சேலத்தில் இந்தோனேசியாவில் இருந்து மத பிரச்சாரத்திற்கு வந்த 11 முஸ்லிம்கள் கொரனோ சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி. ஈரோடு பகுதியில் தாய்லாந்திலிருந்து மத பிரச்சாரத்திற்கு வந்திருந்த 7பேரில் 2பேருக்கு கொரானா தொற்று உறுதி. பாட்னா மசூதியில் இத்தாலி நாட்டை சார்ந்த 14முஸ்லிம்கள் மதப்பிரச்சாரம் செய்ய வந்தவர்களுக்கு கொரானா நோய் தொற்று சோதனை.
இன்னும் இப்படி பல இடங்களிலும் பலர் இஸ்லாமிய, கிருஸ்தவ பிரச்சாரத்திற்கு வந்திருக்கலாம். அரசு சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். டூரிஸ்ட் விசாவில் வந்து மதபிரச்சாரம் செய்வது சட்டப்படி குற்றம். மதப்பிரச்சாரம் செய்ய மட்டுமே வந்தார்களா? அல்லது பயங்கரவாத செயல்களில் ஈடுபட வந்தார்களா என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும்.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் ஈரோடு ஆகிய மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் தாய்லாந்தில் இருந்து ஈரோட்டிற்கு கொரோனாவை கொண்டு வந்த 5 பேரிடம் இருந்து, 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பெரும்பாலும் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களில் வெளி நாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நோய் தொற்றை கொண்டு வந்தவர்கள் தான் இந்த நிலையில் கொரோனா அறிகுறியுடன் அரசின் மருத்துவமனை செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது காண முடிகிறது
சென்னை, காஞ்சிபுரம் ஈரோடு மாவட்டங்களை மற்ற மாவட்டங்களில் இருந்து தனிமைப்படுத்தி முடக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்ட நிலையில் ஈரோட்டிற்கு தாய்லாந்தில் இருந்து வந்த 5 பேர் கொண்ட குழுவினரால் கொரோனா தொற்று பரவியது எப்படி ? அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தாய்லாந்தில் இருந்து கடந்த வாரம் கோயம்புத்தூர் விமான நிலையம் வந்த 5 பேர் கொண்ட இஸ்லாமிய குழுவில் 3 இளைஞர்களும் 2 பெரியவர்களும் வந்தனர். அவர்கள் ஈரோட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் இருவர் மட்டும் தாய்லாந்து செல்ல கோயம்பத்தூர் செல்லும் போது விமான நிலையம், அவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் கொரோனா அறிகுறி தென்பட்டதால் தனிமைபடுத்தப்பட்ட சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அவர்களுடன் வந்த 3 இளைஞர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் இதற்கு ஒத்துழைக்க மறுத்து அடக்குமுறை என ஆவேசம் ஆனதாக வேதனை தெரிவிக்கின்றனர் அரசு அதிகாரிகள்.பெரியவர்கள் இருவருக்கும் கொரோனா தாக்குதல் இருப்பது ஆய்வில் உறுதியான நிலையில், கடந்த ஒரு வார காலத்தில் 5 பேரும் ஈரோட்டில் சென்று வந்த வணிக நிறுவனங்கள், சந்தித்த நண்பர்கள், அவர்களை அழைத்துச்சென்ற கார் ஓட்டுனர், அந்த கார் ஓட்டுனர் மூலம் தொடர்புடையவர்கள் என சுமார் 50 க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த நோய் கிருமி பரவியிருக்கலாம் என்ற அச்சத்தில் அவர்களை அடையாளம் கண்டு ஒவ்வொருவராக தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















