இன்னும் சில தினங்களில் பல அமைச்சர்களின் ஊழல் வழக்குகள் தினசரி விசாரனைக்கு வர இருக்கும் நிலையில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் தனது பதவியை இன்று காலை ராஜினாமா செய்த விஷயம் தான் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆட்சி அமைந்தவுடன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர் ஆர்.சண்முகசுந்தரம். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் இரண்டரை ஆண்டுகளாக அரசு தலைமை வழக்கறிஞராக பதவி வகித்து வந்த நிலையில் தற்போது ராஜினாமா செய்வதாக அறிவித்து இருக்கிறார்.
இவர், 1989 முதல் 1991வரை திமுக ஆட்சியில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றியவர். 1996 முதல் 2001 வரை தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக பதவி வகித்துள்ளார். 2002 முதல் 2008 வரை ராஜ்யசபா எம்.பி.யாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் ஆர். சுண்முக சுந்தரம் தனது பதவியை தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகியுள்ளார்.
ஆர் சண்முகசுந்தரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே ராஜினாமா முடிவை முதல்வர் முக ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி வழக்கு பொன்முடி வழக்குகள் அப்போது இருந்த காரணத்தினால் ராஜினாமா செய்ய வேண்டாம் என அரசு வட்டரங்கள் , முதலமைச்சர் ஸ்டாலின்தான் சிறிது காலம் தாமதிக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் வருகின்றன.
இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு அவர் ராஜினாமா முடிவை அறிவித்து இருக்கிறார். ஆர் சண்முகசுந்தரத்தின் இந்த ராஜினாமா முடிவிற்கான காரணம் என்னவென்று வெளியில் சொல்லவில்லை. 1995 ஆம் ஆண்டு மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக டான்சி நிலம் அபகரிப்பு வழக்கை தொடர்ந்தவர் சண்முகசுந்தரம் தான்.
மேலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளில், தி.மு.க., அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். அ.தி.மு.க.,வின் பன்னீர்செல்வம், வளர்மதி ஆகியோரும் விடுவிக்கப்பட்டனர்.
இவர்களை விடுவித்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ஆய்வு செய்யும் விதமாக, சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறு விசாரணைக்கு எடுத்தார். திமுக மற்றும் முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்குகள் இன்னும் சில தினங்களில் விசாரணைக்கு வர உள்ள நிலையில்
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் தனது பதவியை இன்று காலை ராஜினாமா செய்த விஷயம் திமுக தரப்பில் பெரும் பின்னடைவு என்கிறார்கள். திமுகவினர் ஊழல் வழக்குகளை எப்படி கையாள போகிறது என்று அமைச்சர்கள் குமுறலில் உள்ளார்களாம்