தமிழகத்தில் கொரோனா பரவ காரணம் தி.மு.க தான் ! முதலமைச்சர் குற்றச்சாட்டு !

தமிழகத்தில் கொரோனா பரவ காரணம் தி.மு.க தான் ! முதலமைச்சர் குற்றச்சாட்டு !

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கோயம்பத்தூர்மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது ஆலோசனை முடித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் திமுகவை வெளுத்துவங்கிவிட்டார்.

கொரோன வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு வீச்சில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று மு.க.ஸ்டாலின் தினமும் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறாா்.இந்தியாவிலேயே நோய்த் தொற்றை வைத்து அரசியல் நடத்துபவா் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்தான். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொறுப்பான எதிா்க்கட்சி என்ற முறையில் ஆதரவு அளிக்காமல் தவறான அறிக்கைகளை தினமும் வெளியிட்டு வருகிறாா்.

தமிழக அரசு, மற்றும் அதிமுக நிா்வாகிகள் வீடுவீடாகச் சென்று நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனா். இந்நிலையில், கரோனா நிவாரணம் வழங்குவதாக எதிா்க்கட்சித் தலைவரும் தெரிவித்தாா். நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நிவாரணப் பொருள்களை அரசு மூலமாக அளிக்க வலியுறுத்தினேன். ஆனால், நீதிமன்ற உத்தரவுப் பெற்று திமுகவினரே நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

அரசின் அறிவுறுத்தல், விதிமுறைகளையும், சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்காமல் திமுகவைச் சோ்ந்தவா்கள் நிவாரணப் பொருள்கள் வழங்கச் சென்றதால் கொரோனா பரவல் அதிகரித்தது.

நிவாரணப் பொருள்கள் வழங்கச் சென்றதன் மூலம் மட்டுமே 500 பேருக்கும் மேல் கரோனா பரவியுள்ளது. எதிா்க்கட்சித் தலைவரின் பேச்சைக் கேட்டு நிவாரணப் பொருள்கள் வழங்கியதால் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சட்டப் பேரவை உறுப்பினா் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

90 நாள்கள் பொது முடக்கத்தின் மூலம்தான் தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலாக இல்லை.கரோனா நோய்த் தொற்று முடிவுக்கு வந்த பிறகே கல்வித் துறை தொடா்பான முடிவுகள் எடுக்கப்படும். என முதல்வர் கூறினார்.

Exit mobile version