கொவிட்-19ஐ கட்டுப்படுத்துவது குறித்து ஜப்பான் ராணுவ அமைச்சரிடம் தொலைபேசியில் உரையாடினார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

ஜப்பான் ராணுவ அமைச்சர்  திரு. டாரோ கோனோவுடன், நமது பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் இன்று தொலைபேசியில் உரையாடினார்.

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான தங்களின் எதிர்வினைகள் குறித்து இரு பாதுகாப்பு அமைச்சர்களும் விவாதித்தனர். கொவிட்-19க்கு எதிரான சர்வதேச முயற்சிகளுக்கு இந்தியாவின் பங்களிப்புக் குறித்து திரு. கோனோ டாரோவுக்கு எடுத்துரைத்த திரு. ராஜ்நாத் சிங், பெருந்தொற்றுக்கு எதிரான உலகளாவியப் போரில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான துறைகள் குறித்து ஆலோசித்தார். கொவிட்-19க்கு பிறகு எழும் அதன் தொடர்பான சவால்களைச் சமாளிப்பதற்கு, இதர நாடுகளுடன் இரு தேசங்களும் இணைந்து பணியாற்ற, இந்தியா-ஜப்பான் சிறப்பு வியூகமும், சர்வதேசக் கூட்டுறவும் நல்ல அடித்தளத்தை அமைத்துள்ளதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

இந்தியா-ஜப்பான் சிறப்பு வியூக சர்வதேசக் கூட்டின் கட்டமைப்புக்குக் கீழ், இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான தங்கள் உறுதியை இரு அமைச்சர்களும் தெரிவித்துக் கொண்டனர்.

Exit mobile version