சென்னை புரசைவாக்கம், வில்லிவாக்கம், ரெட்ஹில்ஸ் ஆகிய இடங்களில் இயங்கி வரும் “மெட்ராஸ் சூப்பர் ஸ்டோர்ஸ்” துணிக்கடை மற்றும் “ஆதிநாத் ஜெயின் டிரஸ்ட்” ஆகியவை இணைந்து சென்னையில் கொரோனா நிவாரண உதவிகளை செய்து வருகின்றன.
எந்தவிதமான இன, மொழி, மத, பாகுபாடுகளும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த நிவாரண உதவிகளை அவர்கள் தொடர்கின்றனர்.
தினமும் 3,500 பேருக்கு மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கி வருகின்றனர். தூய்மையான குடிநீரும் வழங்கப்படுகிறது.
சென்னையில் உள்ள ஏழைகள், முதியோர்கள், ஊனமுற்றோர் போன்றவர்களுக்கு, அவர்களின் இருப்பிடம் தேடி சென்று உதவி வருகின்றனர். மேலும் இரவு, பகல் பாராமல் பணியாற்றிவரும் காவல்துறையை சேர்ந்தவர்களுக்கும், மாநகராட்சி ஊழியர்களுக்கும் உணவு வழங்கப்படுகிறது.
இந்த கொரோனா நிவாரண பணியில் “மெட்ராஸ் சூப்பர் ஸ்டோர்ஸ்” ஊழியர்கள் உள்பட 350-க்கும் அதிகமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்த நிவாரண உதவியானது ஊரடங்கு முடிந்து, இயல்பு நிலைக்கு திரும்புவது வரை தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
“மெட்ராஸ் சூப்பர் ஸ்டோர்” துணிக்கடை மூலம் செய்யப்பட்டு வரும் மனிதநேயமிக்க இந்த நிவாரண சேவையை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். அதேநேரம் தமிழகத்திலுள்ள மற்ற துணிக்கடைகளும், நகைக்கடைகளும், இதர கடைகளும், மெட்ராஸ் சூப்பர் ஸ்டோரை போன்று கொரோனா நிவாரண உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.பாஜக மாநில இளைஞரணி செயலாளர் ராகுல் தினேஷ் சுரனா அவர்களின்கடை தான் இந்த மெட்ராஸ் சூப்பர் ஸ்டோர் ஆகும்.