இந்தியாவில் ஏப்ரல் 15 பிறகு கொரோனா பாதிப்பு இப்படித்தான் இருக்கும் ! வெளியானது ஆய்வு முடிவு !

இந்தியாவில் தினமும் உயர்ந்து கொண்டே செல்லும் கொரானா நோயாளிகளின் எண்ணிக்கையை நினைத்து மக்களிடையே ஒரு வித பயம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கமாக இருந்தாலும் அடுத்த வாரத்தில் இருந்து அதாவது ஏப்ரல் 15 ல் இருந்து புதியதாக உருவாகும் எண்ணிக்கை வைரஸ் தொற்றின் எண்ணிக்கையானது குறைந்து விடும் என்று பல தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் இன்றைய நிலையை வைத்து ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டது ஒன்று தான் மிசிகன் யுனிவர்சிட்டி. அமெரிக்காவில் உள்ள மிசிகன் மாநிலத்தில் டெட்ராய்ட் மாவட்டத்தில் ஆன் அர்பர் நகரில் உள்ள உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகம் தான் தான் மிசிகன் பல்கலைகழகம்

இந்த பல்கலைக்கழகம் 1817 ல் ஆரம்பிக்கப்பட்டது சுமார் 200 ஆண்டுகளை கடந்தாலு ம்உலக அளவில் என்றும் டாப் தான்.எப்பொழுதும் முதல் 20 இடங்களுக்குள் தான் இருக்கும்.அறிவு சார்ந்த பாடங்களை படிக்க மிசிகன் பல்கலைக்கழகம் தான் பெஸ்ட்.

இந்தியாவில் இருக்கிற ஜே.என்.யூ வில் படித்த மாணவர்கள் மேல் படிப்புக்காக மிசிகன் பல்கலைக்கழகத்தில் அப்ளை செய்தால் யூ ஆர் நாட் எலிஜிபிள் பார் அவர் கேம்பஸ் செக்யூரிட்டி இந்த பல்கலைக்கழகத்தில் நீங்கள் அனுமதியில்லைஎன்று திருப்பி அனுப்பி விடுவார்கள். அந்த அமெரிக்காவின் மிசிகன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் அடுத்த வாரத்தில் இருந்து அதாவது ஏப்ரல் மாதம் 15ல் இருந்து கொரானா தொற் று குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து ஊரடங்கு கடைப்பித்தததிலும் மற்றும் மேலும் கடைபிடித்தால் கொரோன பாதிப்பு குறைகிறது என அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆய்வை யார் நடத்தியது தெரியுமா? கொல்கத்தாவில் பிறந்த ஒரு இந்தியர்.பெயர் பிரமர் முகர்ஜி. மிசிகன் பல்கலைக்கழக பயோ ஸ்டேடிஸ்டி க்ஸ் அதாவது உயிரியியக்கவியல் துறை யில் புரபசராக இருக்கிறார்.நாடு விட்டு நாடு சென்றாலும் தாய் நாட்டை பற்றிய அவரின் சிந்தனையும் ஆராய்ச்சியும் பாராட்டுக்குரியது.

Exit mobile version