஸ் என்கிற பகு த்தறிவாதி ஒருவர் இருந்தார். அவர் நம்ம கரு
ணாநிதி மாதிரி ஆள். ராமர் எந்த காலேஜில் படித்து ராமர்பாலத்தை கட்டினார் என்று சொ ல்ல முடியுமா?என்று கருணாநிதி கேட்ட பொ ழுது நாம் எப்படி கோபப்பட்டோமோ அதே மா திரி ஒரிஜன் என்கிற கிறி ஸ்தவ பாதிரியார் செல்சஸின் பகுத்தறிவு கேள்விகளால் கோ பப்பட்டார்.

செல்சஸ் என்னக்கேட்டார் தெரியுமா? இயேசு கிறிஸ்து எப்பொழுது பிறந்தார் எங்கு வளர்ந் தார் சிலுவையில் அறையப்பட்டு பின் எப்படி
உயிர்த்தெழுந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்
இருக்கிறது என்று காட்ட முடியுமா ? என்று
ரோமாபுரியில் பகுத்தறிவு பிரச்சாரங்களை மேற்கொண்டவர் செல்சஸ்.

இதற்கு ஒரிஜனால் எந்த ஆதாரமும் அளிக்க
முடியவில்லை.பிறகு அவரே இதை நிரூபிக்க எந்த ஆதாரமு ம் கிடையாது என்று ஒத்துக் க்கொண்டு ஜகாவாங்கி கிரேக்க ரோம கடவு ள்களை விட இயேசு கிறிஸ்துவின் கதை ஒ ன்றும் நம்பமுடியாதது அல்ல என்றும் ஆனால் அதை நிரூபிக்க வரலாற்று ஆதாரங்கள் இ ல்லை என்று கூறி ஜகா வாங்கியிருக்கிறார்

இதெல்லாம் எதற்கு கூற வருகிறேன் என்றா ல் நீரோ மன்னன் கெட்டவன் என்று ஒரு
குரூப் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார் கள் அவர்கள் யார் என்றால் கிறிஸ்தவ வரலா
ற்று ஆசிரியர்கள் .இவர்கள் இயேசு கிறிஸ்து
கதையையெல்லாம் உண்மையாக்க நீரோ
காலத்தில் கிறிஸ்தவர்கள் கொடுமை படுத்த ப்பட்டார்கள் என்று கூறி நீரோ மன்னன் ஒரு
கொடுங்கோலன் ரோம் நகரம் தீப்பிடித்த
பொழுது கூட கண்டு கொள்ளாமல் பிடில்
வாசித்தவன் என்று அள்ளி விட்டு விட்டார்கள்.

எங்கேயோ பிறந்து பஞ்சம் பிழைக்க இந்தியா வுக்கு வந்த மாக்ஸ்முல்லர் கால்டுவெல் போ ன்ற கிறிஸ்தவ ஆய்வாளர்கள் இந்திய மண் ணில் தங்களின் மதத்தை திணித்திட இந்தி
யாவில் இல்லாத ஆரிய திராவிட கதைகளை
புகுத்தியது மாதிரி ரோம பேரரசு கிறிஸ்தவ
மன்னர்களால் ஆளப்பட்ட பொழுது புகுந்ததுதான் ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்தான் என்கிற கதை.

சரிப்பா இப்பொழுது எதற்கு இந்த நீரோ மன்னன் கதையை இழுத்தாய் என்று நீங்கள்
கேட்கலாம். இந்த நீரோ மன்னனோடு தான் அடிக்கடி மோடியை ஒப்பிட்டு எதிர்கட்சிகள் பேசுவது வழக்கம்.

குஜராத் கலவரத்தில் இருந்து இப்பொழுது டெல்லி கலவரம் வரை மோடி செயல்பட வில்லை என்று நீரோ மன்ன னோடு ஒப்பிட்டு காங்கிரஸ் கோமாளிக்கூட்டம் கூறி வருகிறது.

ஆனால் மோடியோ இங்குள்ள இந்தியர்களை மட்டுமல்ல உலகில் இந்தியர்கள் எங்கிருந்தாலும் தேடி கண்டு பிடித்து காப்பாற்றி வருகிறார் என்பதற்கு கொரானா வினால் பாதிக்கப்ப ட்ட பல நாடுகளில் இருந்து இந்தியர்கள் தனி விமானங்களில் இந்தியாவுக்கு அழைத்து வர ப்படுவதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இதோ கொரானாவினால் தீப்பிடித்து எரியும் இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து 263 மாணவர்களை இந்தியாவுக்கு சிறப்பு விமா னம் மூலம் மோடி அரசு அழைத்து வருகிறது. அனே கமாக இன்று அவர்கள் தாய் மண்ணி ல் தடம் பதிக்க கூடும்

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version