இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் சற்று அதிகரித்து வருகிறது. இதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை முன்னெடுத்து வருகிறது. முக்கியமாக நாடு முழுவதும் 72 மாவட்டங்களின் எல்லைகளை மூட உத்தரவிட்டுள்ளது’
ஆனால் மக்களோ மாநில மத்திய அரசின் ஆலோசனைகளை மதிக்காமல் இருந்து வருகின்றனர் இது குறித்து பிரதமர் மோடி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்
அவர் பதிந்துள்ள டீவீட்டில்
கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அதன் தீவிரத்தை உணராமல், அலட்சியமாக மக்கள் வெளியே செல்கின்றனர். தயவுசெய்து வெளியே செல்லாமல், உங்களையும் பாதுகாத்து, உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்திருங்கள். மக்கள் உரிய விதிமுறையை பின்பற்ற மாநில அரசுகள் விதிகளை கடுமையாக்க வேண்டும். இவ்வாறு தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.