கொரோனா தடுப்பு மருந்து விரைவில் வருகின்றது மத்தியமைச்சர் தகவல்…

மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் நேற்று பகிர்ந்த காணொளியிலிருந்து ஒரு பகுதி… தடுப்பு மருந்து பற்றி.

கேள்வி: தடுப்பு மருந்து தயாரிக்க ஆண்டுகள் ஆகும். அப்படியிருக்க, இப்போது வரவிருக்கும் தடுப்பு மருந்துகளை எப்படி நம்புவது? அவை பாதுகாப்பானவை தானா? அல்லது மக்கள் சமூக தடுப்பு மருந்தை ( social vaccine – சமூக இடைவெளி, முக கவசம் அணிதல், சுகாதார நடைமுறை போன்றவை) இப்போதைக்கு கடைப்பிடித்து சில வருடங்களுக்கு பிறகு தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்வதா? உங்கள் அறிவுரை என்ன?

டாக்டர் பதில்: முதலில், தடுப்பு மருந்து அறிமுகத்துக்கு நாள் ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. தடுப்பு மருந்து பரிசோதனைகளில் எந்த குறுக்கு வழியும் பின்பற்றப்படாது (no corners will be cut) என்பதை என் அமைச்சரவை சார்பாகவும், பிரதமர் சார்பாகவும் உறுதிபடக் கூறிக் கொள்கிறேன். தடுப்பு மருந்தின் பாதுகாப்பு தன்மையும் திறனும் உறுதி செய்யப்பட்ட பிறகே அது மக்கள் பயனுக்கு வழங்கப்படும். உங்கள் அரசையும், சுகாதார அமைச்சரையும் நம்பவும்.

கேள்வி: டிசம்பரில் தடுப்பு மருந்து வரலாம் என்கிறீர்கள். அந்த தடுப்பு மருந்தில் நம்பிக்கை இருந்தால் நீங்களும் எடுத்துக் கொள்வீர்களா? பிற கேபினட் அமைச்சர்களுக்கும் பரிந்துரைப்பீர்களா அதை எடுத்துக் கொள்ள?

பதில்: பரிசோதனைகளுக்கு பின் அறிமுகம் செய்யப்படவிருக்கும் தடுப்பு மருந்து பாதுகாப்பானது தானா என்ற அச்சம் உங்கள் மனதில் இருக்குமானால், அதன் காரணமாக நீங்களும் நாட்டு மக்களும் சந்தேகப்படுவீர்களானால், அதை நீக்க தடுப்பு மருந்தை முதலில் நான் எடுத்துக் கொள்கிறேன்.

பொதுவாக, தடுப்பு மருந்து அறிமுகமானதும், யாருக்கேல்லாம் அவசரமாக அந்த மருந்து தேவைப்படுமோ (மருத்துவர்கள், உதவியாளர்கள், எதிர்ப்பு சக்தி குறைவோனோர் உள்ளிட்டோர்) அவர்களுக்கு முதலில் தரப்படும். நான் அந்த பிரிவில் வரவில்லை.

என்றாலும், மக்களுக்கு நம்பிக்கை வர நான் முதலில் அந்த மருந்தை எடுத்துக் கொள்வேன்.

For full interview: https://youtu.be/wkms035Hlb0
Grateful to thousands of you who wrote to me for #SundaySamvaad ! Great to have started a 2-way communication with social media friends. Learning a lot from the conversations. Hope we can keep up & further strengthen the dialogue


https://twitter.com/drharshvardhan/status/1305067117172072449

Exit mobile version